அன்பு வாசகர்களே..
கடந்த 7.08.2009-இல் எனது ஆருயிர் மாமா, எனது உயிரினும் மேலான சகோதரியின் கணவர், திரு வெங்கடேசன் அவர்கள் சிவபதம் அடைந்ததால்.. எனது இந்த வலைப்பதிவில் தொடர்ந்து இடுகைகள் இடம்பெறாமல் போனது. இன்னமும் மீளாத் துயரத்திலும் அதிர்ச்சியிலும் இருக்கும் நான் சில நாட்கள் கழித்து மீண்டும் எனது 'அத்வைத தாம்பத்யத்தையும்' பிற கவிதைகளையும் தொடர்வேன். நண்பர்கள், வாசகர்கள் அணைவரும் சற்று பொறுமை காப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மற்ற அலுவலகளை கவனிக்கிறேன்.
கவித்தமிழின் பயணம் விரைவில் தொடரும்..
இக்கண்
K.கிருஷ்ணமூர்த்தி
Tuesday, August 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அன்பு நண்பரே
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை ப்ராத்திக்கின்றேன்.
நீங்களும் உங்கள் துக்கத்தில் இருந்து மீண்டு எழ எல்லாம் வல்ல ஆண்டவனிடம் ப்ராத்திக்கின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்..
மனதை தேற்றிக் கொள்ளுங்கள் நண்பரே..
உயிரான ஓருறவு உயிர்பிரிந்து சென்றதால், வாடிநிற்கும் நண்பருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் அடியேனின் ஆழ்ந்த அனுதாபங்கள், இறைவனடி இணைந்த ஆத்மா சாந்தியடையவும், இத்துயரிலிருந்து தாங்கள் மீண்டு வரவும், இறையருளை பிரார்த்திக்கின்றேன்.
தங்களுக்கு சமயம் வாய்க்கும்போது தமிழ்ப்பூங்காவிற்கு வருகை தரவும், தங்களுக்கான அடியேனின் நன்றி சமர்ப்பணத்தை ஏற்றுக்கொள்ளவும் தங்களிடம் விண்ணப்பிக்கின்றேன்.
பிரிவின் வலியை சுமந்துகொண்டிருக்கும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், அப்பிரிவை தாங்கும் வலிமையை தர இறைவனை வேண்டுகிறேன். உங்கள் மாமாவின் ஆன்மா நித்ய அமைதியில் துயிலுறவும் வேண்டுகிறேன். விரைவில் மீண்டு வாருங்கள்.
உறவென்னும்
இன்னுயிரை பிரிந்த என் நண்பா.....
இதய வடுக்களை கொஞ்சம்
இளைப்பாற்று...
மீலா துயரில் முழ்கியிருக்கும் உனக்கு
ஆறுதலை சொல்ல ஆளுமை எனக்கு இல்லை
இருப்பினும்...
தங்களூக்கும் தங்கள் சகோதரியின் குடும்பத்திற்க்கும் எனது அழ்ந்த அனுதாபங்கள்.
...மீண்டு வருக....மீண்டும் வருக வலைப்பக்கத்திற்க்கு....
அன்புடன்
மனோகரன்
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.