Tuesday, March 17, 2009

அவமானம்

வேசிக்கு
வெகுமானம்
வயது இருக்கும் வரை..
தாசிக்கு
தன்மானம்
தாழ் போடும் வரை..

வேங்கைக்கு
அவமானம்
வேழம் வாழும் வரை..
வேரலுக்கு
அவமானம்
நாதம் தோன்றும் வரை..

விண்ணுக்கு
அவமானம்
நிலவு தோன்றும் வரை..
மண்ணுக்கு
அவமானம்
பயிர்கள் வாடும் வரை..

பெண்ணுக்கு
அவமானம்
பெண்மை மூடும் வரை..
கண்ணுக்கு
அவமானம்
காட்சி தோன்றும் வரை..

மருந்துக்கு
அவமானம்
காயம் ஆறும் வரை..
பருந்துக்கு
அவமானம்
பதுங்கி வாழும் வரை..

நண்பா..
நமக்கு
அவமானம்..
மடிந்து வாழும் வரை..!

அனுதினம் சாவது ஏன்..?
ஒருதினம் சாவது மேல்..!!!

--K. கிருஷ்ணமூர்த்தி

8 comments:

து. பவனேஸ்வரி said...

என்ன சொல்ல வருகிறீர் நண்பரே? புரியவில்லை.

குமரன் மாரிமுத்து said...

என்ன சாமி... காவி கட்ட தொடங்கியாச்சி போலருக்கு.....

)) ஹி ஹி ஹி

Anonymous said...

//நண்பா..
நமக்கு
அவமானம்..
மடிந்து வாழும் வரை..!


அனுதினம் சாவது ஏன்..?
ஒருதினம் சாவது மேல்..!!!//

"இந்த அனுதின சாவு நம் வரும்தின வாழ்வுக்கோ?”

கிருஷ்ணா said...

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே!

//"இந்த அனுதின சாவு நம் வரும்தின வாழ்வுக்கோ?”//

உண்மைதான்.. இருந்தாலும்..சில நேரங்களில் நாம் அடகுவைப்பது நமது இன்றைய வாழ்க்கையை மட்டுமல்ல.. நம் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையையும் சேர்த்துத்தான் என்பது என் தாழ்மையான கருத்து.

ஏன் என்று கேட்காவிட்டால் ஞானம் இல்லை..
கடமைகளை தட்டிக் கழித்தால் முன்னேற்றம் இல்லை..
உரிமைகளை விட்டுக்கொடுத்தால் வாழ்க்கையே இல்லை..

Anonymous said...

”ஏன்” என்று கேட்டால் முடக்கி விடுகிறார்களே...

”பார்” என்று நினைத்துக் கொண்டு நகர வேண்டிய கால கட்டாயத்தில் தல்லப் பட்டிருக்கிறோம்.

நம் சமுதாயத்தினர் அனைவரும் ஒற்றுமையோடு செயல் பட்டால் அந்த பலமே நமக்கு போதுமே..

நம் இனத்தை எங்கோ கொண்டு போய் விடலாம்.

நம் கோவில்களிலும் சமுதாய முன்னேற்ற கருத்தரங்குகள் நடத்தனும் நம் இனத்தினருக்கு தூண்டுகோள்கள் வேண்டுமே.அதை யார் செய்யனும்?
யாராவது எங்காவது ஆரம்பிக்கனும்
இப்படி படிப்படியாக நல்ல விஷயங்கள் நம் நாடு முழுவதும் பழக்கத்துக்கு வரனும் நம் இனத்தினரிடையே

இளைஞர்களாக இருக்கும் நாம் யேன் இப்படி பட்ட விஷயங்களை உருவாக்க கூடாது?

நம் இனத்துக்கு ஏதாவது செய்யனும் சார்.

நாம் யாரவது ஆரம்பித்து விட்டால்தானே அது பரவும்

அந்த தலைவர் செய்வார் இந்த தலைவர் செய்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்தோமனால் நேரம் விரயம் காலம் ஓடும் சாதித்தது ஒன்னுமில்லாமல் போகும்

உங்களைப் போல் உணர்வு உள்ள ஆய்ரம் ஆயிரம் பேர் உள்ளனர்
எல்லாரும் ஒன்று சேர்ந்தால் சாதனை படக்கலாம் நிச்சயம்

நட்புடன் ஜமால் said...

\\நண்பா..
நமக்கு
அவமானம்..
மடிந்து வாழும் வரை..!

அனுதினம் சாவது ஏன்..?
ஒருதினம் சாவது மேல்..!!!\\

அருமையா இருக்கு இவை ...

கிருஷ்ணா said...

அறிமுகமில்லா முகமே.. உங்கள் கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன். உங்கள் மின் முகவரியை எனக்கு தந்தால்.. ஆவன செய்ய ஏதுவாக இருக்கும்.. எனது மின்மடல் krishnacsb@gmail.com

கிருஷ்ணா said...

நட்புக்கரம் நீட்டும் ஜமால் அவர்களே.. உங்கள் தமிழோடு கைகுலுக்க எனக்கும் உடன்பாடுதான். வாழ்க தமிழ்.. வளர்க நம் நட்பு!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs