குழந்தைச் செல்வம்..
சிலர்
குழந்தைக்காகவே
கூடுகின்றனர்..
சிலர்,
கூடிவிட்டு
குழந்தை என்றால்
ஓடுகின்றனர்..!
பணக்காரர்கள்
வாரிசு வேண்டி..
ஒன்றிரண்டோடு
ஒடுங்கிவிடுகின்றனர்..
சில தினக்கூலிகள்..
வாரிசுகளை
ஆண்டுக்கொன்றாய்
விதைக்கின்றனர்..!
*
இயலாதவர்கள்..
பிள்ளைகள் தலையில்
பழுவை ஏற்றுகின்றனர்..
இயன்றவர்கள்..
பிள்ளைகளையே
பழுவாக்கி விடுகின்றனர்..!
*
முதல்
எட்டு வருடம்
என்ன செய்தாலும்
கொஞ்சல்..!
அடுத்த
எட்டு வருடம்
படிக்கச் சொல்லி
கெஞ்சலோ கெஞ்சல்..!!
பதினாறுக்கு மேல்..
பிள்ளைகளைப் பார்த்து
பெற்றோர் அஞ்சல்..!!!
திருமணம்
முடிந்துவிட்டால்..
பெற்றவர்கள்
அங்கும் இங்கும்
ஆடும் ஊஞ்சல்....!
*
முகச்சாயம்
நகச்சாயம்
எல்லாம் மறந்து..
பிள்ளையின்
முகச்சாயலில்
குளிர் காயும்
தாயுள்ளம்..
விடுமுறை
ஓய்வு
எல்லாம் மறந்து
பிள்ளையின்
எதிர்காலத்தை
ஆசையோடு
அசை போடும்
தந்தையுள்ளம்..
ஆனால்..
எதையுமே
எண்ணாமல்
எதார்த்தமாய் வளரும்
பிள்ளை உள்ளம்...!
ஈ கொசு
அண்டாமல்
இரவு பகல்
பாராமல்
தாலாட்டி வளர்க்கும்
தாயுள்ளம்...
கடனோ உடனோ
வாங்கினாலும்..
சேமநிதி
சேர்த்த நிதி
தீர்ந்து போனாலும்..
பாடுபட்டு
படிக்க வைக்கும்
தந்தையுள்ளம்..
ஆனால்..
படிப்பென்றாலே
கடுப்பாகி
பெற்றோரை வையும்
எத்தனையோ
பிள்ளை உள்ளம்...!!
*
பிள்ளைகள்
பரீட்சைக்குப் போனால்
பெற்ற மனதில்
படபடப்பு..!
பிள்ளைகள்..
சிகிச்சைக்கு போனால்
பெற்ற மனதில்
துடிதுடிப்பு...!!
பிள்ளைகள்
வெற்றி பெற்றால்
பெற்ற மனதில்
குதூகலிப்பு..!
அதே பிள்ளை
தோல்வியுற்றால்..
பெற்ற மனதில்
பரிதவிப்பு...!!!
பிறக்கும் போதே
பிள்ளைகள் மேல்
அளவிலாத எதிர்பார்ப்பு..!
எதிர்பார்ப்புகள்
இடிந்து போனால்..
ஏமாற்றத்தில்
மௌனத் தவிப்பு...!
*
குழந்தையின் அழுகுரல்
அபயக் குரலா..?
அபாயக் குரலா..??
அது
மோகனமா..
இல்லை
முகாரியா..??
குழந்தைச் செல்வம்..
அது
நிறையா குறையா..?
இல்லை
சுகமா சுமையா..??
குழந்தைச் செலவம்..
அது
வரமா சாபமா..?!!
• K.கிருஷ்ணமூர்த்தி
Friday, April 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//குழந்தைச் செலவம்..
அது
வரமா சாபமா..?!!//
இதுவரை வரம் போல் தெரிகிறது... அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொச்சத்தை சொல்கிறேன்..
இன்று போல் என்றுமே உங்களுக்கு அது வரமாகவே இருந்திட பிரார்த்திப்பேன்..
//அது
வரமா சாபமா..?!!//
என் நிலையில் அது வரம்.
எனக்கு ஏற்பட்டால் அது சாபம் :P
நான் மட்டும் தான் நல்லப் பையன்....
முதலில் தமிழில் பிழை இல்லாமல் எழுதுங்கப்பு...அப்புறம் கவிதை எழுதலாம்..
நீங்க எப்பவும் இப்படியே நல்ல பையனா இருக்கனும் விக்கி!
கருத்துக்களைத் தெரிவித்த முகம் தெரியா நண்பருக்கும் நன்றி! பிழைகளைச் சுட்டிக் காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.