(இது முற்றிலும் உண்மைச் சம்பவங்களைக் கொண்ட வரலாற்றுப் பூர்வமான எனது காதல் கதை. இது யாரையும் புண்படுத்தவோ, கேலி செய்யவோ எழுதப்பட்டது அல்ல.)
பக்தி யோகம்..
பகுதி 1
அவள்
அவன்
அவள்..!
அவன்
அவள்
அவன்..!
அத்வைத தாம்பத்யம்!
அவள் நானாகி
நான் அவளாகி
ஓருயிராய்
ஒருமித்து இருக்கிறோம்..
இறையோடு கலந்து
இறையாகினால்
அத்வைதம்..
என்னோடு கலந்து
நானாகிளாள்..
அத்வைத தாம்பத்யம்!
*
அது ஒரு கனாக்காலம்..
இளமை இரத்தத்தைப்
பரிசோதித்துப் பார்த்த
விழாக்காலம்..!
மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
1995
மூன்றாம் ஆண்டில்
நான்..
முதல் ஆண்டில்
அவள்..
பெண்களிடம் பேசாதவன்
நான்..
ஆங்கிலத்தில் அவ்வளவாக
பரீட்சயம் இல்லாததால்..
பெண்களிடம் பேசாதவன்
நான்..!
அதென்ன,
பல்கலைக்கழக பெண்கள்
தாய்மொழிக்கு
தடை விதித்து விட்டனரா?!
வரட்டுக் கோபம்...
என்ன கஷ்டம்..?
பேசப் பேசப் பழகிவிடும்..
எனது அருமை சீனியர்..
திரு!
அது சரி..
தவறாக பேசிவிட்டால்?!
ஆண்களாவது பரவாயில்லை,
பெண்களிடம் இரகசியம் தங்காதே!
எதற்கு வம்பு!
பெண்களிடம்
பேசுவதில்லை..
விட்டது தொல்லை...!
===> தொடரும்..
Monday, July 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அன்பின் கிருஷ்ணா,
உங்கள் அத்வைத காதலில் ஆதி சங்கரரே தோற்றார் போங்கள்... :)
நண்பா..அவர்கள் காட்டிய வழிதான் நம் வழி! ஹஹ வாழ்க்கையை அணு அணுவாய் இரசித்துக் கொண்டிருக்கிறேன்.. அதனால்தான் இப்படி! மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும்.. கணவன் மனைவியை எப்படி நடத்த வேண்டும்.. புரிந்துணர்வு என்றால் என்ன.. இது போன்ற விஷயங்களை, எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசை.. அதனால் ஒரு தம்பதியாவது அன்னியோன்யமானால்.. அதுவே என் வெற்றி!
//அவள் நானாகி
நான் அவளாகி
ஓருயிராய்
ஒருமித்து இருக்கிறோம்//
ஆரம்பமே தூள்! தொடரட்டும் நண்பரே..., வாழ்த்துக்கள்!
சூப்பரான ஆரம்பம் அண்ணா...
அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்..
விரைவில் போடுங்க :)
//எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசை.. அதனால் ஒரு தம்பதியாவது அன்னியோன்யமானால்..
அதுவே என் வெற்றி!//
அண்ணண் மனசு தங்க மனசு :)
வாங்க சிவனேசு..
இந்த தொடரில், முழுக்க முழுக்க உண்மைகளை மட்டுமே எழுதப் போகிறேன்.. எங்கள் காதல் கதையை திறந்த புத்தகமாக்க இருக்கின்றேன்.. அதனால், உண்ர்ச்சிப் பூர்வமாக எழுதுகிறேன்.. அது உங்களைப் போன்றவர்களையும் கவரும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது!
மலர்விழி.. அண்ணி ஜொலிக்கும் வைரம்! ஹஹ
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.