Wednesday, June 3, 2009

ஆலமரம்..!

சுட்டெறிக்கும்
சூரியனை
சுட்டுவிட்டனரா..?

சுட முடியுமா
என்
சூரியனை..?

விண்ணதிர
முழக்கமிட்ட
வேங்கையை
வீழ்த்திவிட்டனரா..?

சாத்தியம்தானா..
சிறு நரிகளுக்கு
அது?

ஈழத் தமிழனின்
தன்மானம்
காக்க வந்த
தருமனை..
தகர்த்து விட்டனரா..?

தாங்குவாளா
பூமி மாதா..?
பூகம்பம் வந்திருக்காதா
இன்னேரம்
அந்த இடுகாட்டில்..!

போர் முடிந்துவிட்டதென
போலியாய்
புலம்புகிறான்
இராட்சஷ பாக்சே!

ஒவ்வொரு முடிவிலும்
ஒரு
தொடக்கம் இருக்கும்..

ஒவ்வொரு அழிவிலும்
ஒரு
அரும்பு முளைக்கும்..


ஒவ்வொரு இருட்டிலும்
ஒரு
விடியல் இருக்கும்..

ஒவ்வொரு மரணத்திலும்
ஒரு
விடுதலை இருக்கும்...!

அன்று நடந்த
அந்த,
ஒவ்வொரு கொடூரத்திலும்
ஒரு
விளைவு இருக்கும்..!!!

எங்கள் புலிகள்,
வீரமரணத்தில்
நிம்மதியாய்
நித்திரை கொண்டனர்..

அடே,
இராட்சச பாக்சேவே..!
ஜெயித்ததாய் பிதற்றினாலும்..
பீதியில்
உன் இரவுகள்
நித்திரை இழக்கும்..!!!

இது
இறங்கற் பா அல்ல..
எழுச்சிப் பா..!

பிரபாகரன்
மரமல்ல..
விருட்சம்..

பல கோடி தமிழர்களின்
இதய விழுதுகள்
தாங்கி நிற்கும்
ஆலமரம்..!

தமிழ் விழுதுகள்
தாங்கி நிற்கும் வரை..
அந்த தலைவனுக்கு
வீழ்ச்சி இல்லை..!!!

  • K.கிருஷ்ணமூர்த்தி


17 comments:

Anonymous said...

Nice one.

Keep it up.

- Kiri

Tamil Usi said...

உலகமும் தமிழ் ஈழ விடுதலை புலிகளும்.
http://www.tamilusi.blogspot.com/

கலையரசன் said...

கொப்புரான நல்லாருக்கு...! ம்ம் நிறைய எழுதுங்க!

வேடிக்கை மனிதன் said...

தமிழன் நடந்தவற்றை எல்லாம் மறக்காமலிருக்கவும், சோர்ந்து போய்விடாமல் இருக்கவும் இது போன்ற எழுச்சி மிக்க கவிதைகள் தேவை

கிருஷ்ணா said...

நன்றி திரு கிரி அவர்களே.. மீண்டும் வருக..!

கிருஷ்ணா said...

தமிழ் ஊசிக்கும் நன்றி, உங்கள் வலைப்பூவையும் வலம் வந்தேன்.. அறிமுகத்திற்கும் நன்றி!

கிருஷ்ணா said...

வாங்க கலையரசன்..! நச்சுன்னு பின்னூட்டம் வழங்கியதற்கும்.. ரசித்தமைக்கும்.. நன்றி!

கிருஷ்ணா said...

வேடிக்கை மனிதன் என்று சொல்லிக் கொண்டு மிகவும் சீரியஸாக எழுதும் நண்பருக்கும் வணக்கம்! என் கவிதைகள்.. வாசிக்கும் ஒரே ஒருவரின் இதய இரணத்திற்கு மருந்தானாலும்.. அதுவே எனக்கு பெரு மகிழ்ச்சி! உங்களைப் போன்ற நல்ல சமுதாய எழுத்தாளர்களின் ஆதரவுக்கும் எனது நன்றிகள்!

சிவனேசு said...

ஒவ்வொரு இருட்டிலும்
ஒரு
விடியல் இருக்கும்..

வைர வரிகள்!
துக்கத்தால் இருண்டிருக்கும் இதயங்களெல்லாம் அந்த விடியலுக்காகத்தான் காத்திருக்கின்றது நண்பரே!

கிருஷ்ணா said...

விடியும் நண்பரே..
நிச்சயம் விடியும்!
விடியாவிட்டால்..
சூரியனும் செத்து மடியும்!

tamilvanan said...

இந்த கவிதயை எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து உலங்கெங்கும் செய்தியாய் அறிவிக்க வேண்டும்.

கிருஷ்ணா said...

நன்றி நண்பர் தமிழ்வாணரே..! தேவை என்றால்.. இந்தக் கவிதையை யார் வேண்டுமானாலும் அவரவர் வலைப்பூவில் மறு பதிவு இட்டுக் கொள்ளலாம்.

கோவி.மதிவரன் said...

சிறப்பான கவிதையை வடித்திருக்கின்ற தங்களுக்குப் பாராட்டுகள்.

தொடர்ந்து எழுதுங்கள்

கிருஷ்ணா said...

பாராட்டுக்களுக்கு நன்றி திரு கோவி மதிவரன் அவர்களே..

து. பவனேஸ்வரி said...

சுட்டெறிக்கும்
சூரியனை
சுட்டுவிட்டனரா..?

தொடக்கமே அருமை..முதல் கண்ணியிலேயே பதிலும் கிடைத்துவிட்டது. சூரியனைத் தொட்டவனும் இல்லை, பிரபாகரனைச் சுட்டவனும் இல்லை! எழுச்சிமிக்க கவிதை! தொடருங்கள்...

கிருஷ்ணா said...

நன்றி தோழீ! நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறீர்கள்.. பின்னூட்டுக்கு நன்றி.. அண்ணன் பிரபாகரன் மட்டுமல்ல.. ஒரு சமுதாயத்துக்காக குரல் கொடுக்கும் அனைத்து தலைவர்களும் தனி மனிதர்கள் அல்ல..! அவர்களை சாய்ப்பது என்பது.. இமயமலையை சாய்ப்பது போன்றது!

Anonymous said...

No one can kill HIM till he meet his achievements..u r certainly right mr krishna..HE is ALAMAARAM

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs