Sunday, May 9, 2010

அத்வைத தாம்பத்யம் (7)

பக்தி யோகம் 7

நூலக நிசப்தத்தின் நடுவே..

எழுதிக் கொடுத்த
'வாழ்க்கை'யை
எழுத்துக் கூட்டிப்
படித்துக்கொண்டிருந்தாள்..

பல்கலைக்கழகத்தில்
எத்தனையோ
ஆங்கிலப் புத்தகங்களில்
ஆங்கில வார்த்தைகளை
தமிழ்ப் படுத்தி படித்திருக்கிறேன்..

அன்றுதான்..

தமிழ் வார்த்தைகளை
ஆங்கிலப் படுத்தி
படிக்கவும் ஆளிருக்கிறதென்று
பெருமிதம் அடைந்தேன்..!

அதற்கு மேலும்
எட்டி நின்று பார்க்காமல்
அருகில் சென்றேன்..

நாணம்..

அந்த ஒரு சொல்லின்
சுயரூபம்
அன்றுதான் முழுதாய்
விளங்கியது!

புன்னகை பூக்கும்
அவள்
அழகு அதரங்கள்
தொட்டாற் சிணுங்கி போல
சுருங்கிக் கொண்டன..

தமிழ் தெரியாமல்
தவித்த கவிதைக்கு
என் கவிதையை
நானே மொழி பெயர்த்தேன்..
நின்று கொண்டே..

கவிதை பேசியது..
"உட்காருங்களேன்.."

"நான் உட்கார்ந்தா
ரெண்டு மணி நேரம்
என்கூட பேசனும்..
முடியுமா..??"

சரி என்று புன்னகை
பதிலளித்தாள்..

அன்று
எங்கள் அளவளாவல்
எட்டு மணி நேரம்
நீடித்தது..!!!

-அளவல் தொடரும்..
K.கிருஷ்ணமூர்த்தி

4 comments:

மனோவியம் said...

நண்பரே...சிறிது காலம் எங்கே சென்றீர்கள்?..அலுவல் அதிகமோ? கவிதை நன்று.

Sathis Kumar said...

பின்னிட்டேள் போங்கோ...

கிருஷ்ணா said...

நண்பரே.. உண்மைதான்.. அலுவலும் அதிகம், அலைச்சலும் அதிகம்.. என்ன செய்வது? இருந்தாலும்.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுத முயற்சிக்கிறேன்.. ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி!

கிருஷ்ணா said...

ஒற்றன்.. எதைப் பின்னினேன்னு சொல்லவே இல்லையே! ஹஹஹ.. நலமா??

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs