வீடில்லை
கூடில்லை..
வாடகை
தரவும் காசில்லை..
சோறில்லை
நீறில்லை
சோதனைக்கு
ஓர் எல்லையில்லை..
ஊனில்லை
உறக்கமில்லை
என் உயிரே
எனக்கு சொந்தமில்லை...!
ஏடில்லை
எழுத்தில்லை..
ஏட்டுக்கல்வியும்
எனக்கில்லை..
மானமில்லை
ஈனமில்லை
மேனியிலே
நல்ல துணியுமில்லை..
கூனுமில்லை
குருடுமில்லை
ஆனாலும்
குடித்தனம்
எனக்கு தேவையில்லை..!
வேலையில்லை
வெட்டியில்லை
வேதனையை
சொல்லி அழ யாருமில்லை..
அழகில்லை
அறிவுமில்லை..
ஆறுதல் சொல்லவோர்
நாதியில்லை..
கண்ணனில்லை
மன்னனில்லை
உன்
காதலுக்கு
ஏற்றவன் நானில்லை..!!
K.கிருஷ்ணமூர்த்தி
எது காதல்? -அத்தியாயம் 1
5 years ago
6 comments:
பாட்டுவடிவில் நன்றாக உள்ளது
நண்பர் ஆ.முத்துராமலிங்கம் அவர்களுக்கு என் நன்றி!
//கண்ணனில்லை
மன்னனில்லை
உன்
காதலுக்கு
ஏற்றவன் நானில்லை..!!//
நான் அவன் இல்லை
ஹஹஹ... நானும் அவன் இல்லை!
//அழகில்லை
அறிவுமில்லை..
ஆறுதல் சொல்லவோர்
நாதியில்லை..//
வாடாதே நண்பா... உன் அழகைப் பாட நான் முன்வருகிறேன்!!!
This is beautiful!!!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.