Wednesday, October 14, 2009

தீபாவளி

தீபாவளி

இன்று
தீபங்களின் திருவிழா...
வெளிச்சத்தின்
வெற்றி விழா..
ஆம்..
இன்று தீபாவளி...?

தீபாவளி என்ன..
உயிர்வதை செய்தவனுக்காய்
ஆண்டுக்கொருமுறை
கொண்டாடப்படும்
கோலாகல
நினைவாஞ்சலியா?!

பாவி,
அவன் பாவம் தொலைய
பாக்கெட் காலியாக
நாம் தரும்
பண்பாட்டு
இலஞ்சமா?!

அரக்கன் அழிந்தாலும்
அவன் குணம் மட்டும்
இங்கே இன்னும்
பாட்டில்களிலும்
அரிவாள்களிலும்
பத்திரமாக..

இருக்கும் காசையெல்லாம்
வாரி இறைத்துவிட்டு
வயிற்றில் ஈரத்துணி
கடைசியாக..

ஒழிந்தது ஒரு நரகாசுரன்..
இங்கே,
தினம் தினம் பிரசவம்
புதுப்புது
நரகாசுரர்கள்..!!

***

வித வித இனிப்புகள்
பலவித பண்டங்கள்
இறைச்சி எல்லாம் உண்டு
வாங்க வாங்க..
Diabetes, BP,
கொலஸ்ட்ரோல்..
எல்லாம் இங்கே இலவசம்
வாங்கி போங்க..

இதுதான் தீபாவளியா?

இதற்காகவா..?
இந்த அவலத்துக்காகவா
இத்தனை அலங்காரம்?
****
துவண்டிருந்த
திரியை தூண்டிவிட்டு
பின் தீக்கிறையாக்குவதா
தீபாவளி..?

இல்லை,
எரிவது உடம்பென்று
தெரிந்தும்
உலகுக்கு ஒளி தரும்
திரியின் தியாகத்தை
போற்றுவதே தீபாவளி..!!!

கோடி தீபங்கள்
சுடர் தந்தாலும்
உள்ளத்தின் இருளில்
சுடரின் சேவை
செல்லாக் காசுதான்..

இனியாவது,

தீபாவளிக்கு
நல்லெண்ணெய் மட்டும்
தேய்ப்பதை விட்டுவிட்டு
நல் எண்ணங்களை
தேய்த்துக்கொள்வோம்..

திரியை மட்டும்
எரிப்பதை விட்டுவிட்டு
உள்ளொளியை
ஏற்றிக் கொள்வோம்!

-K.கிருஷ்ணமூர்த்தி

தித்திக்கும் தீபாவளி

அண்மையில் நடந்து முடிந்த தீபாராகா பாடல் இயற்றும் போட்டியில், எங்களின் பாடல் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று, CELCOM-இன் குறுஞ்செய்தி போட்டியில் மலேசிய மக்களால் சிறந்த பாடலாக தேர்வு பெற்றது. இந்த பாடல், தீபாவளி அன்று அனைத்து celcom கைத்தொலைபேசிகளின் call me ringtone ஆக உலகம் எங்கிலும் இருக்கும். Celcom நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு பாடலாகவும் அமைகிறது. இந்த வேளையில், என் பாடலுக்கு குறுஞ்செய்தி வழி வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

பாடலின் வரிகள்:

தித்திக்கும் தீபாவளி

பல்லவி

தீபாவளி.. தீபாவளி..
ஊரெங்கும் கொண்டாடும் தீபாவளி...!
தீபாவளி.. தீபாவளி..
உலகெங்கும் தித்திக்கும் தீபாவளி..!
ஐப்பசி மாசம்.. வரும் சந்தோஷம்..
ஆனந்த தீபம்.. தரும் உல்லாசம்..
வீட்டில் தீபங்கள் ஏற்றுங்களே..
இருளே இல்லாமல் மாற்றுங்களே..
மனதில் வெளிச்சத்தை காட்டுங்களே..
தீய எண்ணத்தை ஓட்டுங்களே..


சரணம் 1

காலை.. கண் விழிப்போமே..
நல்லெண்ணை தலையெல்லாம் தேய்த்திடுவோமே..
நாளும்.. நன்மை செய்வோமே..
நல்லெண்ணம் நெஞ்செல்லாம் சேர்த்திடுவோமே..

ஊரோடு ஒன்றாகவே.. எண்ணங்கள் நன்றாகவே..
தர்மம் தந்த.. தீபத்தின் திருநாளிலே..! ஹே..ஹே.. (தீபாவளி..)

சரணம் 2
வா வா.. தீபங்களோடு..
வானத்தில் மத்தாப்பின் வேடிக்கையோடு..
வா.. வா.. கீதங்களோடு..
மனிதத்தை கொண்டாடும் ராகங்களோடு..!

சோகங்கள் போகட்டுமே.. சொந்தங்கள் வாழட்டுமே..
தர்மம் தந்த.. தீபத்தின் திருநாளிலே..! ஹே..ஹே.. (தீபாவளி..)


K.கிருஷ்ணமூர்த்தி

பி.குறிப்பு: 16/10/09 அன்று இரவு மணி 9-க்கு வானவில்லில் இடம்பெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இப்பாடலும், எங்களின் நேர்காணலும் இடம்பெறும். பாடலை கேட்க விரும்புபவர்கள் www.deeparaaga.com அகப்பக்கத்தில் தித்திக்கும் தீபாவளி என்ற பாடலை தேர்வு செய்து கேட்கலாம். இறுதிச் சுற்றுப் போட்டிக்கு வந்த அனைத்து பாடல்களுமே மிகத் தரமான பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs