Monday, May 18, 2009

கறுப்பு தினம்!

மே 18, 2009
கறுப்பு தினம்..
தமிழனின் உரிமையின்
இறப்பு தினம்..!

ஒற்றுமை பலத்தை
உணராத இனத்தின்
வெற்று தினம்..

முப்பத்தேழு ஆண்டுகள்
முன்னேறிய பாதையை
மூழ்க வைத்த
முதல் தினம்..

கல்லடி பட்ட
காக்கைகள் போல்
எங்கு நோக்கினும்
குண்டடி பட்ட
யாக்கைகள்!

கறுப்பு நிறமென்பதால்..
தமிழனின்
உணர்ச்சிகள் கூட
கறுமையாக்கப் பட்டுவிட்டது..!

விழி தமிழா..!

இனியாவது..
ஒற்றுமை பலத்தை
உணர்ந்து கொள்..!

ஈழச் சோதரர்கள்
ஈமச் சடங்குகள்
நம் இனத்தின்
பிரிவினைக்கு
கொள்ளி வைக்கட்டும்..!

ஈழத் தமிழனின்
கதறல்..
‘தமிழன்’ காதுகளில் கூட
கேட்கவில்லையாம்..!

தமிழா..

இனியாவது..
காதுகளோடு
கண்களையும்
திறந்து வை...

உணர்ச்சிவயப் படுவதை
மட்டும்
உணர்ச்சியோடு செய்யாதே..

உண்மைகளை புரிந்துகொள்..
உரிமைகளை புரிந்துகொள்..

ஒற்றுமை இழந்து நின்றால்
உள்ளாடைகள் கூட
களவு போய்விடும்..

இனியாவது..
ஒற்றுமை பலத்தை
உணர்ந்து கொள்..!
  • K.கிருஷ்ணமூர்த்தி

14 comments:

supersubra said...

எங்கள் உணர்வுகள் உரிமைக்குரல்கள் அரசியல் பண நாயகத்தின் பிடியில் அடிமை பட்டு கிடக்கின்றன. நாங்களே அடிமைகள். எங்கள் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்குகிறோம். விடியலின் குரல் என்றாவது ஒரு நாள் துளிர்க்கும் என்ற நீங்காத நம்பிக்கையில்.

கிருஷ்ணா said...

தோழரே.. உங்களின் உரிமைக் குரல் கேட்டு எங்களின் உள்ளத்தில் உதிரம் கொட்டுகிறது. இறைவனை உருகி பிரார்த்தனை செய்கிறோம்.. அந்த விடியலின் குரல் சீக்கிரம் துளிர்க்க.. சூரியனாய் எரிக்க..

சதீசு குமார் said...

உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் அண்ணன் பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார் என்று உள்மனம் கூறுகிறது நண்பரே. அவ்வெண்ணம் பொய்த்துவிடக்கூடாது என்று இறைவனைப் பிராத்திக்கிறேன். தமிழ் குமுகாயம் கண்ட சிறந்த தலைவர்களின் கூட்டத்தில் அண்ணன் பிரபாகரன் தனித்து ஒளிவீசக் கூடிய ஒரு சிங்கம். அவரை விரைவில் நாம் இழந்துவிட்டோம் என்று நம்ப மறுக்கிறது ஒவ்வொரு தமிழனின் மனமும். தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு கேட்டு அண்ணன் முன்னெடுத்துவைத்த போராட்டமானது தொடர்ந்து நடைப்பெற வேண்டும் என்ற எண்ணம் மேலும் வலுக்கிறது.

கிருஷ்ணா said...

உண்மை நண்பரே, சூரியனை சுட்டு விட்டோம் என்று கொக்கரிக்கின்றன நயவஞ்சக நரிகள்.. அண்ணன் பிரபாகரன் இன்றும் இருக்கிறார், என்றும் இருப்பார். இனியாவது உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.. சீனாவில் இருந்து வரும் எந்த பொருளையும் வாங்கக் கூடாது. தமிழின படுகொலையை கண்டுகொள்ளாத எந்த நாடுகளின் பொருளையும் வாங்கக் கூடாது.. இது நடக்குமா நண்பரே.. ?!

சதீசு குமார் said...

இனி சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை நான் வாங்கப் போவதில்லை. நம் மலேசிய வலைப்பதிவர்கள் அனைவரும் இவ்விடயம் குறித்து ஒருமித்த தீர்மானம் கொண்டுவர வேண்டும்!

கிருஷ்ணா said...

மலேசிய தமிழ் வலைப்பதிவர்களோடு இணைந்து உலகளவில் வாழும் அனைத்து தமிழ் வலைப்பதிவுகளிலும் 'BOYCOT CHINA' என்ற வாசகங்களை இடம் பெறச் செய்ய வேண்டும். நமது பொருளாதார பலத்தை அவர்களுக்கு காட்ட வேண்டும்..!

tamilvanan said...

உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் அண்ணன் பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார் என்று உள்மனம் கூறுகிறது நண்பரே. அவ்வெண்ணம் பொய்த்துவிடக்கூடாது என்று இறைவனைப் பிராத்திக்கிறேன்.

சிவ‌னேஸ் said...

"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே, வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே என்று அன்றே பாடினான் ஒரு கவிஞன், கருணா எனும் கயவன் அன்று சீர்குலைத்தான், இன்று த‌மிழின‌மே க‌ண்ணீர் சிந்துகிறது நிலைகுலைந்து, ஆனால் இவ‌ர்க‌ளால் மாவீர‌ன் பிர‌பாக‌ர‌னின் நிழ‌லைக்கூட‌ நெருங்க‌முடியாது!

வேடிக்கை மனிதன் said...

ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவமுடியாது இது பெரியார் சொன்னது.

அமாம் நீங்கள் சிங்களவனிடம் அடிமைப் பட்டுக்கிடக்குறீர்கள், நாங்கள் சொந்த இனத்திடமே (அரசியல் வாதிகளிடம்)அடிமைப்பட்டுக்கிடக்கிறோம்.

காலம் ஒருநாள் மாறும் என்பதைவிட நாம் மாற்ற முயற்சிப்பதே தக்கது.

கிருஷ்ணா said...

தமிழ்வாணன் அவர்களின் பிரார்த்தனை.. இந்த உலகில் வாழும் மொத்த தமிழர்களின் பிரார்த்தனையாகட்டும்! இறை என்ற ஒன்று உண்டென்றால்.. இலங்கையில் ஒரு நாள் அராஜகம் அழிந்து மனிதம் மலரும் என நம்புவோம்..!

கிருஷ்ணா said...

சிவனேஸ், அந்த கருணாவின் முகத்தில் சரித்திரம் காரி உமிழும்! அவன் சந்ததி முழுக்க அந்த பழி சேறும்!

கிருஷ்ணா said...

வேடிக்கை மனிதன்.. உடலால் மட்டுமல்ல.. சிந்தனையாலும் நம்மில் பலர் இன்னும் அடிமைகளாய் இருப்பது உண்மையிலும் உண்மை.. அதை மாற்றும் பொறுப்பு நம் போன்ற இளைஞர் கைகளில்..

tamilvanan said...

தலைவர் நிச்சயமாக நலமாக இருக்கிறார் என்று நம்பிக்கையோடு இருப்போம். இனி தன் மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் புலியாக மாறுவான். எப்போதெல்லாம் வாய்ப்பு கிட்டு கின்றதோ அப்போதெல்லாம் நம் இனத்திற்கு எதிரானவர்களை ஒழிப்பதற்கு பயன்படுத்தி கொள்ள (கொல்ல)வேண்டும். முட்டாள் சிரி லங்கா அரசாங்கம் சுயமாக வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்து கொள்கிறது. (ஒரு வேளை உலக நாடுகளில் இருந்து பணம், உதவி பெற அல்லது கடன் வாங்க ஒரு வழியோ ) . உண்மை போராட்டம் ஒய்ந்ததாக வரலாறு இல்லை. சரியாகச் சொன்னால் இனிமேல்தான் போராட்டம் திட்டமி்ட்டு வெவ்வேறு வழிகளில் அல்லது வெவ்வேறு விதங்களில் தொடரும். சிரி லங்கா அரசு ஈழத் தமி்ழர்களை மட்டுமல்ல உலக தமி்ழர்கள் அனைவரையும் எதிரிகளாக ஆக்கி கொண்டது மாபெரும் அடி.

rahini said...

arumai

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs