Saturday, June 20, 2009

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

கவிஞர் தாமரை அவர்கள் வழங்கிய சாபம் ஒவ்வொரு தமிழனின் சாபமாக ஆகட்டும்!
இந்த கவிதையை வாய்விட்டு உரக்கமாகப் படியுங்கள் தமிழர்களே..

கவிஞர் தாமரையின் பேட்டி, ஒலி வடியில் இங்கே கேட்கலாம்..
http://www.tamilnaatham.com/audio/2009/jun/interviews/thamarai_20090617.m3u


கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
…………………………………………………………………………….
பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

ஆக்கம் : கவிஞர் தாமரை

(முதன் முதலாக இந்த வலைப்பூவில் நான் எழுதாத கவிதையை இடுகிறேன். இது என் இனத்தின் சாபமாக இருக்கவேண்டும் என்பதால்.. இந்த கவிதையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த தோழி சுமி ராமுக்கும் கோடி நன்றிகள்..!!)

40 comments:

அப்பாவி முரு said...

தாமரையின் கருத்துகளின் உடன்பாடு இல்லாததாலும், கடும் கோபத்தில் இருப்பதாலும் தற்போது பின்னுட்டமிடும் மனநிலையில் இல்லை.

தாமரை தனது முழு திறமையையும் காட்டிவிட்டார்.

விதி தனது முழு திறமையையும் காட்டட்டும்.

இதுதான் விதியானால் ஏற்க்க தயாராகவே இருக்கிறோம் கையறு இந்திய தமிழ்ர்கள்.

வேடிக்கை மனிதன் said...

//உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!//

கண்ணகி சாபம் ஞாயமா என்று கேட்டால், என்னைப் பொறுத்தவரை ஒருபாதி ஞாயம் மறுபாதி தவறு. பாண்டிய மன்னன் தவறு செய்ததற்கு பாண்டிய மன்னனையும் அவரை அந்தமுடிவுக்கு தூண்டியவர்களுக்கும் கண்ணகி சாபம் இட்டு இருந்தால் அது ஏற்புடையது, அதை விடுத்து எந்தத் தவறும் செய்யாத, ஏதும் அறியாத மக்களுக்கும் சேர்த்தே சாபம் என்பது எப்படி ஞாயம் ஆகும்.

அது போல இந்திய தலைமை துவத்தில் இருந்தவர்கள் ஈழப்பிரச்சினையில் ஒருபட்சமாக நடந்து கொண்டதற்காக அவர்களுக்கு தாமரை சாபம் விட்டுருந்தால் சரி. அதைவிட்டு ஈழத்து மக்களுக்கு துணை நின்ற ஒட்டு மொத்த மக்களுக்கு மான சாபமாக இது இருக்கும் பட்சத்தில் இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்.

கண்ணுக்கு கண் என்றால் உலகத்தில் எல்லோரும் குருடர்களாகத்தான் இருப்போம். அறிவுடன் சிந்தித்து செயல்படுதல் நல்லது. உணர்ச்சிவயப்பட்டு முடிவெடுப்பதே தமிழன் இயல்பாகிப்போனது.

இந்தியா ஈழப்பிரச்சினையில் உதவிகள் செய்யாமல் இருந்தாலும் இஸ்ரேல், ருஷ்யா, சீனா, பாகிஸ்தான் உதவிகளோடு விடுதலை புலிகள் அழிக்கப்பட்டிருப்பார்கள்.

நான் இந்தியா செய்தது ஞாயம் என்று சொல்ல வரவில்லை. இந்தியா அரசியல் தலைவர்கள் செய்தது எந்தவிதத்திலும் ஞாயப்படுத்தி விடமுடியாது. இந்தியா உதவி செய்ததை இலங்கை பகிரங்கமாக வெளியிட்டு நன்றி தெரிவித்து விட்டது. அதனால் தாமரையின் சாபம் இலங்கைக்கு உதவி செய்த இந்திய அரசியல் தலைவர்களுக்கு மட்டும் பொருந்தட்டும்.

அவர்களின் குடும்பத்து பெண்களையும் ஆண்களையும் அவர் சாபத்துகுல்லாகுவதையும் என்னால் ஏற்க முடியாது.

சதீசு குமார் said...

அப்பாவி முரு, வேடிக்கை மனிதன் ஆகியோரின் கருத்துகளுடன் நானும் உடன் போகிறேன். சிங்களவனைவிட கொடூரமாக இருக்கிறது தாமரையின் சாபம்.

தாமரையின் கோபம் முறையே அரசியல்வாதிகளின் மீதல்லவா இருந்திருக்க வேண்டும்?

Barari said...

UNGAL PENGALELLAM PADUKKAIYAI PAKKATHTHU VEETTIL PODATTUM. -----ITHU THAAMARIYIN IYALBAANA VAASANAIYO.

கிருஷ்ணா said...

அப்பாவி முரு, வேடிக்கை மனிதன், நண்பர் சதீசு குமார்.. உங்களின் மூவரும் கருத்தும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதால்.. ஒரே பதிலை தருகிறேன்..

ஒப்புக் கொள்கிறேன்.. கருத்துக்களும் கோபமும் மிகைப்படுத்தப்பட்டு இருக்கிறது..! நியாயமில்லைதான்.. ஒட்டு மொத்த இந்தியாவே (அல்லது இலங்கையே) கருகி சாம்பலாக வேண்டும் என்பது நியாயமில்லைதான்..

இருந்தாலும், என் கருத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

முதலில், இது கட்டுரை அல்ல.. கவிதை! மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகள் இருந்தால்தான் கவிதை அழகு பெறும், பிறரைக் கவரும்.. அதுவும் இது சாபம் விடும் கவிதை என்பதால்.. உக்கிரம் அதிகமாக இருக்கிறது..!

ஒரு பெண் கவி, தன் இனம் அழிந்தது கண்டு.. தனக்கு தெரிந்த கவிதை எனும் ஆயுதத்தை எடுத்திருக்கிறார்.. அதில் தவறு ஏதும் இருப்பதாக அறியேன்!

இரண்டாவது, இஸ்ரேல் சீனா பாகிஸ்தான் ருஷ்யா இப்படி வேறு யாராவது தமிழன் மேல் போர் தொடுத்திருந்தாலும், ஒரு வேளை நம்மால் மன்னிக்க இயலும்..! ஆனால், சொந்தக் காரன் மேலேயே போர் தொடுத்தது இந்தியா என்பதால்தான், நமது கோபம் அதிகமாகிறது!

இன்னமும் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் அங்கே தினம் தினம் கொடுமைகள் அனுபவித்து செத்து மடிகின்றனரே! அதற்காக என்ன செய்கிறது இந்தியா?

இங்கே, இந்த மண்ணில் நாளை இதுபோல இன அழிப்பு நடந்தால்.. அப்போதும் இந்தியா வாளாவிருக்கும்...! இருந்தது!!! தமிழன் தானே.. என்று பாராமுகம் காட்டும் இந்தியாவுக்காக பரிந்து பேச எனக்கு மனம் வரவில்லை!

நாம் இரண்டு கண்களை இழந்தாலும் பரவாயில்லை.. எதிரி பார்வையோடு இருக்கட்டும் என்பது ஒரு வாதம்..

எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை.. எதிரிக்கு ஒரு கண்ணாவது போகட்டும் என்பது மறு வாதம்..

எல்லாம்.. வாதங்கள்தான்..! வெறும் வார்த்தைகள்தான்..! இந்த கவிதையில் இருப்பதும் வார்த்தைகள்தான்..!

கண்ணகி சாபம் காவியமானது.. இன்று, கோவம் கொண்ட என் கவிச் சகோதரி சாபமிடுகிறாள்.. வேறு எதுவுமே செய்ய இயலவில்லையே என்று நொந்து, வேதனையில் சாபமிடுகிறாள்.. கடுஞ்சொற்கள் தானே சாபமாக வரும்..!
அந்த கோவத்திலும் சாபத்திலும் ஒரு அர்த்தம் இருப்பதால், அந்த கவிதையை ஆதரிக்கிறேன்.

கிருஷ்ணா said...

பராரி.. சாபமிடுபவள் ஒரு பெண்! தன் சகோதரிகளின் கற்பை விருந்து வைக்கும் கூட்டத்தைப் பார்த்து அவள் அக்காள் கொடுக்கும் சாபமையா அது! உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையோ?? அவர்களுக்கு அந்த நிலை ஏற்பட்டால், நீங்கள் சபிக்க மாட்டீர்களா??

தீப்பெட்டி said...

தாமரை பின்னாளில் இந்த கவிதைக்காக வருந்தக்கூடும்..

இது அவசரப்பட்ட சாபம்..

Anonymous said...

தீயோர் தீய செயல்களினால் தங்களுக்கே தண்டனையை விதைத்துக் கொள்கிறார்கள். அருவடைக் காலங்களில் அவர்கள் அனுபவித்துக் கொள்வார்கள்.

இவர் தனது உள்ளத்தை கூவத்திலும் கொடிய குப்பையாக்கிக்கொள்வது ஞாயமா?????????????????

கிருஷ்ணா said...

//தீயோர் தீய செயல்களினால் தங்களுக்கே தண்டனையை விதைத்துக் கொள்கிறார்கள். அருவடைக் காலங்களில் அவர்கள் அனுபவித்துக் கொள்வார்கள்//


கொசு நம்மைக் கடித்து இரத்தத்தைக் குடிக்கும் போது, அதற்கான தண்டனை அது பெற்றுக் கொள்ளும் என்று நாம் சும்மா இருப்போமா? சட்டென்று அடிக்க மாட்டோம்! ஓபாமா ஒரு ஈயைக் கொன்று விட்டார் என்று செய்திகள் பரபரப்பாக வருகின்றன..! அமெரிக்க ஜனாதிபதியே ஈயைக் கொன்றிருக்கிறார்.. என்னையும் சேர்த்து.. நாமெல்லாம்.. எத்தனையோ பூச்சிகளையும் உயிரினங்களையும் நமக்கு தொல்லை கொடுக்கின்றன என்று கொன்று குவிக்கிறோம்! ஈ, எலி, கரப்பான், கரையான் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.. அந்த பூச்சி இனங்களுக்கெல்லாம் ஆண்டவன் தண்டனை கொடுக்கும் வரை நாம் பொறுப்பதில்லையே ஏன்?? காரணம், அவைகளினால் ஏற்படும் பிரச்சனை நம்மை பாதிக்கும் என்பதால்!

ஒரு கவிதையில் எனது வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன..

'தனக்கென்றால் தலைவலி..
அதுவே
பிறர்க்கென்றால் தலைவிதி..!'

என்னய்யா ஞாயம் நம் ஞாயம்?!

சிவனேசு said...

கவிஞர் தாமரையின் சாபம் நமது நண்பர்கள் பலருக்கு மனக்கிலேசம் விளைவித்திருப்பதை அறியமுடிகிறது, ஆனால் அந்த கோபமும், சாபமும் விளைவதற்கு காரண‌மான அவரது வருத்தம்.....? நமக்கும் அந்த வருத்தம் உண்டல்லவா?
எத்தனையோ மைல்களுக்கு அப்பால் வாழும் நமக்கே துடிக்கும்போது, கவிஞர் தாமரை இப்படி கவிதையாய் வெடித்திருப்பது அதிசயமாகப்படவில்லையே!

சாபத்திலும் விதிவிலக்கு உண்டு அல்லவா? கண்ணகி சாபத்திலும் நல்லோரை சாபம் தீண்டாதிருக்க விலக்கு இருந்தது படித்த ஞாபகம். அவரைப்போலவே தன் ஈழத்து சகோதர சகோதரிகளுக்காக வருந்தியவர்களையும் அவர் சாபத்தில் இணைத்திருப்பாரா? அப்படியானால் அந்த சாபம் அவரையும் தீண்டாதா?

Anonymous said...

//நாமெல்லாம்.. எத்தனையோ பூச்சிகளையும் உயிரினங்களையும் நமக்கு தொல்லை கொடுக்கின்றன என்று கொன்று குவிக்கிறோம்! ஈ, எலி, கரப்பான், கரையான் //

இவ்வளவு வீரத்தினை வைத்துக் கொண்டு இப்படி வக்கிரமாக சபிக்கும் நம் தமிழ் வீர சாகசத்தினை காண மனமெல்லாம் பூமி நடுவில் ழூழ்குது ஐயா!

சக்திவேல் said...

தாமரையின் உணர்வுகள் இயல்பானது. தமிழர்கள் அல்லாத இந்தியர்கள், இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை சந்தோஷமாக பார்க்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழர்களை அழிக்கத்துனைபோகிறார்கள். அவர்கள் வலிமையால் செய்வதை தாமரை சாபமாக செய்கிறார். வேறு என்ன செய்யமுடியும் பாவம் தமிழச்சியாய் பிறந்துவிட்ட அவரால். அவரது இந்த சாபக்கவிதை சரியானதே.
தலைவர் ஒரு சினிமாவில் சொல்லியிருப்பார், "பணக்காரர்கள் ஜெயிப்பதற்க்கு ஆயிரம் வழிகள் இருக்கும் ஆனால் ஏழைகள் நாங்கள் ஜெயிக்க ஒரேவழிதான், சீவிருவோம்"

எங்களுக்கு அதுகூட முடியாது, சாபம் விட்டுவிடுவோம்.

சதீசு குமார் said...

அப்பாவி கொதித்து போயிருக்கிறார் போலத் தெரிகிறது..

http://abbaavi.blogspot.com/2009/06/blog-post_22.html

மாயாவி said...

மற்றைய நாடுகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளை அழித்திருந்தால் இந்தளவு வலி இருந்திருக்காது எமக்கு. தந்தை தேசமான (எனது தந்தை இந்தியாவில் பிறந்தவர்தான்) இந்தியாவே எமது முதுகில் குத்தியதைத்தான் எம்மால் தாங்க முடியவில்லை.

ஆனால் இந்த அவலத்தை நிறுத்தக்கூடிய ஒரு இடத்தில் தமிழினத்தலைவன் என்று தன்னைப் பீற்றிக்கொள்ளும் ஒருவர் இருந்தும் அதைச் செய்யவில்லையே!!

தாமரையின் கோபம் அரசியல்வாதிகள் மீது மட்டும்தான் இருக்க வேண்டுமென்றால்!!, மீண்டும் அந்த அரசியல்வாதிகளை ஓட்டளித்து பதவிக்கு கொண்டுவந்தது யார்???

ஈழத்தமிழினப் படுகொலையில் சம்பந்தபட்ட அனைவருக்கும் இந்த சாபம் பலிக்கட்டும். இல்லை...... எமது கண்முன்னாலேயே நிச்சயம் பலிக்கும்.

கிருஷ்ணா said...

//இவ்வளவு வீரத்தினை வைத்துக் கொண்டு இப்படி வக்கிரமாக சபிக்கும் நம் தமிழ் வீர சாகசத்தினை காண மனமெல்லாம் பூமி நடுவில் ழூழ்குது ஐயா!//


பின்னூட்டத்தைக் கூட திரைமறைவில் இடும் வீரரே.. கேலி பேசுவதை நிறுத்தி விட்டு, உமக்கு தெரிந்த வழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.. இலங்கையில் நடந்த அநீதிக்கு உலகத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?? சொல்லுங்கள்..

சாபம் கொடுப்பது கூட பாவம் என்று வாதாடும் என் இனச் சோதரர்களே.. மாற்று வழியைச் சொல்லிவிட்டு பின் கோபப்படுங்கள்..!

குறை சொல்வது எளிது.. குறிப்பறிந்து வழி சொல்வதுதான் அறிவு!

கிருஷ்ணா said...

தாமரை இட்ட சாபம் முற்றிலும் சரி என்று நான் வாதாட வரவில்லை நண்பர்களே! நம் இனத்திற்கு நேர்ந்த கொடுமையை அவருக்கு தெரிந்த பாஷையில் வசை பாடி தீர்த்துவிட்டார்.. காரணம் அவர் ஒரு கவிஞர்.

அதற்கு கண்டனம் கூறும் குணவான்களே.. வேறு என்னதான் செய்யலாம்.. தமிழனாக.. தெரிந்தால் 'தைரியமாக' அதைச் சொல்லுங்கள்!

கிருஷ்ணா said...

நன்றிங்க சதீசு குமார். நான் இனவாதியல்ல.. மனிதத்தை விரும்புபவன்தான்.. ஆனால், மிருகத்துக்கு மனிதத்தைக் கற்றுத் தர முடியுமா? அதுதான் என் கேள்வி..

கிருஷ்ணா said...

சிவனேசு, மாயாவி, சக்திவேல்.. நன்று சொன்னீர்..! வாழ்க தமிழினம்..! வெல்க நம் ஒறுமை!

நாமக்கல் சிபி said...

//தாமரை பின்னாளில் இந்த கவிதைக்காக வருந்தக்கூடும்..

இது அவசரப்பட்ட சாபம்.//

இப்போது கூட அவசரப் பட்டிருக்காவிட்டால்தான் வருந்த வேண்டியிருக்கும்!

Anonymous said...

பின்னூட்டத்தைக் கூட திரைமறைவில் இடும் வீரரே..
:))


//கேலி பேசுவதை நிறுத்தி விட்டு, //

கேலி இல்லை எனது ஆற்றாமை தான்.

//சாபம் கொடுப்பது கூட பாவம் என்று வாதாடும் என் இனச் சோதரர்களே.. மாற்று வழியைச் சொல்லிவிட்டு பின் கோபப்படுங்கள்..!//

ஒருவரது துன்பத்தை துடைக்க முடியவில்லை என்றால் அடுத்தவருக்கு துன்பம் விளைவிப்பது தான் மனிதமென்பதில்லை.

கிருஷ்ணா said...

ஆற்றாமையில் ஆழ்ந்திருக்கும் அன்பானவரே... உங்களுக்கும் கருத்துக் கூறும் தகுதியும் இல்லை என்றே நான் கருதுகிறேன். இங்கே யாரும் அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்க சொல்லவில்லை! தன் இனத்தை கெடுத்தவனுக்கு, கொன்றவனுக்கு, அவனுக்கு துணை நின்றவனுக்கு மட்டுமே சாபம் கொடுத்தார் என் சகோதரி. இதுவும் கூடாதென்றால், கொலைகாரர்களுக்கு தூக்கு தண்டனை எதற்கு, கற்பழிப்பு செய்பவனுக்கு பிரம்படி எதற்கு?? இந்த சட்டமும் நீதிமன்றங்களும் எதற்கு? எல்லா நீதிமன்றங்களும் வாய்மூடி உங்களைப் போல் ஆற்றாமையில் இருக்குங்கால்.. என் தமக்கை சாபம் இடுவது மட்டும் கூடாது என்னும் உங்கள் வாதம் எப்படி இருக்கிறது தெரியுமா?? வேண்டாமய்யா.. விட்டுவிடுங்கள்!

திகழ்மிளிர் said...

/இது என் இனத்தின் சாபமாக இருக்கவேண்டும் என்பதால்../

உண்மை தான்

manian said...

ilichavaya tamila,pothumada nee emanthathu.enthanayo varuda varalaru endru pitrugiray anal oru kal kani nilam kooda illa,pesura serupu mathiri,nanggal ungalaypol adimayai veddi veeram pesa virumbala,puligalai pol poradi saga virumbugirom,ungalal pesamaddumthan terium veddithanama,pothum niruthu,valavum vida madde sagavum vida madde saguni neenga,ungga amma,akka,pila,ippadi koduruma kolla paddiruntha nee ingga nyayam pesa madda.mele oru kavithayai par tanekkendral talaivali pirarkendral thalaivitiya?athuthan neenggal,atanal vaya moodungga.

Anonymous said...

//உங்களுக்கும் கருத்துக் கூறும் தகுதியும் இல்லை என்றே நான் கருதுகிறேன். //

:))

Anonymous said...

mallaandhu paduthu echi thuppunaa namma melathaan vilum.

தவநெறிச்செல்வன் said...

கவிஞர் தாமரை தனது ஆற்றாமையை கொட்டி இருக்கிறார்,சாவு வீட்டின் ஓப்பாறிக்கு பொழிப்புரை எழுதக்கூடாது, ஆகையால் அவரின் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் பார்த்து விவாதிப்பதில் அர்த்தமில்லை, அவர் தனது ஆற்றாமையை தனித்துக்கொண்டு ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட வேண்டுகிறேன்.

kathir said...

தாமரையின் சாபம் கொஞ்சம் நீர்த்துப்போன கோபம் என்று கூட சொல்லலாம், குண்டுவீச்சில் சிதறிப்போன குழந்தையை மடியில் ஏந்திக்கொண்டு, பெருங்குரலெடுத்து கண்ணீர் வழிய வானத்தை நோக்கி கதறும் ஒரு ஈழத்து தாயின் சாபம் இதைவிட பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

கபிலன் கண்ணப்பா said...

தாமரையின் தைரியம் பாராட்டத்தக்கது.. ஆதங்கம் புரிகிறது. அதே சமயம் ஒட்டு மொத்த இந்திய மக்களையும் சாபம் போட்டிருப்பதுதான் மனதை ஏதோ செய்கிறது.. ஒன்று புரிந்துகொள்ள வேண்டும்.. இலங்கையில் தமிழர் துண்பப்படுவதைக்கண்டு எத்தனை இதயங்கள் கலங்கி கண்ணீர் விட்டுக்கொண்டுள்ளன.. ஆனால் சாதாரண குடிமக்களால் என்ன செய்ய இயலும்..அவர்களைக் கேட்டா எந்த முடிவும் நடக்கிறது? மேலும் தாமரை போன்ற நல்ல உள்ளங்களுக்கு என் அன்பு வேண்டுகோள்: ஈழப்பிரச்சினை புலம் பெயர் தமிழர்களால் ஒரு நல்ல வடிவம் பெற்றுக்கொண்டு, ஒரு புதிய யுக்தியில் ஒரு வலிவான 'போர்' தொடங்கப்போவதாய் என்னால் உணரமுடிகிறது.. அதற்கு உங்களைப்போன்றோரின் தமிழ் தன் மென்மையால் எல்லோரையும் அரவணைத்து தமிழன் பெருமையை நம் காலத்தில் இந்த உலகத்திற்கு உணரச்செய்யவேண்டும்- கபிலன் கண்ணப்பா

James Rajendran said...

(கவிஞர் தாமரை அவர்கள் வழங்கிய சாபம் ஒவ்வொரு தமிழனின் சாபமாக ஆகட்டும்!
இந்த கவிதையை வாய்விட்டு உரக்கமாகப் படியுங்கள் தமிழர்களே..)

இது தான் முழுமையான வன்முறை !

1.முதலில் நம் பலவீனத்தை ஏற்று கொள்ள வேண்டும் ! ஆனால் அது நடக்கவில்லை

2..நமக்கு எதிரில் இருப்பவன் அவனது பலவீனத்தை ஏற்று கொண்டான், அதுபோக அவன் ஒரு அரசு அமைப்பு , மற்ற நாடுகளின் உதவிகளை பெற முடிந்தது.

3. அது போக போர் என்று வந்தபிறகு வெறும் துப்பாக்கி மட்டும் போதுமானதல்ல , முழுமையான வெற்றி கிடைக்காமல் தமது படைகளின் விவரங்களை காட்டி கொண்டுருக்காம்மால் இருந்துருக்க வேண்டும் , முக்கியம்மாக எதிரிகளை சொரிய கூடாது, அடித்தால் மரண அடி இல்லை என்றால் அதுவரை அமைதி.

4.எதிரிகளின் பலவீனத்தை மட்டும் அல்ல பலமும் அறியாமல் போக கூடாது,

5.வெறறுசாபம் மட்டும் அனைத்தும் பெற்று தராது. (அதை வழிமொழிதல் உட்பட )

எமது மக்களின் எண்ணம் தூய்ம்மையாகதாண் இருக்கிறது,

மனதூய்ம்மை மட்டுமே நேர்மை !
மற்றதல்லாம் வெறும் கூச்சல்!

- James Rajendran / Coimbatore

Anonymous said...

i strongly condemn posting this stupid poem...please remove it and kindly request all to avoid such kind of postings

Anonymous said...

//i strongly condemn posting this stupid poem...please remove it and kindly request all to avoid such kind of postings//

who the hell you are to command as this !? you think what? this is your house or your country? behave yourself!

கிருஷ்ணா said...

//i strongly condemn posting this stupid poem...please remove it and kindly request all to avoid such kind of postings//

hahaha... I seriously consider that as a joke! buzz off buddy!

கிருஷ்ணா said...

(கவிஞர் தாமரை அவர்கள் வழங்கிய சாபம் ஒவ்வொரு தமிழனின் சாபமாக ஆகட்டும்!
இந்த கவிதையை வாய்விட்டு உரக்கமாகப் படியுங்கள் தமிழர்களே..)

இது தான் முழுமையான வன்முறை !

வன்முறைக்கு புதிய அர்த்தம் கற்பித்துவிட்டீர்! பலே.. இலங்கையும் இந்தியாவும் செய்தது அஹிம்சையோ?!

கிருஷ்ணா said...

//தாமரையின் சாபம் கொஞ்சம் நீர்த்துப்போன கோபம் என்று கூட சொல்லலாம், குண்டுவீச்சில் சிதறிப்போன குழந்தையை மடியில் ஏந்திக்கொண்டு, பெருங்குரலெடுத்து கண்ணீர் வழிய வானத்தை நோக்கி கதறும் ஒரு ஈழத்து தாயின் சாபம் இதைவிட பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்.//

ஒப்புக் கொள்கிறேன்..!

கிருஷ்ணா said...

தவநெறிச்செல்வன் மற்றும் கபிலனின் கருத்து ஏற்புடையது. என்னைப் பொறுத்தவரை, இதை நான் கவிதையாகவும் சாபமாகவும் மட்டுமே பார்க்க விரும்புகிறேன்..! இயற்கை தண்டிக்கட்டும் என்றுதானே சபிக்கிறார்.. சபிக்கட்டுமே!

James Rajendran said...

(வன்முறைக்கு புதிய அர்த்தம் கற்பித்துவிட்டீர்! பலே.. இலங்கையும் இந்தியாவும் செய்தது அஹிம்சையோ?!)

வெறறுசாபம் மட்டும் அனைத்தும் பெற்று தராது. அதை வழிமொழிதல் உட்பட

James Rajendran said...

Dear Friend,

You Go and read this link

Next U Comment Others

http://www.athishaonline.com/2009/06/blog-post_15.html

James Rajendran / Coimbatore

certifiedasshole said...

//இலங்கையில் நடந்த அநீதிக்கு உலகத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?? சொல்லுங்கள்.//
இனியாவது மலேசியா தமிழர்களை போல் உங்களை இந்தியன் என்றோ இந்திய வம்சாவளியினர் என்றோ வகைப்படுத்தி அனைத்து இந்தியர்களின் ஆதரவை கோருங்கள் .. இந்தியவில் மொழி வாரி பிரிவினை ஏற்படுத்தாதீர்கள்.

all said...

James Rajendran said...

(கவிஞர் தாமரை அவர்கள் வழங்கிய சாபம் ஒவ்வொரு தமிழனின் சாபமாக ஆகட்டும்!
இந்த கவிதையை வாய்விட்டு உரக்கமாகப் படியுங்கள் தமிழர்களே..)

இது தான் முழுமையான வன்முறை !


///Barari said...
தீப்பெட்டி said...
Anonymous said...

//
///
தாயையோ ,சகோதரியையோ கற்பழிக்க வருபவனுக்கு காண்டம் வங்கி கொடுப்பவர்கள் என்று சு.ப.வீ ஒரு பத்திரிக்கைக்கு பதில் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.


பல லட்சம் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதும்,பெண்களின் பிணங்கள் கூட கற்பழிக்க பட்டது மறந்து போனதா அல்லது உங்கள் மனம் மரத்து போனதா?
வெட்கம்!

Anonymous said...

Thaamaraiyin kavidhai arpudham. Iyalaamayilum aatramaiyilum veditha vurnaruhale indha Saabam. Porul ennavo vanmai than endraalum, indhap penmaiyin tamil vunarvum veeramum illadhavarhalai thalaivarhalaahap petra tamizhinam indha saabam palithu ozhindhaal kooda thavarillai than. Aanaalum, vanmaiyaik kooda inimaiyaai olikavaitha tamizhin inimaiyap pesa tamizhinam vaazhdhal vendum. Tholvihal nirandharamalla. Sarithiram oru sakkaram Thmaarai. Vendravan thotpadhum thotpavan velvadhum vulaha niyadhai. Kaathirupom thaamaraiye, unnaip pol vunarvulla thalaivan endraavadhu kidaipaan thamizhanuku. Andru meetedupom izhandha vurimaihalai. Padhilalipom nadandha kodumaihaluku. Adhuvarai thamizh vaazhatum, un vunarvulla kavidhaihalilaavadhu!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs