
தமிழ்த் திரையின்
‘வாலி’பமே..
உன்னையும்
வயோதிக
மரணம்
தழுவிக்
கொண்டதா?
பாவம்..
எத்தனை
நாள்தான்
தனித்திருப்பாள்
அந்த
தமிழ்த்தாய்..?
தன்
இளைய
மகனை..
என்றும்
இளமை மாறா மகனை
இனிய மகனை..
இன்னும்
எத்தனை
காலம்தான்
பிரிந்திருப்பாள்..
தமிழ்த் தாய்..?
அவளும்
பெண்தானே..!
இரவலாக
தந்தவள்
எடுத்துக்கொண்டாள்..
இருந்தாலும்
வயதை வென்று
வாழ்ந்த கவியின்
எழுத்துக்களும்
எண்ணங்களும்
இன்னமும்
எங்களுக்கே..!
என்றென்றும்..
வாழும் நின்
புகழ்!