Saturday, April 4, 2009

நான் செய்த பாவம் என்னையா..?

அநுபல்லவி

ஆயிரம் கோடி பிறப்புகள் எடுத்தேன்..
உன் காலடி சேர முடியவில்லை... உன்
ஆலயம் தோறும் காவடி எடுப்பேன்..
எனக்கினி வேறு வழியுமில்லை..
முருகா..

பல்லவி

நான் செய்த பாவம் என்னையா..?
இந்த மானிட பிறப்பை எடுத்துவிட்டேன்.. –2X
யார் செய்த சாபம் சொல்லையா - இன்னும்
வாழ்க்கையின் பிடியினில் தவிக்கின்றேன்..

(நான் செய்த..

சரணம்

ஒவ்வொரு சஷ்டியும் விரதம் இருந்தேன்..
மனதினில் அமைதியில்லை..
ஒவ்வொரு விடியலும் உனை தொழுதேன்..
உன் அருள் கிடைக்கவில்லை.. X 2

(நான் செய்த..

ஔவையின் தமிழை கேட்டு ரசிக்க..
நேரினில் காட்சி தந்தாய்..
சுட்ட பழம் வேண்டுமா.. சுடாப்பழம் வேண்டுமா
சிறுவனாய் பரீட்சை செய்தாய்..
உன் நாமம் தவிர வேறொன்றும் அறியேன்..
தினம் உனை பாடுகின்றேன்- உன்
திருப்புகழை.. நான் பாடி நீ கேட்க..
ஏன் இன்னும் வரவில்லை..

(நான் செய்த..


இசைவட்டு : புளிசாதம்
பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி
இசை : நாதன்

பாடலை ஒலி வடிவில் கேட்க கீழே சொடுக்குங்கள்..

Ayiram kodi.mp3 -

3 comments:

ஆ.ஞானசேகரன் said...

//இசைவட்டு : புளிசாதம்
பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி
இசை : நாதன் //

பாராட்டுகள் நண்பரே

கிருஷ்ணா said...

நன்றி நண்பரே.. இங்கே இடம்பெறும் அனைத்து கவிதைகளும், பாடல்களும் என் படைப்புக்களே.. ஊக்கத்திற்கு நன்றி..

குமரன் மாரிமுத்து said...

ஓம் முருகா....

காத்திரு மவனே.. முருகன் வந்து கொண்டிருக்கிறார்.. மயிலுக்கு வயதாகிவிட்டதால் சற்று தாமதமாகத்தான் வருவார்....

வாழ்த்துகள்.

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs