அது
இல்லாமல் இருக்க
நாம்..
இறையும் அல்ல..
அதைச்
சுட்டுபவர்கள்
நக்கீரர்களும் அல்ல..!
குறைகளை களையவே
மனிதப் பிறப்பு..
குறைகளை
களைந்துவிட்டால்
இனி ஏது பிறப்பு..??
இங்கே..
யாருக்கு இல்லை
குறை..?
குறையுள்ளவந்தானே
நிறையைத் தேடி
அலைகிறான்..
பையின் கணம்
குறையும்போது
பணத்தைத் தேடி
அலைகிறான்..
அனைக்கும்
அன்பு
குறையும்போது
காதலைத் தேடி
அலைகிறான்..
உடலில்,
வாலிபம்
குறையும்போது
வாழ்க்கையைத் தேடி
அலைகிறான்..
வாழ்க்கையின்
வாலிபம்
குறையும்போது
கடவுளைத் தேடி
அலைகிறான்...!!!
நண்பா..
குறைகளைக் கண்டு
குரைப்பதும்..
நிறைகளைக் கண்டு
நகைப்பதும்..
இயந்திர மனிதனின்
இயற்கை..
அதைச்
சிலர் செய்யாதிருப்பதுதான்..
செயற்கை..!!
குறைகளின்
குணங்களை
குறிப்பறிவதை விட்டுவிட்டு..
குறைகளில்
நிறையைக் காண்போம்..
எழுந்து வா....!!!!!!!
K. கிருஷ்ணமூர்த்தி
Friday, March 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மிக அழகாகச் சொன்னீர்கள். வரிகள் அனைத்தும் அழகு. தொடருங்கள்.
நன்றி தோழீ.. எல்லா கவிதைகளையும் வாசித்து சிரமம் பாராமல் மறுமொழி இருவதற்கு நன்றீ!!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.