Thursday, March 12, 2009

அடுத்த நூற்றாண்டு

தெருக்களில் அன்று தாய்ப்பால் விற்கும்,

  • தாவரங்களுக்கும் தனி வீடு இருக்கும்..

சுறுசுறுப்பு இரயிலில் வாழ்நாள் விரையும்,

  • சுகாதாரத்திற்காய் சொத்தெலாம் அழியும்..

கறும்புகை முகிலில் அமிலங்கள் பொழியும்,

  • கரியமிலவாயுவில் பிராணமே கரையும்..

திருமணச் சேர்க்கை தெருவினில் நிகழும்,

  • தெய்வங்கள் கூட தோன்றிட தயங்கும்.. !!

அன்று.. தெய்வங்கள் கூட தோன்றிட தயங்கும்..!!!

-K. கிருஷ்ணமூர்த்தி


4 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

// * சுகாதாரத்திற்காய் சொத்தெலாம் அழியும்..

கறும்புகை முகிலில் அமிலங்கள் பொழியும்,//

இது இப்பவே ஆரம்பிச்சுடுச்சி... வேண்டுமென்றால் ஒன்று நடக்கும்...
அக்சிஜன்கள் கடைகளில் மட்டும் விற்பனையாகும் :))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//தெருக்களில் அன்று தாய்ப்பால் விற்கும்//

இப்போதே தாய்ப்பால் என்றால் என்ன என்று தெரியாமல் தான் 80 வீதம் குழந்தைகள் வளர்கிறது.

பிறகு எப்படித் தெருவில் விற்கும்.
அப்படி என்றால் என்ன?? என்று கேட்பார்கள் என்பதே பொருந்தும்.

கிருஷ்ணா said...

// * சுகாதாரத்திற்காய் சொத்தெலாம் அழியும்..

கறும்புகை முகிலில் அமிலங்கள் பொழியும்,//

உண்மைதான் விக்கி.. இனி, சொகுசுக்காய் சம்பாதிப்பதை விட, சுகாதாரத்துக்காய் எல்லொரும் சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதே என் கருத்து.

இனி, மழையில் நனைந்தால் சளி பிடித்து காய்ச்சல் காண்பது போய்.. மரணமே ஏற்படும் நிலை வரும் என்ற கவலை எனக்கு!

நண்பர் யோகன் அவர்களே..
//தெருக்களில் அன்று தாய்ப்பால் விற்கும்//
இன்றிருக்கும் நிலையில், தாய்ப்பால் தர தாய்க்குலம் தயங்குவதால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துகொண்டே போகிறது. எதிர்காலத்தில், தாய்ப்பாலுக்கு கிராக்கி அதிகரித்தால், அதையும் வியாபாரமாக்க.. தாய்மார்களையும் வரிசையில் நிற்க வைத்து கறந்து விற்பார்கள் என்றே எழுதி இருக்கிறேன்..

உங்கள் ஆதங்கத்தில் உண்மை உள்ளதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.. நன்றி!

Anonymous said...

சுகாதாரத்திற்காய் சொத்தெலாம் அழியும்...

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs