வண்ண வண்ணக்
கனவுகள்..
எழுதாத
சின்னச் சின்னக்
கவிதைகள்..
மலராத
மல்லிகைப் பூவின்
மொட்டுகள்..
மனதோடு
வருடிச் செல்லும்
மெட்டுகள்..
பிழையில்லா ராகங்கள்..
மழையில்லா மேகங்கள்..
கலையாத
வெள்ளைப் புள்ளிக்
கோலங்கள்..!
தளிர் போன்ற
மேனிகள்..
பின் நாளில்
ஞானிகள்..
எதிர்காலம்
ஏந்திச் செல்லும்
எழில்மிகுந்த
தோணிகள்..!
சிரிக்கின்ற சிற்பங்கள்..
சிதையாத சந்தங்கள்..
கவலைகள் ஏதும் இல்லா
சின்னச் சின்ன தெய்வங்கள்..!
குறையாத குறும்புகள்..
அழகான அரும்புகள்..
பனி தூங்கும்
பஞ்ச வர்ண புஷ்பங்கள்..!
முள்ளில்லா ரோஜாக்களை
தனியே விடலாமா?
முள்ளாக குத்தும் விரல்களை
சும்மா விடலாமா?
பிஞ்சான நெஞ்சங்களில்
நஞ்சை விடலாமா?
கண்ணீரில்,
இவர்கள் கதையை
கரைத்து விடலாமா..?
ஏனிந்த வேதனை?
தீரட்டும் சோதனை..
இனி வேண்டாமே
இதுபோல் என்றும் பூமியில்..!
பொல்லாத பூமியில்..
பூக்கின்ற பூக்களை..
மனம் போல
வாழக் கொஞ்சம்
வழிவிட்டுச் செல்லுங்கள்..!
K.கிருஷ்ணமூர்த்தி
5 comments:
மனதை தென்றலாய் வருடிச் செல்லும் வார்த்தைகள்
தொடர்ந்து படிக்கத் தூண்டிப் போகும் மனங்கவர் சந்தங்கள்
மனங்கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பின்னூட்டுக்கு நன்றி திரு இரமணி அவர்களே.. இன்று காலை ஒரு செய்தியைப் பார்த்து மனம் நெகிழ்ந்து போனேன். தொடர்ந்து வாருங்கள்..
உங்கள் பின்னூட்டே ஒரு கவிதை போல் உள்ளது நண்பரே..!
இதமான கவிவரிகள் வாழ்த்துக்கள்
நன்றி தோழரே..!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.