சின்ன சின்ன ஆசைகள்..
செதுக்கி வைத்த ஆசைகள்..
சின்னப் பெண் இவளுக்காய்
சேகரித்த ஆசைகள்..
எண்ண அலைகளிலே
ஏற்றிவைத்த ஆசைகள்..
நெஞ்சின் சிறைகளிலே
உறைந்திருந்த ஆசைகள்..
*
திங்களின் ஒளியினிலே
தனித்திருக்க ஆசை..
தென்றலின் தாலாட்டைத்
தமிழ் படுத்த ஆசை..
மேகங்கள் மழையாகும்
விதம் பார்க்க ஆசை..
சோகங்கள் அதைப்போல
கரைந்தோட ஆசை..
முள்ளில்லா ரோஜாக்கள்
நட்டுவிட ஆசை..
மல்லிகையை முள்ளாக்கி
தொட்டுவிட ஆசை..!
வண்னத்துப் பூச்சிகளின்
மொழி கேட்க ஆசை..
எண்ணத்தில் அதை நிறுத்தி
எழுதி வைக்க ஆசை.. !
குருவிகளின் பாஷைதனை
கற்றுக் கொள்ள ஆசை..
சுறுசுறுப்பை எறும்பிடத்தே
பற்றிக் கொள்ள ஆசை..
அருவிகளின் சலசலப்பில்
அயர்ந்திருக்க ஆசை..
இரவுகளின் கதகதப்பில்
விழித்திருக்க ஆசை..!
நிலவுதனில் கண்ணுறங்கும்
நித்திரையில் ஆசை..
கனவுகளில் கவியெழுதும்
காதலிலும் ஆசை... !
பனிமலரும் வேளைகளில்
பாட்டெழுத ஆசை..
பருவமகள் ஆசைகளை
கேட்டெழுத ஆசை..!
செதுக்கி வைத்த ஆசைகள்..
சின்னப் பெண் இவளுக்காய்
சேகரித்த ஆசைகள்..
எண்ண அலைகளிலே
ஏற்றிவைத்த ஆசைகள்..
நெஞ்சின் சிறைகளிலே
உறைந்திருந்த ஆசைகள்..
*
திங்களின் ஒளியினிலே
தனித்திருக்க ஆசை..
தென்றலின் தாலாட்டைத்
தமிழ் படுத்த ஆசை..
மேகங்கள் மழையாகும்
விதம் பார்க்க ஆசை..
சோகங்கள் அதைப்போல
கரைந்தோட ஆசை..
முள்ளில்லா ரோஜாக்கள்
நட்டுவிட ஆசை..
மல்லிகையை முள்ளாக்கி
தொட்டுவிட ஆசை..!
வண்னத்துப் பூச்சிகளின்
மொழி கேட்க ஆசை..
எண்ணத்தில் அதை நிறுத்தி
எழுதி வைக்க ஆசை.. !
குருவிகளின் பாஷைதனை
கற்றுக் கொள்ள ஆசை..
சுறுசுறுப்பை எறும்பிடத்தே
பற்றிக் கொள்ள ஆசை..
அருவிகளின் சலசலப்பில்
அயர்ந்திருக்க ஆசை..
இரவுகளின் கதகதப்பில்
விழித்திருக்க ஆசை..!
நிலவுதனில் கண்ணுறங்கும்
நித்திரையில் ஆசை..
கனவுகளில் கவியெழுதும்
காதலிலும் ஆசை... !
பனிமலரும் வேளைகளில்
பாட்டெழுத ஆசை..
பருவமகள் ஆசைகளை
கேட்டெழுத ஆசை..!
- K.கிருஷ்ணமூர்த்தி
12 comments:
ஆசையைப் பற்றி ஆசையாய், அழகாய் கவிதை வடித்து விட்டீர்கள்.
நன்றி தோழரே! என் ஆசைகள் உங்களை கவர்ந்திருந்தால்.. அதுவே எனக்கு மகிழ்ச்சி!
கவிதை அருமை :)
நன்றி.. திரு எட்வின் அவர்களே..! மீண்டும் வருக..
அழகான ஆசைகள்
நன்றிங்க பாலாஜி! இன்னும் நிறைய ஆசைகள் தேன்கிக் கிடக்கின்றன மனதினிலே..
அதில் ஒரே ஒரு பெரிய ஆசை :
தனித் தமிழ் ஈழம்
அமைந்திட ஆசை..!
யாருக்கும் பாதகமில்லாத ஆசைகள்
கவிதை நன்றாக இருக்கிறது
நன்றி வேடிக்கை மனிதரே..!
உங்களுக்கு அருமையான கற்பனை வளம்...
//நிலவுதனில் கண்ணுறங்கும்
நித்திரையில் ஆசை..//
நிலாவில் ஆக்சிஜன் இருக்கிறதாம். குறைந்த அளவிலான h20 தன்மை. மனிதன் வாழ உகந்ததாக இல்லை.
பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி விக்கி!
நிலவு பற்றிய தகவலுக்கும் நன்றி! நிலாவில் ஒரு ஹோட்டல் கட்டும் (Hilton) பணிகள் தொடங்கி விட்டதென்று படித்த ஞாபகம்..
//பனிமலரும் வேளைகளில்
பாட்டெழுத ஆசை..
பருவமகள் ஆசைகளை
கேட்டெழுத ஆசை..!//
-மிக நன்று
//மேகங்கள் மழையாகும்
விதம் பார்க்க ஆசை..
சோகங்கள் அதைப்போல
கரைந்தோட ஆசை..//
-பலரின் பல நாள் ஆசையிது.
வைரமுத்துவின் ’சின்ன சின்ன ஆசை’க்குப்பின்
கிருஷ்ணாவின் இந்த குட்டி ஆசைகளும் அசத்தல்.
வாழ்த்துகள்_தொடருங்கோ கவிப்பயணத்தை:)
நன்றிங்க மலர்விழி!
//வைரமுத்துவின் ’சின்ன சின்ன ஆசை’க்குப்பின்
கிருஷ்ணாவின் இந்த குட்டி ஆசைகளும் அசத்தல்.// இதைப் பாராட்டாக கொள்கிறேன்.. நான் சிறியவனானாலும், கவிப்பேரரசோடு ஒப்பிட்டது எனக்கு பெருமையே!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.