Monday, May 4, 2009

சரவண பவ..



பல்லவி
சரவண பவ என்னும் திருமந்திரம்..
அதை நாளும் சொல்ல எங்கள் துயர் தீர்ந்திடும்..
அறுபடை மலை வாழும் அருட்குமரா..
உன்னை எண்ண எண்ண நெஞ்சில் இருள் நீங்கிடும்.. X 2

(சரவண பவ..)

சரணம்
கர்வம் என்ற பாம்பினை..
அடக்கியாளும் மயில் துணை..
பாதையில் தொல்லை நீங்கவே..
வெற்றி தரும் வேல் துணை..

சூரனை வதமும் செய்திட..
சிவனின் நெற்றிக் கண்ணிலே
உதித்து வந்த கார்த்திகேயா..
ஈசனின் இளைய மைந்தனே..

இச்சை வடிவான வள்ளி..
ஒருபுறம் கை சேர..
கிரியை எனும் தெய்வானை..
மறுபுறம் தோள் சேர..

இருப்பதெல்லாம் உன் பொருளே..
நடப்பதெல்லாம் உன் செயலே..
கேட்பதெல்லாம் உன் புகழே..
காண்பது எல்லாம்.. உன் அழகே..
முருகா.. முருகா.. முருகா.. முருகா.. –-2x (சரவண பவ..

(இருப்பதெல்லாம்..

பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி
இசைவட்டு : புளிசாதம்




பாடலை ஒலி வடிவில் கேட்க கீழே சொடுக்குங்கள்..


Saravanabava.mp3 -

4 comments:

Sathis Kumar said...

மே முதல் தேதியில் கிள்ளானுக்கு வந்திருந்தபொழுது, குமரனின் சகோதரர் நீங்களும் செயதாசின் நிகழ்விற்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால், சந்திக்கும் வாய்ப்புதான் கிட்டவில்லை..

கிருஷ்ணா said...

ஐயகோ! நண்பரே.. நான் பணத்தை கொடுத்துவிட்டு ஈப்போவிற்கு கிளம்பிவிட்டேன். என் சார்பில் என் நண்பர் வந்தார். முன்னமே தெரிந்திருந்தால், நானும் வந்திருப்பேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

பாடல் நன்றாக இருக்கு

வரிகளும் அருமை...

வாழ்த்துகள்...

கிருஷ்ணா said...

நன்றி விக்கி.. இந்த இசைத்தட்டில் பாடல் எழுதிய பின்புதான், எனக்குள் ஆத்ம திருப்தி லேசாக எட்டிப் பார்த்தது..!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs