நிலவே நீ பெண்ணாக வேண்டும்..
- நட்சத்திரங்கள் கண்ணாக வேண்டும்..
இளவே னில்நீ நடந்துவர வேண்டும்..
- இளமை சுகங்கள் கடந்துவர வேண்டும்..
மலரே!என நான்வியக்க வேண்டும்..
- மனதில் வந்து மயக்க வேண்டும்..
நிலமே உன்னை ரசிக்க வேண்டும்..
- நீஎன்னில் மட்டும் வசிக்க வேண்டும்..
கைவளை சத்தம் கேட்டிட வேண்டும்..
- கனிந்த முகத்தில் விழித்திட வேண்டும்..
சைகையில் என்னை அழைத்திட வேண்டும்..
- சிறுவன் என்னை குளிப்பிக்க வேண்டும்..
கைவிரல் கொண்டு துவட்டிட வேண்டும்..
- காதில் காதல்கதை சொல்ல வேண்டும்..
மைவிழி மெல்ல மலர்ந்திட வேண்டும்..
- மௌனம் கலைந்து சிரித்திட வேண்டும்..
தலைமுடி எண்ணிப் பார்க்க வேண்டும்..
- தாமரை இதழ் சுவைத்திட வேண்டும்..
சிலைமேனி என் விரல்தீண்ட வேண்டும்..
- சீலை களைய சினுங்கிட வேண்டும்..
கலைமான் கண்கள் கவிழ்ந்திட வேண்டும்..
- காமன் கலைகள் பயின்றிட வேண்டும்..
களைப்பால் உன்மடி சாய்ந்திட வேண்டும்..
- காலைப் பொழுதில் உறங்கிட வேண்டும்..
-K.கிருஷ்ணமூர்த்தி
7 comments:
///காலைப் பொழுதில் உறங்கிட வேண்டும்..///
வேலைக்கு போற ஐடியா இல்லையா?
///காமன் கலைகள் பயின்றிட வேண்டும்///
இதுக்கு என்ன பாஸ் அர்த்தம்? விளக்கமுடியுமா?
///தலைமுடி எண்ணிப் பார்க்க வேண்டும்///
நட்டுவச்ச முடியா, இல்ல மிச்சம் உள்ள முடியா?
சிவா.. நீங்க திருமணம் ஆனவரா? ஆனவர் என்றால்.. விளக்கம் அளிக்கிறேன்.. ஹாஹா..
இந்த கவிதையில்.. என் தினசரியும் அடங்கி இருப்பது உண்மை! கற்பனை கலந்திருப்பதும் உண்மை.. எது நிஜம்.. எது நிழல் என்பதை விவரிக்க இயலாமல்தானே கவிதையாக வடித்திருக்கின்றேன்!..
///தலைமுடி எண்ணிப் பார்க்க வேண்டும்///
பெண்களின் கூந்தலில் இயற்கை மணம் உண்டா இல்லையா என்று பட்டி மன்றமா கேட்டேன்.. இருக்கின்ற தலை முடியின் அழகை.. மனதில் 'எண்ணி', கைகளால் 'எண்ணி' அதனை ஆராதித்து.. விரல்களால் வருடி.. அவள் எண்ணத்தை திருடி.. அந்த தலைமுடி அவள் முகத்தில் படும்போது சிலிர்த்திடும் அந்த அழகையும் நெருடி ரசிக்க வேண்டும் என்பதே பொருள்.. இன்னும் எழுதினால்.. காமக் கட்டுரையாகிவிடும் என்பதால்.. மேட்டரை இத்தோடு நிறுத்துகிறேன்.. இன்னும் ஐயம் இருந்தால்.. மின்மடல் எழுதவும்..
திருமணமானவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்.. திருமந்திரத்தில் உள்ள கருத்தரிப்பு பகுதியை ஒரு முறை படித்துவிடுங்கள்.. நல்ல பிள்ளைகளை பெற..!
ஒரு உண்மை.. மேலே இருக்கும் படத்தில் இருப்பது.. என் ஆருயிர் மனைவி! பாருங்க.. ரசிங்க.. ஆனால்.. என்னுள் மட்டும் வசிப்பவள் அவள்.. அதுவும் கவிதையின் வரியில் வருகிறது..
இது எல்லோருக்கும் அமையாது. நீங்கள் கொடுத்து வைத்தவர். அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. நல்லா இருக்குங்க. நல்லா இருக்கு!
எப்படி அப்பு இருக்கீக...
வர வர ஒரேஏஏஏஏ காதல் காற்று அடிக்கிற மாதிரித் தெரியுதே..
//தலைமுடி எண்ணிப் பார்க்க வேண்டும்//
இதில்தான் சின்ன்னனன சந்தேகம்.. யார் முடியை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அவ்வளவு தெளிவாக இல்லை.. அதனால் என் கற்பனை வேறு பக்கம் சிறகடிக்கிறது...
//சீலை களைய சினுங்கிட வேண்டும்//
இங்கேயும் சிறு சந்தேகம்..வீட்டிலே நம் பெண்கள் சேலை கட்டுவதில்லையே.. வெளி நிகழ்வுகளுக்குப் போகும் பெண்கள்தானே இப்போதெல்லாம் சேலை அணிகிறார்கள்... அதனால்... வேண்டாம்.. என் சிறகுகளை முடக்கிக் கொள்கிறேன்.
குமரா.. இந்த ஊமைக்குசும்புதான் உங்ககிட்ட என்னை கவர்ந்த விஷயம்!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.