Monday, June 15, 2009

அடியே பெண்ணே..


அடியே பெண்ணே..

என் ஆவி என்னவோ
உனை எண்ணியே வேகிறது..

என் தேவி என்னிடம்
வர வேண்டியே சாகிறது..

என் பாதி உயிர் இன்று,
நீ வரும் திசையில்
வேர்க்கின்றது...

என் மீதி உயிர் மட்டும்,
உன் ஞாபக தென்றலில்
பூக்கின்றது..

என்று வருவாயோ பெண்ணே... ?
உயிரை என்று
திருப்பித் தருவாயோ கண்ணே..?!

மௌனம் கலைந்தேன்,
வார்த்தை இங்கில்லை?
மனதை திறந்தேன்..
தேவி நீ இல்லை..
சிறகை விரித்தேன்,
வானம் இங்கில்லை..
விறகாய் ஆனேன்..
நெருப்பும் இங்கில்லை..!!

என்று வருவாயோ பெண்ணே...?
என்னை என்று..
திருப்பித் தருவாயோ கண்ணே..?!

பார்வை கொண்டேன்,
காட்சி நீ இல்லை
பாதை கொண்டேன்,
பாவை நீ இல்லை..
தாகம் கொண்டேன்,
பருக நீ இல்லை..
மேகமானேன்..
துளிகள் என்னில் இல்லை..

என்று வருவாயோ பெண்ணே...?
எனக்கு என்ன
தருவாயோ கண்ணே...?!

K.கிருஷ்ணமூர்த்தி

9 comments:

வேடிக்கை மனிதன் said...

இன்னும் சிறப்பாக கவிதை வடிச்சிருக்கலாம்

கிருஷ்ணா said...

கருத்துக்கு நன்றி நண்பரே.. உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன்.. அப்படி யாரையாவது நான் எதிர்பார்த்துக் காத்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ..??! ஹஹ

வேடிக்கை மனிதன் said...

//கிருஷ்ணா said...
கருத்துக்கு நன்றி நண்பரே.. உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன்.. அப்படி யாரையாவது நான் எதிர்பார்த்துக் காத்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ..??! ஹஹ//


அந்தப் பெண் நீங்கள் கேட்டதை கொடுத்து இருந்தால் ஒருவேலை கவிதை நன்றாக வந்திருக்கும், என்பது என் எண்ணம்

Muruganandan M.K. said...

"மௌனம் கலைந்தேன்,
வார்த்தை இங்கில்லை?"
இதமான வரிகள். பாராட்டுக்கள்

கிருஷ்ணா said...

வேடிக்கையான மனிதரைய்யா நீங்கள்! அந்த பெண் கேட்டதை கொடுத்திருந்தால், கவிதை இன்னும் சப்பென்று போயிருக்குமோ?! எதிர்பார்ப்பதில் இருக்கும் சுகம்.. அனுபவிப்பதில் சற்று குறைவாகவே இருக்கும் என்பது எனது எண்ணம். இதற்கு சில விதி விலக்குகளும் இருக்கலாம்.

கிருஷ்ணா said...

டொக்டர்.எம்.கே.முருகானந்தன். வருக வருக.. என் வரிகள் உங்களுக்கு இதமளித்திருந்தால், பெரு மகிழ்ச்சி! மீண்டும் வருக.. தமிழின்பம் பெருக.. நன்றி.

தமிழ் said...

/
மௌனம் கலைந்தேன்,
வார்த்தை இங்கில்லை?
மனதை திறந்தேன்..
தேவி நீ இல்லை..
சிறகை விரித்தேன்,
வானம் இங்கில்லை..
விறகாய் ஆனேன்..
நெருப்பும் இங்கில்லை..!!

என்று வருவாயோ பெண்ணே...?
என்னை என்று..
திருப்பித் தருவாயோ கண்ணே..?!

பார்வை கொண்டேன்,
காட்சி நீ இல்லை
பாதை கொண்டேன்,
பாவை நீ இல்லை..
தாகம் கொண்டேன்,
பருக நீ இல்லை..
மேகமானேன்..
துளிகள் என்னில் இல்லை..

என்று வருவாயோ பெண்ணே...?
எனக்கு என்ன
தருவாயோ கண்ணே...?!
/

அருமையாக இருக்கிறது

கிருஷ்ணா said...

நன்றி திகழ்மிளிர்.. ரசித்தமைக்கு நன்றி!

வேடிக்கை மனிதன் said...

//கிருஷ்ணா said...
வேடிக்கையான மனிதரைய்யா நீங்கள்! அந்த பெண் கேட்டதை கொடுத்திருந்தால், கவிதை இன்னும் சப்பென்று போயிருக்குமோ?! எதிர்பார்ப்பதில் இருக்கும் சுகம்.. அனுபவிப்பதில் சற்று குறைவாகவே இருக்கும் என்பது எனது எண்ணம். இதற்கு சில விதி விலக்குகளும் இருக்கலாம்.//

எதிர்பார்ப்போடு எழுதும் போது சோகம் இழையோடும், கேட்டது கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி. மகிழ்ச்சியோடு எழுதும் பொழுது கவிதை மெருகேரும் என்பது என் எண்ணம்.

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs