
எனது
நாள்காட்டியில்
இன்று,
சுப முகூர்த்தம்..!
இன்று,
ஒரு தென்றலின்
பிறந்த தின விழா..
இரக்கமற்றவர்கள்
வாழ்த்தாவிட்டாலும்
இயற்கை
நிச்சயம் வாழ்த்தும்!
இன்று,
உனக்காகவே..
கோழி கூவாமலே
விடியல் விடிந்ததே..
பார்த்தாயா..?
எதிர்பார்ப்புக்களின்
ஏமாற்றத்தால்
வற்றிவிட்ட விழிகளின்
உயிரில்லாத
உறக்கத்தை
கலைக்க மனமில்லாமல்..
பூபாளம்
மௌனமாக
பாடியதே
கேட்டாயா..?!
ஓ..
தென்றலின்
தாலாட்டில்
தூங்கி விட்டிருப்பாய்..!
காலைக் கதிரவன்
கடுமையாய்
இல்லையே
கவனித்தாயா..?
இன்று மலரும் பூக்கள்
உன்
உதட்டோரப் புன்னகை
காணாமல்..
வாடிவிடக்கூடாதாம்..!
ம்ம்..
என்ன வாட்டம்
என்
கண்ணுக்கு..?
ஒழுக விடாதே!
மறந்து விட்டாயா..?
இன்று
உனக்கு விடுமுறை..
உன்
நியாயமான கோரிக்கை
நிராகரிக்கப்பட்டாலும்..
உன்
எதிர்காலத்தின்
ஏடுகளை
இறக்கமற்றவர்கள்
எரித்துவிட்டாலும்..
உன்
புன்னகைப் பூக்களை
மலரும் முன்பே
மூடர்கள்
மறைத்துவிட்டாலும்..
உன்
கவிதைக் கனவினை
உணர்வற்றவர்கள்
உளி கொண்டு
செதுக்கி விட்டாலும்..
உன்
இலகுவான
இதயத்தில்
இரசாயனக் கலவையை
வார்த்தைகளாய்
வஞ்சகர்கள்
வார்த்துவிட்டாலும்..
உன்
ஓவியக் கண்களை
ஒழுக விடாதே!
உன்
வேல் போன்ற விழிகளை
வேர்க்க விடாதே..!!
இன்று
உனக்கு விடுமுறை..
மறந்து விட்டாயா..?
கவலை வேண்டாம்..
இன்று
உனக்காய்
உன்
விழிகளின்
வேலையை
மாலையில்
வானம் செய்யும்..!!!
K.கிருஷ்ணமூர்த்தி
(வேதனையின் விளிம்பில், ஒழுகும் கண்களோடு வாழ்க்கை நடத்தும் ஒரு துரதிருஷ்ட தோழியின் பிறந்த தின வாழ்த்துப் பா..)
4 comments:
\\காலைக் கதிரவன்
கடுமையாய்
இல்லையே
கவனித்தாயா..?\\
நல்ல கற்பனை.
\\இன்று
உனக்காய்
உன்
விழிகளின்
வேலையை
மாலையில்
வானம் செய்யும்..!!!\\
மிகச்சிறப்பாக வலிகல் உணர்த்தும் வரிகள்
எதிர்பார்ப்புக்களின்
ஏமாற்றத்தால்
வற்றிவிட்ட விழிகளின்
உயிரில்லாத
உறக்கத்தை
கலைக்க மனமில்லாமல்..
பூபாளம்
மௌனமாக
பாடியதே
கேட்டாயா..?!
nalla uvamai
நன்றி சக்தி! இன்றுதான் முதன் முதலில் வருகின்றீர் என்று நினைக்கிறேன்.. மீண்டும் மீண்டும் வருக.. ! பாராட்டுக்களுக்கு நன்றி.. கருத்துக்களுக்கும் மிக்க மிக்க நன்றி!!!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.