- பாவை நான் இங்கிருக்க..
தொட்டில் உறங்க வைச்சு
- துணை சேர காத்திருக்க..
கட்டில் கதை படிக்க
- கண் முழிச்சி வேர்த்திருக்க..
தட்டில் பால் பழமும்
- மாமனுக்கு காத்திருக்க..
"யாரோ தானே மாமியார்
- எனக்கு என்ன தேவையா..?
மோரோ கூழோ கொடுப்பாங்க
- மூத்தவரு கிட்ட அனுப்புங்க..
ஊரோ உலகோ பழிச்சாலும்..
- ஒன்னும் கெட்டுப் போகாது..
காரோ வீடோ வாங்கிப்புட்டா..
- கடுதாசி போட்டு அழைச்சிக்கலாம்..!"
தலையணை மந்திரம் நான் போட
- தாயும் மகனும் பிரிஞ்சாங்க..
சிலையென என்னைக் கண்டவுடன்
- சிந்தனை எல்லாம் இழந்தாக..
சரியென அண்ணன் வீட்டுக்கு
- சாயங்காலம் போனாக..
விதியென எண்ணி அத்தையுந்தான்,
- விம்மிக் கொண்டே போனாங்க..!
ஆவி கொதிப்பதை நான்
- ஆருகிட்ட சொல்லி அழ..?
பாவி மனுசன் அவன்
- இன்னும் வந்து சேரலையே!
கூவி விடிய வைக்க
- கோழியுந்தான் வந்திருச்சே..
- தேவருந்தான் போனதெங்கே..??!!
-K. கிருஷ்ணமூர்த்தி
(இது வெறும் கற்பனைக் கதைக் கவிதையே. அன்னையை கூட்டிக்கொண்டு போன கணவன் வீடு திரும்பவே இல்லை. மாமியாரையும் பெற்ற தாய் போல போற்றுவதே நமது பண்பாடு.. .)
4 comments:
அசத்தலான கவிதை. இரசித்தேன்... :)
நன்றாகவே இரசித்-தேன்
நன்றி விக்கி.. ஜமால். படிப்பதோடு நில்லாமல் அடிக்கடி பின்னூட்டம் தருவதால் என் எண்ணங்களுக்கு எருவூட்டுகின்றீர்கள்! நன்றீ!
nalla karpanai kavithai...
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.