இறைவன் என்றும் ஒன்றானான்.. அவன்
அருளும் போது இரண்டானான்.. X 2
மூன்று காலமும் வாழ்கின்றான்.. அவன்
மூன்று குணங்களும் தானானான்..
அன்பு, அறிவு ஆற்றல்..
இறைவன் என்றும் ஒன்றானான்.. அவன்
அருளும் போது இரண்டானான்..
நான்கு வேதத்தில் வாழ்கின்றான்.. அவன்
நான்கு திசையும் ஆள்கின்றான்..
சீலம் நோன்பு செறிவு அறிவு..
இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..
படைத்தல் காத்தல்
அழித்தல் துடைத்தல்.. மறைத்தல்
ஐந்து தொழில்கள் செய்கின்றான்..
ஐந்து புலன்கள்.. ஐந்து பூதங்கள்..
என்று எதிலும் ஐந்தானான்..
இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..
ஆறு வழிகள் அவனடி சேறும்..
ஆறு மதமும் அவன் புகழ் கூறும்..
ஓரறிவாயினும் ஆறறிவாயினும்
அனைத்து உயிர்க்கும் முதலானான்..
இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..
ஏழு அண்டமும் அவனுள் அடங்கும்..
ஏழு பிறப்பும் அவன் சொல்லி பிறக்கும்..
எட்டு குணங்களும் அவனுள் இருக்கும்.. ஆ.. - X 2
எட்டு சித்தியும் அவனிடம் கிடைக்கும்.. X 2
இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..
பாடலாக்கம்:
K.கிருஷ்ணமூர்த்தி
(எங்களின் புளிசாதம் எனும் இசைத்தட்டுக்காக, திருமந்திரத்தின் முதல் மந்திரத்தைத் தழுவி இயற்றிய பாடல் இது.)
பாடல் ஒலி வடிவில்..
Iraivan.mp3 -
எது காதல்? -அத்தியாயம் 1
5 years ago
2 comments:
ஆகா.. நண்பா...
உனக்காக ஒரு காவி உடையை நானே நெய்கிறேன்... காத்திருப்பேன்....
'நக்கல்' நண்பா..
"இன்று போய் நாளை வா.. உன் கனவு மெய்ப்படும்!"
இன்றொரு பேச்சு நாளை ஒரு பேச்சல்ல.. தினமும் ஒரே பதில்தான்.. ;0)
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.