தீக்குளிக்கிறாள்..
பேதை
அவளுக்கு
வேறென்ன தெரியும்..?
ஒரு சீதை
தீக்குளிக்கிறாள்..
அவளின்
வழக்குமன்றத்தில்..
நீதி தேவதையின்
செவிகள்..
செதுக்கப்பட்டு விட்டன..!
இங்கே..
நீதிபதிதான்
வாதி..
மனம் கல்லாய்ப்போன
சுயநலவாதி..!
சாட்சிக் கூடத்திலோ..
ஊமை இராமன்..!
பேதை அவள்
வேறென்ன செய்வாள்..??
ஒரு சீதை
தீக்குளிக்கிறாள்..!
- K.கிருஷ்ணமூர்த்தி
2 comments:
//அவளின்
வழக்குமன்றத்தில்..
நீதி தேவதையின்
செவிகள்..
செதுக்கப்பட்டு விட்டன..!//
செதுக்குதல் என்பது உண்டு என அர்த்தம் கொல்லும் இல்லையா... நீதி தேவதைக்கு தெரியக்கூடாது என்பதற்காக அடைக்கப்பட்டன என்று தானே சொல்ல வருகிறீர்கள்...
விக்கி,
//செதுக்குதல் என்பது உண்டு என அர்த்தம் கொல்லும் இல்லையா... //
அர்த்தம் கொல்லும் = அர்த்தப்படும் என்று கொள்வதா? அல்லது அர்த்தத்தை கொன்றுவிட்டது என்று கொள்வதா?! ஹஹ..
செதுக்குதல் என்பது நீக்குதல் என்றுதானே பொருள்படும்?
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.