Tuesday, March 16, 2010

அத்வைத தாம்பத்யம் (6)

பக்தி யோகம்
பகுதி 6

பல்கலைக்கழக
பொங்கல் இதழில்
பிரசுரமான
என்
கவிதை
“தமிழைப் புறக்கணிக்கும்
தலைமைத்துவம்..”

கேத்தரின்
அதைப்படிக்க
கேட்டு நெகிழ்ந்திருக்கிறாள்
சீதா..

“ரொம்ப நல்லா இருந்திச்சி”
அவள் சொன்ன
அந்த மூன்று வார்தைகளில்
சாகித்திய அகாடமி
பெற்றேன்..!

“எனக்கும் ஒரு கவிதை எழுதுவிங்களா?”

“காத்திருக்கிறேன்”
என்று
உள்ளூர சொல்ல நினைத்தாலும்
அமைதியாக கேட்டேன்..
“எதைப் பத்தி எழுத?”

“வாழ்க்கை..”

காதலை கேட்பாள்..
அல்லது
இயற்கையை கேட்பாள்
என்றெல்லாம் எண்ணிய
எனக்கு..

வாழ்க்கையை
அவள் கவிதையாக கேட்டது
ஆச்சர்யம் அளித்தது..

“நாளைக்குத் தர்றேன்..”
என்றேன் அமைதியாக..

ஒரு நாளில் எழுதுவது
சாத்தியமா
என்று வியந்தாள்..

இப்படி ஒருத்திக்கு
கவிதை எழுதிக் கொடுக்க..
ஒரு நாள் தேவையா?
கவிதை உலகம் பழிக்குமே
என்று
வருந்தியது
அவளுக்கு தெரிய ஞாயமில்லை..!

அன்றைய
அலுவல்களை
அப்படியே விட்டுவிட்டு
‘வாழ்க்கையை’ வடிக்கத்
தொடங்கினேன்..

சில மணி நேரங்களில்
‘வாழ்க்கை’
காகிதத்தில் கனிந்து நின்றது!

*****
இன்னமும் விடியவில்லை..
விழிகளில் துளியும்
உறக்கமுமில்லை..

சூரியக் கிரணங்கள்
பூமியைத் தொடும் முன்னே
என் கால்கள்
நூலகத்தை தொட்டுவிட்டன..

இளஞ்சூரியனின்
சிகப்புச் சிதறல்கள் நடுவே
வானவில்லை அணிந்த
அதே நிலவு
நெருங்கி வந்தது..

என்ன அழகு..
தென்குமரி சூரியோதயம்
தோற்றுவிடும்!

புன்னகை கூட
பேரின்பம் என்று
அன்றுதான் உணர்ந்தேன்..

அந்த புன்னகையின்
விலையாக
கைகளில் கொண்டுவந்த
என்
‘வாழ்க்கையை’
அவளிடம்
அன்றே கொடுத்துவிட்டேன்..!

-‘வாழ்க்கை’ தொடரும்
-K.கிருஷ்ணமூர்த்தி

(இந்த கவிதையில் காணப்படும் கவிதைகள், “தமிழைப் புறக்கணிக்கும் தலைமைத்துவம்”, “வாழ்க்கை” ஆகிய இரண்டு கவிதைகளும் எனது வலைப்பூவில் இருக்கின்றன.)

8 comments:

ஒற்றன் said...

//அந்த புன்னகையின்
விலையாக
கைகளில் கொண்டுவந்த
என்
‘வாழ்க்கையை’
அவளிடம்
அன்றே கொடுத்துவிட்டேன்..!//

சூப்பர் சார்.. :)

கிருஷ்ணா said...

நன்றி நண்பா..

இப்போதெல்லாம் அதிகம் எழுத முடிவதில்லை.. பல அலுவல்கள். வலைப்பூக்களை பறிப்பதற்கு கூட நேரமில்லாமல் தவிக்கிறேன். இதற்கு இடையில்தான், இது போன்ற படைப்புக்கள்..

வேடிக்கை மனிதன் said...

//என்ன அழகு..
தென்குமரி சூரியோதயம்
தோற்றுவிடும்!//

ரசிக்கும் படியான அழகான வரிகள்.
நண்பரே என்ன வலைப் பக்கமே காணோம்?
உங்களது gmail id கிடைக்குமா?

சிவனேசு said...

சிறந்த வர்ணனை, அருமையான வரிகள், மேலும் தொடருங்கள் நண்பரே, பாராட்டுக்களும், நல்வாழ்த்துக்களும்...!

கிருஷ்ணா said...

நன்றி நண்பா.. இப்பொழுதெல்லாம் சற்று அதிகமான வேலைப்பழு.. மாஸ்டர்ஸ் வேறு செய்கிறேன்.. இன்னும் பல அலுவல்கள்.. கடமைகள்.. அதனால் அதிகம் வருவதில்லை. முயற்சிக்கிறேன்..

எனது மின்னஞ்சல் : krishrtm@yahoo.com

கிருஷ்ணா said...

தோழீ.. எனது கவிதைகளுக்கு தவறாமல் பின்னூட்டம் இடும் உங்கள் அன்பு பெரியது. நன்றி!

வேடிக்கை மனிதன் said...

நன்றி நண்பரே

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs