அனுபல்லவி
வாடிய பயிரை கண்டபோதெல்லாம்..
வாடினார் வள்ளல் பெருமான்..
ஆடிய உயிரை கொன்ற போதெல்லாம்
கலங்கினார் கருணைக் கடலே..
பல்லவி
உயிர்களை படைப்பது கடவுளடா..
அதை உயிராய் மதிப்பது மனிதமடா.. மனிதமடா.. 2x
இறப்பு என்பது இயற்கையடா.. அதை
உன் கையில் எடுப்பது கொடுமையடா.. (வாடிய..
சரணம்
எளியதை கொன்று வலியது வாழும்..
காட்டில் வாழும் மிருகமடா..
உயிர்களை மதித்து பயிர்களை சமைத்து
உண்டு வாழ்ந்தால் மனிதனடா.. (இறப்பு..
கருணை என்பது கடவுளின் வடிவம்
கருணையை மறந்தால் மிருகமடா..
கருணையை சுமந்து கடவுளை நினைந்து
உருகி வாழ்ந்தால் தெய்வமடா.. (வாடிய..
(உயிர்களை
வாடிய பயிரை கண்டபோதெல்லாம்..
வாடினார் வள்ளல் பெருமான்..
ஆடிய உயிரை கொன்ற போதெல்லாம்
கலங்கினார் கருணைக் கடலே..
பல்லவி
உயிர்களை படைப்பது கடவுளடா..
அதை உயிராய் மதிப்பது மனிதமடா.. மனிதமடா.. 2x
இறப்பு என்பது இயற்கையடா.. அதை
உன் கையில் எடுப்பது கொடுமையடா.. (வாடிய..
சரணம்
எளியதை கொன்று வலியது வாழும்..
காட்டில் வாழும் மிருகமடா..
உயிர்களை மதித்து பயிர்களை சமைத்து
உண்டு வாழ்ந்தால் மனிதனடா.. (இறப்பு..
கருணை என்பது கடவுளின் வடிவம்
கருணையை மறந்தால் மிருகமடா..
கருணையை சுமந்து கடவுளை நினைந்து
உருகி வாழ்ந்தால் தெய்வமடா.. (வாடிய..
(உயிர்களை
- K.கிருஷ்ணமூர்த்தி
பாடல் ஒலி வடிவில்..
Vadiya Payirai.mp3 -
8 comments:
அழகு
கவிதைகள்
நன்றி தோழரே!
வருகைக்கு மகிழ்ச்சி..
பாராட்டினில் நெகிழ்ச்சி..!
மீண்டும் வருக..
தமிழ் வளர்க்கும்
கருத்துக்களை தருக..!
கொல்லாமையை வலியுறுத்தும் நல்ல படைப்பு! வள்ளலார் படித்தால் அவருக்கும் பிடிக்கும்! வாழ்த்துக்கள் நண்பரே!
நன்றி சிவனேசு.. பக்தி பாடல்களும் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக இருந்த ஆசையை நிறைவேற்றி வைத்த 'பாட்டி வைத்தியம்' குணா அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கின்றேன்..
உயிர்களை மதிக்கத்தூண்டும் கவிதை.
மிகச் சிறப்பாக இருக்கு நண்பரே.
கருணையின் மறு உருவமாக அம்மாவையும் சொல்லலாம் என்பது என் எண்ணம்.
என்ன நண்பரே சரியா?
கொல்லாமையை கடைப் பிடிக்க வேண்டும். அன்பு செலுத்துதல் வேண்டும். இது இரண்டும் இருந்தாலே இந்த உலகம் சரியாகிவிடும். அதிகாரம், பணம் இரண்டிற்க்காகவும் உலகம் ஓடிக் கொண்டு இருக்கின்றது.
அன்பு, பாசம் என்ற சொற்கள் வலிவிழந்துவிட்டன.
//கருணையின் மறு உருவமாக அம்மாவையும் சொல்லலாம் என்பது என் எண்ணம்.
என்ன நண்பரே சரியா?//
தாயின் காலடி சொர்க்கம் என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார். தாயைப் போற்றாத ஞானிகளே இல்லை.. பெண்களை பேய்கள் என்று சொன்ன சித்தர்கள் கூட தாய்மையை பழித்ததாக நான் அறியவில்லை..! ஆக.. உங்கள் கூற்று மிகச் சரியானது.. மாற்று கருத்தே இருக்க முடியாது நண்பரே..!
இராகவன் அவர்களே.. உண்மைதான். அன்புதானே மனிதம்..! என்னைப் பொறுத்தவரை, எல்லா மதங்களும் நல்ல விஷயங்களைத்தான் சொல்லிக் கொடுக்கின்றன.. ஆனாலும், மதச் சண்டையும் இனச் சண்டையும் நடந்துகொண்டே தான் இருக்கிறது! J.கிருஷ்ணமூர்த்தி சொன்னதுபோல், உலகில் மதங்களே இல்லாமல் இருந்திருந்தால், உலகம் இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்கும்..!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.