காதல்
மனிதனை
பதப்படுத்தும்
பண்படுத்தும்
புண்படுத்தாது..
அது
மனித நேயத்தை
பலப்படுத்தும்
இதப்படுத்தும்..
இடர் படுத்தாது..!
ஆண்பால் பெண்பால்
கலப்பதா காதல்?
அன்பால் இருபால்
இணைவதே காதல்!
வன்முறை களையும்
காதல்
வேறுபாட்டை வெறுக்கும்
காதல்..!
கடவுளையும் வெல்லும்
காதல்..
அந்த காதலை வென்றார்
யாரோ?!
-K.கிருஷ்ணமூர்த்தி
மனிதனை
பதப்படுத்தும்
பண்படுத்தும்
புண்படுத்தாது..
அது
மனித நேயத்தை
பலப்படுத்தும்
இதப்படுத்தும்..
இடர் படுத்தாது..!
ஆண்பால் பெண்பால்
கலப்பதா காதல்?
அன்பால் இருபால்
இணைவதே காதல்!
வன்முறை களையும்
காதல்
வேறுபாட்டை வெறுக்கும்
காதல்..!
கடவுளையும் வெல்லும்
காதல்..
அந்த காதலை வென்றார்
யாரோ?!
-K.கிருஷ்ணமூர்த்தி
3 comments:
காதலை வென்றார் உண்டோ?
தோழீ.. காலத்தை வென்றார் உண்டு.. காதலை?? ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன்.. காதலை வெல்வதை விட்டுவிட்டு.. காதலனின் மனதை வென்றால், காதல் வெல்லும்! இது காதலிக்கு மட்டுமல்ல.. காதலனுக்கும் தான்!
கட்டிப்பிடிப்பதும் ஒட்டிக்கிடப்பதும் மட்டுமல்ல காதல், விட்டுக் கொடுப்பதும், தட்டிக் கொடுப்பதும் காதல்தான்! காமத்தில் காணக்கிடைக்காத இன்பம், பாசத்தில் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்!
"வன்முறை களையும்
காதல்"
unmai. tamilai neengal kaiyandirukkum vitham miga alagu, atharkaga ungalukku oru poongothu.
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.