
(டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன் மண்ணுலகை விட்டு மறைந்த அன்று, அவருக்காக நான் எழுதிய கவிதை பின் ரகுவின் 'மோகனம்' என்ற குருந்தட்டில் பாடலானது. அந்த பாடல் வரிகளை கவித்தமிழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..)
இமயம்
இமயம் ஒன்று வீழ்ந்து போனதே..
இயற்கை அன்று ஓய்ந்து போனதே..
விழிகளில் ஈரம்.. இதயத்தில் சோகம்..
சிகரம் ஒன்று சாய்ந்து போனதே..
சிங்கம் ஒன்று சோர்ந்து போனதே..
சிதையினில் வீரம்.. சிதைந்திடும் நேரம்..
உறங்கிடு வீர சிங்கமே.. இரு விழி மூடி..
ஓய்வெடு நீ செவாலியே.. அமைதியை நாடி..
இது நனவா.. வெறும் கனவா..
உணர்த்திட யாரும் இல்லையே..
இது குளமா.. நைல் நதியா..
விழிகளில் மீதமில்லையே..
கலைமகனே.. கதறுகிறோம்..
உயிர்களின் ஓலம் இன்னும் ஓயவில்லையே..
தலைமகனே.. தமிழ்மகனே
விடைபெறும் நேரம் நெஞ்சம் தாங்கவில்லையே..
கலைமகளே கதறுகிறாள்..
உனையன்றி சேவை செய்ய யாரும் இல்லையே
கலை உலகின்.. சுடரொளியே..
உனையன்றி பாதை சொல்ல நாதியில்லையே..
மறைந்திடுமா உனது புகழ்..
தமிழ் உள்ள காலம் மட்டும் காதில் கேட்குமே..
ஓய்ந்திடுமா.. உனது அலை
கலை உள்ள காலம் மட்டும் காற்றில் வாழுமே...
பாடலை முழுதும் கேட்க இங்கே சொடுக்குங்கள்..
Imayam - Jerry Retnam
பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி
இசை : ஜெர்ரி இரத்னம்
குரல் : ரகு
(பி.கு: ஜெர்ரி இரத்னமும் நானும் இணைந்த இரண்டாவது இசைக் குறுந்தட்டுதான் ரகுவின் மோகனம். இதற்கு முன் சலனம் என்னும் இசைத்தட்டில் தான் முதன் முதலாக நான் பாடல் இயற்றினேன்.. அந்த இசைத்தட்டு, மலேசிய இசைத்துறையில் ஒரு இசைச் சலனத்தை ஏற்படுத்தியதும் மறக்க முடியாத அனுபவம்.. ஜெர்ரி இரத்னம் மலேசிய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் TV3 நடத்திய Muzik Muzik நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அதே தொலைக்காட்சி நிறுவனத்தில் இசையமைப்பாளராகவும், ஒலி காப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.)
8 comments:
அருமை!
நன்றிங்க ஜோ..!
நடிப்புத்துறைக்கு மட்டுமல்லாது ரசிகப்பெருமக்களுக்கும் அவரது இறப்பு ஈடு இழப்புத்தான்.
சிறப்பான கவிதை.
இன்னும் பல கவிதைகள் உங்கள் வலைத்தலத்தில் படிக்க விருப்பம் தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே
உண்மைதான் நண்பரே.. பல வரலாற்று நாயகர்களை நம் கண் முன்னே இயல்பாக நடித்துக் காட்டி அசர வைத்த ஒரே கலைஞன்.. அவர்தான்.. வீரபாண்டிய கட்டபொம்மனாக.. அப்பராக.. இராஜ இராஜ சோழனாக.. வேறு யார்தான் நடித்திருக்க இயலும்?! அவர் அவர்தான்..!
தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னன் செவாலியே சிவாஜி அவர்களின் வீரபாண்டியகட்டபொம்மன், திருவிளையாடல் என மேலும் எண்ணற்ற திரைக்காவியங்கள் வழி அவர் அந்த கதாபாத்திரங்களாகவே மாறி இன்றும் நம்மோடு வாழ்வதாகவே தோன்றுகிறது, தங்கள் படைப்பு நன்று, பாராட்டுக்கள்!
நன்றி சிவனேசு..! கவனித்தீர்களா? உங்கள் பெயரில்.. சிவனும் ஏசுவும் இனைந்திருக்கிறார்களே! இதுவும் அத்வைதம் தான்..
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
அன்பரே, நீண்ட நாட்களாக உங்களை வலையுலகத்தில் காண முடியவில்லையே?
வேலைப்பளு அதிகரித்து விட்டதா..
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.