Saturday, June 27, 2009

இதயமே..


இதயமே..

நிமிடத்திற்கு
எழுபத்திரண்டு முறை
துடிக்கிறாயே..

நீயும்
கர்ம யோகிதான்..!

உனக்கு
தீங்கு செய்தாலும்
நன்மை செய்தாலும்..
உன்னால் இயன்றவரை
இயங்குகிறாய்..

இதயமே..!

நீ மட்டும்தான்..
வாலிபம்
குறைய குறைய
உழைப்பை
உயர்த்துகிறாய்..!

உழைப்பை உயர்த்தி
எங்கள்
நாட்களை குறைக்கிறாய்..!

நீ
துடிப்பதால்
உயிர் வாழ்கிறதா?

உயிர்
இருப்பதால்
நீ துடிக்கிறாயா?

புரியாத புதிர்...

எது எப்படியோ..

என் இதயம்
துடிப்பது மட்டும்
எப்பொழுதும்
என்னவளின்
நினைவுகளாலேயே..!

என்
இருதயத்தின்
இரத்த நாளங்களில்..
அழுத்தம்
குறைவதும் அவளாலே..

அதுவே
அவ்வப்போது
அதிகரிப்பதும் அவளாலே..!!

ஓன்று மட்டும்
உறுதி..

என் இதயம்
விட்டு விட்டு
துடிக்கலாம்..

ஒருபோதும்
அவளை
விட்டுவிட்டுத்
துடித்ததில்லை..!!

• K.கிருஷ்ணமூர்த்தி

10 comments:

வேடிக்கை மனிதன் said...

//என் இதயம்
விட்டு விட்டு
துடிக்கலாம்..

ஒருபோதும்
அவளை
விட்டுவிட்டுத்
துடித்ததில்லை..!!//

காதலில் விழுந்து விட்டீர்களென்று நினைக்கிறேன், இல்லையென்றால் கவிதை இவ்வளவு சிறப்பாக வந்து இருக்காது.
வாழ்த்துக்க்ள்

கிருஷ்ணா said...

பதினைந்து வறுடங்களாக காதலிக்கிறேன் நண்பா.. என் மனைவியை!

//என் இதயம்
விட்டு விட்டு
துடிக்கலாம்..

ஒருபோதும்
அவளை
விட்டுவிட்டுத்
துடித்ததில்லை..!!//

இதுதான் அவளிடம் நான் சொன்ன முதல் துண்டு கவிதை! அதைத்தான் இப்போதும் சற்று 'இழுத்து' எழுதினேன்.. இரசித்தமைக்கு நன்றி!

sivanes said...

என் இதயம்
விட்டு விட்டு
துடிக்கலாம்..

ஒருபோதும்
அவளை
விட்டுவிட்டுத்
துடித்ததில்லை..!!

வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்களை பாடவைத்தவருக்கும்!(சும்மா சொல்லக்கூடாது சூப்பரான வரிகள்! )

கிருஷ்ணா said...

நன்றீங்க சிவனேசு.. எனது கவிதைகளின் முதல் இரசிகையும் அவள்தான்.. முதல் விமர்சகரும் அவள்தான். தமிழ் படிக்கத் தெரியாமலேயே விமர்சிக்கும் திறம் கொண்டவள்.. அவளால்தான் என் தமிழ் மெருகேறியது.. எங்களைப் பொருத்தவரை.. உலகத்திலேயே மிகவும் அன்னியோன்னியமான, மிகச் சந்தோஷமான தம்பதிகள் நாங்கள்தான்! இதை உணர்வுப் பூர்வமாக சொல்கிறேன்..

கிருஷ்ணா said...

எங்களின் காதல் கதையை.. எனது இன்னொரு வலைப்பூவில் (www.krishnausj1.blogspot.com) எழுதப் போகின்றேன்.. யாம் பெற்ற இன்பம் இவ்வுலகம் பெற்று உய்ய வேண்டும் என்று.. நாங்கள் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் என்பதை கட்டுரையாக வடிக்கலாம் என்று நினைக்கிறேன்.. அதே வேளை.. அதையே, தொடர் கவிதையாக எழுதலாம் எனவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.. உங்களைப் போன்றவர்களின் ஆலோசனை தேவை.. :)

sivanes said...

நல்ல முயற்சி நண்பரே, விரைவில் எதிர்பார்க்கிறோம், கண்டிப்பாக எழுதுங்கள், வாழ்த்துக்கள்!

மனோவியம் said...

அருமையான புதுக்கவிதை வாரிகள் நண்பா.உங்கள் கவிதையில் நல்ல உயிரொட்டமும் அழகு த்மிழும் மிளிர்கின்றனா......
நீ
துடிப்பதால்
உயிர் வாழ்கிறதா?

உயிர்
இருப்பதால்
நீ துடிக்கிறாயா......வாழ்த்துகள்.

கிருஷ்ணா said...

//அருமையான புதுக்கவிதை வாரிகள் நண்பா.உங்கள் கவிதையில் நல்ல உயிரொட்டமும் அழகு த்மிழும் மிளிர்கின்றனா......//

நன்றி நண்பா.. உங்களைப் போன்ற நல்லுள்ளங்கள் தரும் ஆதரவும் ஊக்கமும் அதற்கு ஒரு காரணம்.. நன்றி!

சிவா said...

///என் இதயம்
விட்டு விட்டு
துடிக்கலாம்..

ஒருபோதும்
அவளை
விட்டுவிட்டுத்
துடித்ததில்லை..!!///

மிக அழகான வரிகளுடன் உங்களின் காதல் தலை நிமிர்ந்து நிற்கிறது..

அதிக வேலைப்பளுவின் காரணமாக நீண்ட நாட்கள் உங்களின் கவிதைகளை தரிசிக்க வர இயலவில்லை..

மீண்டும் இணைந்து விட்டேன் கவித்தமிழின் கவிதைகளுடன்...

கிருஷ்ணா said...

வாருங்கள் சிவா..! வாங்க... உங்களைப் போன்ற தோழர்களின் ஊக்கம்தான் என் எழுத்தின் எரு! தொடர்ந்து படியுங்கள்.. எனக்கும் நேரமின்மை எனும் அதே பிரச்சனைதான்! என் செய்ய? கடவுளே நினைத்தாலும் காலத்தை நிறுத்த முடியாதே!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs