பக்தி யோகம்
பகுதி 5
‘நிலவின்’ நினைவுகளோடும்
நிஜங்களின் கனவுகளோடும்
நகர்ந்த
அந்த இரவுகளில்
நித்திரை நிர்மூலமாகிவிட்டது
நிரந்தரமாக..!
“யாரவள்??
ஏன் என்னிடம் முகம் சுளித்தாள்..??”
எப்படி யோசித்தாலும்
முடிவு ஒன்றுதான்..
எப்படியாவது பேசிவிடவேண்டும்
அவளிடம்..!
இமைகள் இளைப்பாறும்
முன்னே
சேவல் கூவியது..
இரவு நிறம் மாறும்
முன்னே
ஆவல் மீறியது..!
விடிந்தும் விடியாத
பொழுதில்
வேட்டைக்குக் கிளம்பும்
நாய்போல..
அவள் நினைவுகளால்
வேகமாய் நடந்தேன்..
நூலகத்தைத் தேடி..
வகுப்புக்களுக்குச் செல்லாதது
வாடிக்கையாகி விட்டதால்..
அன்றும்
வாசற்படி தவம்..!
சிற்றுண்டியைக் கூட
மறந்துவிட்டு..
வார்த்தைகளை
செதுக்கிக் கொண்டிருந்தேன்..
அவளிடம்
என்ன பேசுவது..?
பேசுவாளா..?
இல்லை..
பேசாமல் ஏசுவாளா?
இல்லை..
கண்டும் காணாமல்
என்னைக் காயப்படுத்துவாளா..?
அன்றுவரை..
எந்த பெண்ணிடமும்
பேசியதில்லை நான்..
பேசிய பெண்களையும்
மதித்ததில்லை..!
இன்று மட்டும்,
அவளின் மொழி கேட்க
ஏன் இந்த தாகம்..?
அவளின் விழி நோக்க
ஏன் இந்த தாபம்..?
இளமையின்
இரத்ததின் வெப்பம்
உயிரைச்
சொட்டு சொட்டாய்ச்
சுடும் வலி உணர்ந்தேன்..
அந்த வலியில்
ஒருவித
சுகம் கண்டு வியந்தேன்..
அன்று முதல்
அந்த வலிக்காய்
தவம் கூட கிடந்தேன்..!
அதுதான்
காதல் வலி என்று
பின்னாளில் உணர்ந்தேன்..!!!
அதோ..
காத்திருந்த தாமரைக்கு
கதிரவனின் ஒளிபோல்
அவளின் வருகை..!
அருகே வந்தாள்..
முகத்தில்
வெறுப்புக்கு மாறாக
புன் முறுவல்..!
என்னைக் கண்டதும்
முகம் சுழிப்பாள்
என்று இருந்தேன்..
இதழோரம்
சிரிப்பைச் சிந்தி
என்னைச் சாகடித்தாள்..!
எதார்த்தமாய்ப் பேசி
என்னை
ஏகாந்த இனிமையில்
மூழ்கடித்தாள்..
ஒரு வார்த்தைப்
கூறுவாளோ என்றிருந்தேன்..
ஒரு
கோரிக்கையே வைத்தாள்..!!!
-அவளின் கோரிக்கை அடுத்த பகுதியில்
K.கிருஷ்ணமூர்த்தி
Friday, November 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
kavithai arumai enru oru variyil solla manamillai enralum, enaku atharku male paratta theriya villai nanbarey. mikavum rasiththane. parattukkal
பாராட்டுக்களுக்கு நன்றி நண்பா..!
இது கவிதை மட்டும் அல்ல.. எனது வாழ்க்கையின் சுவடுகள். என் காதலின் கல்வெட்டுக்கள்..!
காதல் என்னும் காட்டிலே
கற்பூர தீபம் ஏற்றிவிட்டீரோ..முன்பு
அந்த காதலை அனையாமல்
ஆனந்த ஜோதி கலக்கவிட்டீரே..இப்பொழுது
ஒரு வாழ்க்கையை கவிதையாய் செதுக்கி.அந்த கவிதைக்கே வாழ்க்கை ப்ட்டுவிட்டீரோ.....தென்றலில் தவந்து வந்த சுகத்தை உங்கள் கவிதையை படித்த பின் உணர்தேன் நண்பரே,
வாழ்க உங்கள் கவிதை நெஞ்சம்.
ஆஹா.. என்னே கற்பனை! அற்புதம்.. நண்பரே.. மனோகரன் கிருட்டினன் அவர்களே.. கவிதைகளுக்கு பின்னூட்டம் இடுவதையே பலர் விரும்பாத போது.. பின்னூட்டத்தை கவிதையாகவே வடித்திருக்கின்றீரே! மிக்க நன்றி தோழா..! வாழ்க தமிழ்!
அருமை...! கவிதையின் நிதர்சனம் வரிகளில் மிளிர்கிறது, உயிரின் உண்மை உணர்வுகள் அபாரம்...! தாமதமாக படைப்பை வாசிக்க நேர்ந்தது எமது துரதிர்க்ஷ்டம், இத்தகைய அற்புதமான படைப்புக்கு பின்னூட்டமிடும் பாக்கியம் கிடைத்தது எமது அதிர்க்ஷ்டம், தாங்களும் தங்களின் மறுபாதியும் மலரும் மணமும் போல, வானும் மண்ணும் போல பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரமாண்டு உலகின் இனிமைகள் அத்தனையும் பெற்று அன்பின் படைப்புகள் பல தந்து நீடூழி நல்வாழ்வு வாழ்க நண்பரே...!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.