Wednesday, July 8, 2009

அத்வைத தாம்பத்யம் (2)

பக்தி யோகம்
பகுதி 2

பெண்களுடன்
பேசுவதில்லை..
பெண்களை
பேசாமலும் இருந்ததில்லை..!

புத்தனுக்கு
ஒரு
போதிமரம்..

எனக்கு
புத்தகசாலையின்
வாசலில் இருந்த
படிக்கட்டுகள்..!

எனக்கு
பின்னாளில்
கவிதை வந்ததும் அங்குதான்
காதல் வந்ததும் அங்குதான்..!!

படிக்கட்டுகளில் அமர்ந்து
பெண்களின்
உடற்கட்டுகளை
அளவெடுத்ததும் அங்கேதான்..

நட்புப் படிகளில்
ஏறி..
வாழ்க்கையின்
பாடத்தைக் கற்றதும்
அங்கேதான்..!!!

நண்பர்கள்
எனக்கு இட்ட பெயர்
'குருஜீ'

எத்தனையோ கேலிகள்..
எத்தனையோ கிண்டல்கள்..

இருந்தாலும்
பெண்களிடம் மட்டும்
பேசுவதில்லை..!

உடன் படித்த
சுப்பு லட்சுமி..
ஆங்கிலத்தில் ஏதோ கேட்க
மருபடியும்
மௌன சாமியாராய்
நான்..!

பேசாததால்
பெண்களிடம் கிடைத்த
பட்டம்..
'கெட்டவன்'..!

ஏண்டா..
பேசித் தொலையேன்..!

நண்பர்கள் திட்டல்..!

"அட போடா..
பெண்கள் நிலா மாதிரி..
தூரத்தில் மட்டும்தான் அழகு!
அருகே சென்றால்
அத்தனையும் அவஸ்தை!"

இது
அவர்களுக்கு நான் சொன்ன
பதிலா..
இல்லை..
எனக்கு நானே சொல்லிக்கொண்ட
பதில்..!
பொய்யான பதில்..!!!

===> மௌனம் தொடரும்..

9 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

sivanes said...

//நட்புப் படிகளில்
ஏறி..
வாழ்க்கையின்
பாடத்தைக் கற்றதும்
அங்கேதான்..!!!//

நன்று...

கிருஷ்ணா said...

செய்திவளையத்திற்கு நன்றி!

கிருஷ்ணா said...

இரசித்தமைக்கு நன்றி சிவனேசு..

குமரன் மாரிமுத்து said...

ஆகா... சுப்பு லெட்சுமியை நினைவு கூர்ந்ததற்கு நன்றி நண்பா...அன்று உம்மைப் பார்த்து வசைபாடிய சுப்பு லெட்சுமி இன்று உமது கவிதையில்...

கிருஷ்ணா said...

ஹஹ.. குமரா.. சுப்பு லெட்சுமி வசைபாடியதாக ஞாபகமில்லை.. ஆனால், முனுமுனுத்ததும்.. முகத்தை சட்டென்ற்று வெட்டிக் கொள்வதும்.. மரைமுகமாக என்னுடன் வாதம் செய்ததும்.. இன்னமும் நினைவில் நீங்கா பசுமைகள்.. அடுத்து கேத்தரின் பற்ற்றி எழுதப் போகிறேன்.. ஹஹஹ.. அவரும் இதைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது இன்னமும் சுவாரஸ்யம்..

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் said...

தாம்பத்யம் துவைதம்!
அத்வைதம் என நினப்பில் 'கூட'

அத்வைத தாம்பத்யத்தில் ஏகனாக
வாழ்த்துகிறேன், அனேகர் இன்னும்
வாழ்த்துவர்.

மனோவியம் said...

//"அட போடா..
பெண்கள் நிலா மாதிரி..
தூரத்தில் மட்டும்தான் அழகு!
அருகே சென்றால்
அத்தனையும் அவஸ்தை!"

....அனுபவம் பேசுகிறது....உங்கள் கவிச்சுவை...நன்று,,நன்று நண்பா

//புத்தனுக்கு
ஒரு
போதிமரம் -
இந்த சித்தனுக்கு எந்த மரமோ?????

கிருஷ்ணா said...

நண்பர் வாசுதேவனுக்கு வணக்கம்.. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

வாங்க மனோ..

இயற்கையோடு இயந்ததுதானே வாழ்வு! ரசித்தமைக்கு நன்றி..!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs