Sunday, May 19, 2013

பிள்ளைப் பாசம்!

கருவில் தரித்தது..
ஆணா பெண்ணா?
கறுப்பா சிகப்பா?
வலியவனா எளியவனா?
ஆளப் பிறப்பவனா.. இல்லை
ஆட்டி வைக்க பிறப்பவனா..?
எதுவுமே தெரியாமல்
பாசம் வைக்கும் முதல் ஜீவன்
தாய் மட்டுமே!

 
உச்சந்தலையோ
உள்ளங்காலோ..
எது முதலில் வந்தாலும்..
குறைப்பிரவசவமோ
நிரைப்பிரசவமோ..
உயிரோடு பிறக்கிறதோ..
உடல் மட்டும் பிறக்கிறதோ..
எதுவுமே தெரியாமல்..
பிறக்கும் முன்னே
நெஞ்சினில் பாலோடு காத்திருக்கும்..
ஒரே ஜீவன்
தாய்தான்.!

 
அம்மா..
அது என்ன..?
இது என்ன..?
ஏன்..?
என்ன கேள்வி கேட்டாலும்..
எத்தனை முறை
கேட்டாலும்..
குழந்தைக்கு..
சலிக்காமல் பதில் சொல்லும்..
ஒரே உறவு
தாய்தான்..!

 
பிள்ளையின் பராமரிப்பில்
வயதான
ஒரு தாய்..
காருக்கு பின் இருக்கையில்
அமர்ந்து..

‘இது என்ன இடம்பா?’

‘சொன்னா உனக்கு
புரியாதும்மா!’

 
‘இப்போ எங்கே போறோம்?’

 ‘ஐய்யய்யோ!  
கொஞ்ச நேரம்
சும்மா இருங்களேன்..!
பத்து பிள்ளைங்களை
பெத்து வளர்திரலாம் போல..
தொண தொணன்னு!’

அமைதியாக அம்மா..
அப்பொழுதும்
பாசமாக..

‘அம்மாவோட சேமநிதியை
உன் பையன் பேருல எழுதிக்கய்யா!’

இப்பொழுது மட்டும் மகன்..
அமைதியாக..!!
பாசமோ?!
 

     -K..கிருஷ்ணமூர்த்தி

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைக்கு அது தான் பலரின் பாசம்...!

சிறப்பிற்கு சிறப்பு சேர்த்தமைக்கு வாழ்த்துக்கள்...

malar said...

நிஜம்...இருந்தும் கனக்கிறது...

கிருஷ்ணா said...

திண்டுக்கல் தனபாலன், மலர்விழி.. சிரமம் பாராமல் பின்னூட்டு இட்டதற்கு நன்றி! அன்னையர் தினத்தன்று கண்ட சில நிகழ்வுகளின் தாக்கமே அந்த புலம்பல்!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs