மண்மீது வந்த தெய்வமே..
கண்போல காத்த சொந்தமே..
அன்பாலே ஆன பந்தமே..
எங்கள் அன்புத் தாயே..
உன்போல உறவு வேறில்லை..
நீ தந்த பாசம் பொய்யில்லை..
உனை மிஞ்சும் ஜீவன் ஒன்றில்லை..
என்றும் தெய்வம் நீயே..
முன்னூரு நாட்கள் உன்னில்..
உருவான உயிரின் பந்தம்..
ஏழேழு ஜென்மம் ஆனாலும்..
பொய்க்காது உந்தன் சொந்தம்..
பாலோடு பாசத்தை பருகத் தந்தாய்..
தாலாட்டில் தமிழைப் பழகித் தந்தாய்..
முத்தத்தில் உயிரினை உருக வைத்தாய்..
மொத்தத்தில் மனிதத்தை மலர வைத்தாய்..!
அம்மா..
உன் அணைப்பின் கதகதப்பில்
சொர்கத்தை உணர வைத்தாய்!!!
- K.கிருஷ்ணமூர்த்தி
20 comments:
அன்னையர் தினத்திற்கான சிறப்புக் கவிதையா...
வழமை போல் அருமை...
ஆம் விக்கி.. அன்னையர் தின சிறப்புக் கவிதைதான், என் தாய்க்கு சமர்ப்பணம்..!
அருமையான சமர்ப்பணம். மனிதத்தின் வேர்கள் தாய்மையிடத்து உள்ளது எனும் கருத்து சிறப்பு.
நன்றிங்க சதீஷ்! இந்த உலக வாழ்க்கையின் சாரத்தை, போராடும் விதத்தை, பணத்தின் அருமையை தமிழின் பெருமையை.. இன்னும் எவ்வளவோ விடயத்தை எனக்கு கற்றுத்தந்த என் முதல் ஆசான், என் அன்னைதான். மண்ணில் மறைந்துவிட்டாலும் எண்ணத்தில் என்றும் நிலைத்திருக்கும் அவர்களுக்காக இந்த பாடல்.. நெஞ்சத்தில் எழுந்த மெட்டுக்கு எழுதிய பாடல் தான் இது.. விரைவில் இதுவும் ஒலித்தட்டில் வரலாம்..!
சிறு ஐயம் நண்பா.. அன்னையை தெய்வமாகக் கருதும் பலரும் அன்னை தந்த மொழியை உச்சரிக்கவே வெட்கப்படுவதை பார்த்திருக்கிறீரா?
இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் பசப்பிகளுக்கு உமது பாணியில் நச்சென்று 'ஏதாவது' கூறலாமே...
D)))
அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறப்பான கவிதையினை வடித்தத் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்
நட்பின் குமரா.. நல்ல ஒரு பாடுபொருளை தந்துள்ளீர்கள். முயற்சிக்கிறேன் நண்பா.. கெட்ட வார்த்தைகள் இடையிடையே வந்தால் பொறுத்துக்கொள்ளவும்!
பாராட்டுக்களுக்கு நன்றி திரு கோவி.மதிவரன் அவர்களே!
தோழி ஒருவர் அமெரிக்காவிலிருந்து ஒரு மின்மடல் அனுப்பி இருக்கிறார்.. கண்கள் களங்கிவிட்டதென.. அதைப் படித்த எனது கண்கள் மீண்டும் ஒரு முறை களங்கியது உண்மையிலும் உண்மை! சிரமம் பாராமல் மின்மடல் அனுப்பிய அந்த தோழிக்கும் மனமார்ந்த நன்றி! இந்த கவிதை அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பணம்!
வாழ்த்துகள்
//பாலோடு பாசத்தை பருகத் தந்தாய்..
தாலாட்டில் தமிழைப் பழகித் தந்தாய்..
முத்தத்தில் உயிரினை உருக வைத்தாய்..
மொத்தத்தில் மனிதத்தை மலர வைத்தாய்..!//
சத்தியமான வரிகள்
கவிதை அழகு, உங்களுக்குப் பாராட்டுக்கள்
நல்லாயிருக்கு தல
MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்
"மண்மீது வந்த தெய்வமே.." உன் அணைப்பின் கதகதப்பில்
சொர்கத்தை உணர வைத்தாய்!!! அருமை வாழ்த்துக்கள்.
திகழ்மிகளிர்.. வாழ்த்துக்களுக்கு நன்றி!
வேடிக்கை மனிதன், பின்னூட்டத்துக்கும் நன்றிகள்!
சுரேஷ், சிரமம் பாராது பின்னூட்டம் இட்டதற்கு நன்றி! உங்கள் இடுகையைப் பார்த்தேன் வித்தியாசமான சிந்தனை.. என்னுடைய பின்னூட்டத்தை தந்திருக்கிறேன்.. நன்றி!
மாதேவி.. நன்றிங்க.. மீண்டும் வருக..
அழகாய் இருக்கிறார் அம்மா! அதைப்போலவே அருமையாய் இருக்கிறது, தங்கள் கவிதை,
முன்னூரு நாட்கள் உன்னில்..
உருவான உயிரின் பந்தம்..
ஏழேழு ஜென்மம் ஆனாலும்..
பொய்க்காது உந்தன் சொந்தம்
இவ்வரிகள் என்னை நெகிழச்செய்துவிட்டன! வாழ்த்துக்கள்
நன்றிங்க சிவனேஷ்.. ஏற்கெனவே பல கவிஞர்கள் பல்வேறு விதங்களில் பாடிய வரிகள்தான் என்றாலும்.. உண்மையான வரிகள் என்பதால்.. எனக்கும் என் தாயை நினைத்ததும் அதே சிந்தனைகள்தான் எழுந்தன.. அது உங்களையும் நெகிழச் செய்தது அந்த வரிகளின் வெற்றி..!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.