பல்லவி
நாயகனே.. விநாயகனே.. -2x
நலங்கள் சேர்க்கும் நாயகனே.. -2x
தூயவனே.. எனை ஆள்பவனே
துதிக்கை உடைய தூயவனே.. (நாயகனே
சரணம்
ஒரு புறம் புத்தியை ஏந்தி..
மறு புறம் சித்தியை ஏந்தி
பிரணவமாக இருப்பவனே.. ஆ.. –2x
துதிக்கையில் பிரணவத்தை காப்பவனே.. (நாயகனே
பார்வதியால் சாபம் பெற்ற
நந்திதேவன் குறையும் நீங்க.. -2x
அருகினை அவனிடம் ஏற்றவனே
ஜெயம்தரும் அருகம்புல் நாயகனே
வியாசருடன் சபதம் செய்து..
பாரதம் எழுதச் சென்று..
தந்தத்தை தந்த தயாளனே
அபயம் அருளும் ஆண்டவனே.. (நாயகனே
இடுப்பினில் அரவம் கொண்டு..
குண்டலினி சக்தியை தந்து..
அங்குசத்தால் குறைகள் தீர்ப்பவனே..
முதலே.. மூஷிக வாகனனே .. (நாயகனே
இசைத்தட்டு : புளிசாதம்
பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி.
இசை : நாதன்
பாடல் ஒலி வடிவில்..
Nayaganey.mp3 -
எது காதல்? -அத்தியாயம் 1
5 years ago







4 comments:
இந்த பாடல் வரிகளையே தினமும் தோத்திரமாக படிக்கலாம் போலிருக்கிறது.. பஜனை குழுக்களுக்கும் பக்தர்களுக்கும் இந்த பாடல் ஒரு நல்ல விருந்தாகும்..
மிக்க நன்றி நண்பரே! பாடல் ஒலி வடிவில் இருக்கிறதே.. கேட்டீரா?
ஆம் கேட்டேன்.. மிகவும் பிடித்திருந்தது. பஜனைக் குழுவில் இருந்த அந்தப் பழைய இனிய நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டேன்.
மிக்க மகிழ்ச்சி நண்பரே! என்னைப் போன்ற கலைஞர்களுக்கு இது போன்ற வாழ்த்துக்களும் கருத்துக்களும் மிக அவசியம். குறைகள் இருப்பின், அதைச் சுட்டினாலும் அதையும் வரவேற்பேன். எத்தனையோ இசைத்தட்டுக்களுக்கு பாடல் எழுதியிருந்தாலும், இந்த பக்தி இசைவட்டுக்கு பாடல் எழுதும் வாய்ப்பை பாக்கியமாகவே கருதுகிறேன். கருத்துக்களுக்கு மிக்க நன்றி..
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.