Wednesday, October 14, 2009

தீபாவளி

தீபாவளி

இன்று
தீபங்களின் திருவிழா...
வெளிச்சத்தின்
வெற்றி விழா..
ஆம்..
இன்று தீபாவளி...?

தீபாவளி என்ன..
உயிர்வதை செய்தவனுக்காய்
ஆண்டுக்கொருமுறை
கொண்டாடப்படும்
கோலாகல
நினைவாஞ்சலியா?!

பாவி,
அவன் பாவம் தொலைய
பாக்கெட் காலியாக
நாம் தரும்
பண்பாட்டு
இலஞ்சமா?!

அரக்கன் அழிந்தாலும்
அவன் குணம் மட்டும்
இங்கே இன்னும்
பாட்டில்களிலும்
அரிவாள்களிலும்
பத்திரமாக..

இருக்கும் காசையெல்லாம்
வாரி இறைத்துவிட்டு
வயிற்றில் ஈரத்துணி
கடைசியாக..

ஒழிந்தது ஒரு நரகாசுரன்..
இங்கே,
தினம் தினம் பிரசவம்
புதுப்புது
நரகாசுரர்கள்..!!

***

வித வித இனிப்புகள்
பலவித பண்டங்கள்
இறைச்சி எல்லாம் உண்டு
வாங்க வாங்க..
Diabetes, BP,
கொலஸ்ட்ரோல்..
எல்லாம் இங்கே இலவசம்
வாங்கி போங்க..

இதுதான் தீபாவளியா?

இதற்காகவா..?
இந்த அவலத்துக்காகவா
இத்தனை அலங்காரம்?
****
துவண்டிருந்த
திரியை தூண்டிவிட்டு
பின் தீக்கிறையாக்குவதா
தீபாவளி..?

இல்லை,
எரிவது உடம்பென்று
தெரிந்தும்
உலகுக்கு ஒளி தரும்
திரியின் தியாகத்தை
போற்றுவதே தீபாவளி..!!!

கோடி தீபங்கள்
சுடர் தந்தாலும்
உள்ளத்தின் இருளில்
சுடரின் சேவை
செல்லாக் காசுதான்..

இனியாவது,

தீபாவளிக்கு
நல்லெண்ணெய் மட்டும்
தேய்ப்பதை விட்டுவிட்டு
நல் எண்ணங்களை
தேய்த்துக்கொள்வோம்..

திரியை மட்டும்
எரிப்பதை விட்டுவிட்டு
உள்ளொளியை
ஏற்றிக் கொள்வோம்!

-K.கிருஷ்ணமூர்த்தி

4 comments:

வியா (Viyaa) said...

என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Tamilvanan said...

//தீபாவளிக்கு
நல்லெண்ணெய் மட்டும்
தேய்ப்பதை விட்டுவிட்டு
நல் எண்ணங்களை
தேய்த்துக்கொள்வோம்..//

ந‌ல்ல‌ க‌ருத்து

கிருஷ்ணா said...

வியா.. உங்களுக்கும் என் இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்..!

கிருஷ்ணா said...

தமிழ்வாணரே.. உங்கள் கருத்துக்கு நன்றி.. அனைவரும் நல்ல எண்ணங்களை உள்ளத்தில் இருத்திக்கொண்டால்.. உலகம் சொர்க்க பூமியாகிவிடும்! இல்லையா?

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs