பக்தி யோகம்
பகுதி 3
கேத்தரின்..
என் காதல் அத்தியாயத்தின்
ஆணிவேர்!
பெண்களைக் கண்டு
பொழுதுபோக்கியவனை
பழுது பார்த்தவள்..
என்னைத் தன்னிடம்
பேச வைத்தவள்..
என்னோடு பேசியவள்..
எனக்கு என்னை
அடையாளம் காட்டியவள்..
ஆம்..
என்னவளை எனக்கு
அடையாளம் காட்டியவள்..!
கேத்தரின்..
வெள்ளை மனம்
பிள்ளை குணம்..
நிமிடத்திற்கு மூன்று
கேள்விகள் கேட்கும்
தொல்லை-ரணம்..!
எப்படி
தமிழையும் இனிமையையும்
பிரிக்க முடியாதோ..
அப்படித்தான்..
கேத்தரினும் கேள்வியும்..!
மும்பை எக்ஸ்பிரஸ்
படத்தில்
தூங்கிவிட்டு..
கிளைமாக்ஸில்..
"என்ன ஆச்சு..?"
"இவன் எப்படி இங்க?"
"ஐயோ.. இது யாருலா..?"
இது..
தொல்லையில்லாமல்
வேறென்ன..?
இருந்தாலும்..
வெள்ளை மனம்
பிள்ளை குணம்..
கேத்தரின்..
எனது
முதல் பைக்கை..
இரவல் வாங்கி..
பழுதாக்கி..
பாதையிலே விட்டு வந்ததும்..
சுப்பு லட்சுமி சொல் கேட்டு
என்
பெரு விரல் நகத்தை
படார் என்று உடைத்ததும்..
பரிமளாவின் காரில்
பக்கத்து பல்கலைக்கழகம் சென்றதும்..
பின்னால் மட்டுமன்றி..
புகை
நான்கு புறத்திலும் வர..
ரேடியேட்டரைப் பார்க்கச் சொன்னால்
ரேடியோவைப் பார்த்ததும்..!
இறுதியில்..
'hand brake'-ஐ
எடுக்காமல் ஓட்டியதால்
எழுந்த புகை அது என்று
என்னிடம் மட்டும் சொன்னதும்..!
அப்பப்பப்பா..!
எல்லா கலைகளும்
அறிந்தவள் கேத்தரின்..!
என் காதல் அத்தியாயத்தின்
ஆணிவேர்!
எனக்கு 'என்னை'
அடையாளம் காட்டியவள்..
===> அடையாளம் காட்டிய கதை அடுத்த பகுதியில்..
எது காதல்? -அத்தியாயம் 1
5 years ago
10 comments:
என் காதல் அத்தியாயத்தின்
ஆணிவேர்!
பெண்களைக் கண்டு
பொழுதுபோக்கியவனை
பழுது பார்த்தவள்..
கேத்தரி மட்டுந்தான் மெய்யாலுமா படிச்சிசுன்னு கொஞ்சம் சேத்துருக்குலாமே அப்பு....
//கேத்தரின்..
வெள்ளை மனம்
பிள்ளை குணம்..
நிமிடத்திற்கு மூன்று
கேள்விகள் கேட்கும்
தொல்லை-ரணம்..!//
எல்லாவற்றிற்கும் கா`ரணம்` கேட்க்கும் என்னவளின் சாதியைச் சேர்ந்தவர் உங்கள் காதலி(துனைவி) என்று நினைக்கிறேன்.அழகு வார்த்தைகள் கோர்த்த விதம் கொள்ளை அழகு.
கவிக்கிழவன் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை.. இருந்தாலும் பின்னூட்டத்திற்கு நன்றி!
குமரா, உண்மைதான்.. ஆனா.. கேத்தரின் கூட இன்னும் சில பேரும் படிச்சாங்கப்பு! நாம படிக்கலை.. அதான விஷயமே!
வேடிக்கையப்பா! கேத்தரின்.. என்னவளை எனக்கு காட்டியவள் ஐயா.. என்னவள் அல்ல! 'என்னை' எனக்கு காட்டியவள் என்றாள்.. அத்வைத தாம்பத்யத்தில்.. நான் வேறு என்னவள் வேறு அல்ல.. என்னவளை எனக்கு காட்டியதால்.. என்னை எனக்கு காட்டியவள் என்று சொன்னேன்..! என்னவளின் பெயர் சீதாலட்சுமி! குழப்பிவிடாதீர்கள்! ஹஹஹ
அத்வைத தாம்பத்யம் நன்று
சுய சரிதையை படிக்கும் உணர்வு இல்லாமல் ஒருவரின் டைரியை படிக்கின்ற உணர்வாய் மேலோங்குகிறது.
உண்மையை உள்ளபடி சொல்வது சில நேரங்களில் கடினம், ஆபத்து. உங்கள் துணிச்சலை பாராட்டுகின்றேன்.
அத்வைத என்பதற்கு அர்த்தம் என்ன?
தமிழ்வாணன் அவர்களே.. வருக வருக.. உங்கள் பாராட்டுக்கு நன்றி.. அத்வைதம் என்றால்.. மூலம் ஒன்று.. கடவுளும் நாமும் ஒன்று.. நான் கடவுள்.. என்பது போன்று எடுத்துக் கொள்ளலாம்.. அதாவது.. மனிதன் இறைவனடி சேர்கிறான் என்பது துவைதம் (dualism), மனிதன் கடவுளாகிறான் என்பது அத்வைதம்..
இப்போ கதைக்கு வருவோம்..! என் காதலி.. என் மனைவி எல்லாம் இல்லாமல்.. அவளே நான்.. நானே அவள்.. என்று ஒருமித்து இருக்கிறோம் என்பதாலேயே.. அத்வைத தாம்பத்யம் என்று பெயரிட்டோம்.. இதில் அவளுக்கு பங்குண்டு.. நாங்கள் இருவருமே இரசித்து.. உணர்ந்து.. இந்த பெயரை இந்த தொடருக்கு சூட்டினோம்.. எனது ஒவ்வொரு இடுகையையும் ஆர்வத்தோடு படிக்கச் சொல்லி கேட்பாள்.. என்னவள்.. இன்னும்.. நாங்கள் சந்தித்துக் கொண்ட அத்தியாயம் வரவில்லை.. அது 'இராஜயோகம்' என்று வரும்.. ஹஹ
//எனக்கு என்னை
அடையாளம் காட்டியவள்..
ஆம்..
என்னவளை எனக்கு
அடையாளம் காட்டியவள்..!//
வார்த்தையும்,வரியும் கண்ணுக்கு அழகு!
அதன் கருத்தும் எழுத்தும் கவிதைக்கே அழகு!
நன்றிங்க சிவனேசு! அர்த்தத்தை சரியாக புரிந்து கொண்ண்டமைக்கும்.. தவறாமல் படித்து பின்னூட்டம் இடுவதற்கும்.. உங்கள் தோழி என்னவானார்?
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.