Showing posts with label இசைத்தட்டு. Show all posts
Showing posts with label இசைத்தட்டு. Show all posts

Tuesday, June 9, 2009

வாடிய பயிரை..


அனுபல்லவி
வாடிய பயிரை கண்டபோதெல்லாம்..
வாடினார் வள்ளல் பெருமான்..
ஆடிய உயிரை கொன்ற போதெல்லாம்
கலங்கினார் கருணைக் கடலே..

பல்லவி
உயிர்களை படைப்பது கடவுளடா..
அதை உயிராய் மதிப்பது மனிதமடா.. மனிதமடா.. 2x
இறப்பு என்பது இயற்கையடா.. அதை
உன் கையில் எடுப்பது கொடுமையடா.. (வாடிய..

சரணம்
எளியதை கொன்று வலியது வாழும்..
காட்டில் வாழும் மிருகமடா..
உயிர்களை மதித்து பயிர்களை சமைத்து
உண்டு வாழ்ந்தால் மனிதனடா.. (இறப்பு..

கருணை என்பது கடவுளின் வடிவம்
கருணையை மறந்தால் மிருகமடா..
கருணையை சுமந்து கடவுளை நினைந்து
உருகி வாழ்ந்தால் தெய்வமடா.. (வாடிய..
(உயிர்களை

  • K.கிருஷ்ணமூர்த்தி


பாடல் ஒலி வடிவில்..

Vadiya Payirai.mp3 -

Monday, May 4, 2009

சரவண பவ..



பல்லவி
சரவண பவ என்னும் திருமந்திரம்..
அதை நாளும் சொல்ல எங்கள் துயர் தீர்ந்திடும்..
அறுபடை மலை வாழும் அருட்குமரா..
உன்னை எண்ண எண்ண நெஞ்சில் இருள் நீங்கிடும்.. X 2

(சரவண பவ..)

சரணம்
கர்வம் என்ற பாம்பினை..
அடக்கியாளும் மயில் துணை..
பாதையில் தொல்லை நீங்கவே..
வெற்றி தரும் வேல் துணை..

சூரனை வதமும் செய்திட..
சிவனின் நெற்றிக் கண்ணிலே
உதித்து வந்த கார்த்திகேயா..
ஈசனின் இளைய மைந்தனே..

இச்சை வடிவான வள்ளி..
ஒருபுறம் கை சேர..
கிரியை எனும் தெய்வானை..
மறுபுறம் தோள் சேர..

இருப்பதெல்லாம் உன் பொருளே..
நடப்பதெல்லாம் உன் செயலே..
கேட்பதெல்லாம் உன் புகழே..
காண்பது எல்லாம்.. உன் அழகே..
முருகா.. முருகா.. முருகா.. முருகா.. –-2x (சரவண பவ..

(இருப்பதெல்லாம்..

பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி
இசைவட்டு : புளிசாதம்




பாடலை ஒலி வடிவில் கேட்க கீழே சொடுக்குங்கள்..


Saravanabava.mp3 -

Saturday, April 4, 2009

நான் செய்த பாவம் என்னையா..?

அநுபல்லவி

ஆயிரம் கோடி பிறப்புகள் எடுத்தேன்..
உன் காலடி சேர முடியவில்லை... உன்
ஆலயம் தோறும் காவடி எடுப்பேன்..
எனக்கினி வேறு வழியுமில்லை..
முருகா..

பல்லவி

நான் செய்த பாவம் என்னையா..?
இந்த மானிட பிறப்பை எடுத்துவிட்டேன்.. –2X
யார் செய்த சாபம் சொல்லையா - இன்னும்
வாழ்க்கையின் பிடியினில் தவிக்கின்றேன்..

(நான் செய்த..

சரணம்

ஒவ்வொரு சஷ்டியும் விரதம் இருந்தேன்..
மனதினில் அமைதியில்லை..
ஒவ்வொரு விடியலும் உனை தொழுதேன்..
உன் அருள் கிடைக்கவில்லை.. X 2

(நான் செய்த..

ஔவையின் தமிழை கேட்டு ரசிக்க..
நேரினில் காட்சி தந்தாய்..
சுட்ட பழம் வேண்டுமா.. சுடாப்பழம் வேண்டுமா
சிறுவனாய் பரீட்சை செய்தாய்..
உன் நாமம் தவிர வேறொன்றும் அறியேன்..
தினம் உனை பாடுகின்றேன்- உன்
திருப்புகழை.. நான் பாடி நீ கேட்க..
ஏன் இன்னும் வரவில்லை..

(நான் செய்த..


இசைவட்டு : புளிசாதம்
பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி
இசை : நாதன்

பாடலை ஒலி வடிவில் கேட்க கீழே சொடுக்குங்கள்..

Ayiram kodi.mp3 -

Thursday, April 2, 2009

நாயகனே.. விநாயகனே..

பல்லவி

நாயகனே.. விநாயகனே.. -2x
நலங்கள் சேர்க்கும் நாயகனே.. -2x
தூயவனே.. எனை ஆள்பவனே
துதிக்கை உடைய தூயவனே.. (நாயகனே

சரணம்

ஒரு புறம் புத்தியை ஏந்தி..
மறு புறம் சித்தியை ஏந்தி
பிரணவமாக இருப்பவனே.. ஆ.. –2x
துதிக்கையில் பிரணவத்தை காப்பவனே.. (நாயகனே

பார்வதியால் சாபம் பெற்ற
நந்திதேவன் குறையும் நீங்க.. -2x
அருகினை அவனிடம் ஏற்றவனே
ஜெயம்தரும் அருகம்புல் நாயகனே

வியாசருடன் சபதம் செய்து..
பாரதம் எழுதச் சென்று..
தந்தத்தை தந்த தயாளனே
அபயம் அருளும் ஆண்டவனே.. (நாயகனே

இடுப்பினில் அரவம் கொண்டு..
குண்டலினி சக்தியை தந்து..
அங்குசத்தால் குறைகள் தீர்ப்பவனே..
முதலே.. மூஷிக வாகனனே .. (நாயகனே


இசைத்தட்டு : புளிசாதம்
பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி.
இசை : நாதன்

பாடல் ஒலி வடிவில்..

Nayaganey.mp3 -

Friday, March 27, 2009

இறைவன்

இறைவன் என்றும் ஒன்றானான்.. அவன்
அருளும் போது இரண்டானான்.. X 2

மூன்று காலமும் வாழ்கின்றான்.. அவன்
மூன்று குணங்களும் தானானான்..
அன்பு, அறிவு ஆற்றல்..

இறைவன் என்றும் ஒன்றானான்.. அவன்
அருளும் போது இரண்டானான்..

நான்கு வேதத்தில் வாழ்கின்றான்.. அவன்
நான்கு திசையும் ஆள்கின்றான்..
சீலம் நோன்பு செறிவு அறிவு..

இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..

படைத்தல் காத்தல்
அழித்தல் துடைத்தல்.. மறைத்தல்
ஐந்து தொழில்கள் செய்கின்றான்..
ஐந்து புலன்கள்.. ஐந்து பூதங்கள்..
என்று எதிலும் ஐந்தானான்..

இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..

ஆறு வழிகள் அவனடி சேறும்..
ஆறு மதமும் அவன் புகழ் கூறும்..
ஓரறிவாயினும் ஆறறிவாயினும்
அனைத்து உயிர்க்கும் முதலானான்..

இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..

ஏழு அண்டமும் அவனுள் அடங்கும்..
ஏழு பிறப்பும் அவன் சொல்லி பிறக்கும்..
எட்டு குணங்களும் அவனுள் இருக்கும்.. ஆ.. - X 2
எட்டு சித்தியும் அவனிடம் கிடைக்கும்.. X 2

இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..

பாடலாக்கம்:
K.கிருஷ்ணமூர்த்தி

(எங்களின் புளிசாதம் எனும் இசைத்தட்டுக்காக, திருமந்திரத்தின் முதல் மந்திரத்தைத் தழுவி இயற்றிய பாடல் இது.)

பாடல் ஒலி வடிவில்..


Iraivan.mp3 -

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs