எங்களின் வலியை சுமந்து..
எங்களின் விதியை நினைந்து..
எங்களின் கதியை உணர்ந்து..
உன்
இதயம் வலிக்கிறது..
எங்களின்
இதயம் கணக்கிறது..!
அண்ணா..
நாதியற்ற
சமுதாயத்திற்காய்
குரல் கொடுத்தாய்..
இன்று
நாதியற்று..
அயல்நாட்டில் கிடக்கிறாய்..
நன்றி இருக்கும்
ஒவ்வொரு
தமிழனுக்கும் தெரியும்..
நீ..
பயத்தால் ஓடவில்லை..
பாசத்தால் ஓடினாய்..!
நீ புலி..
பதுங்கினாய்..
பாய்ந்தாய்..
இன்னமும் பாய்வாய்..
எங்களுக்குத் தெரியும்.. !
பாரதத்தில்..
உன்னைக் கண்டு..
உள்ளுக்குள்ளேயே
'ஒன்னுக்கு' போன
தலைவர்களுக்கும்
தலைவர்களுக்கும்
அது தெரியும்..!
ஊமைத்
தோழர்கள் கூட
உனக்காய்
உரிமைக்குரல் எழுப்புகின்றனர்..
மேடைப் பேச்சு
அரசியல்வாதிகள் மட்டும்..
மலடுகளாய்
மௌனிக்கிறார்கள்..!!
அண்ணா...
உன் இதயம்..
வித்தியாசமாக
வீங்கவில்லை..
எங்களின்
விதியை
எண்ணி எண்ணி
வீங்குகிறது..!!
"சமபந்தி"
கிடைக்காத சமுதாயத்தை
எண்ணி.. எண்ணி..
சமமில்லாமல் வீங்குகிறது..
எங்கள்
இருதயத்தின்
இரத்த நாளங்களில்..
அன்று
அழுத்தம் குறைந்ததும்
உன்னாலே..
அதுவே இப்போது
அதிகரிப்பதும்
உன்
நிலையாலே..!!!
உன்
பெயர் சொன்னால்..
அரசியல்வாதிகளுக்கு
ஆத்திரம் வருகிறது..
ஆண்டவனுக்கோ..
அதிர்ஷ்டம் வருகிறது..!!!
ஆம்..
அர்ச்சனைச் சீட்டுகள்
எல்லாம்..
இங்கே
உனக்காக
தீர்ந்து விடுகின்றனவாம்..!
ஆருயிர் அண்ணா..
என்றும்..
எங்கள் இதயம்
விட்டு விட்டு துடிக்கலாம்..
ஒரு போதும்..
உன்னை
விட்டுவிட்டு துடித்திடாது..!!
***
கண்ணீருடன்..
நம்பிக்கையுடன்
உனக்காய்
பிரார்த்தனை
செய்யும்
தம்பி..-K.கிருஷ்ணமூர்த்தி
9 comments:
\\உனக்காய்
பிரார்த்தனை
செய்யும்
தம்பி..\\
நாங்களும்.
நன்றி ஜமால்..!
”உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
இவரின் நிலையைப் பார்த்ததும் இந்த வரிகள் வரிசைக் கட்டுகின்றன மனதில்.
கிருஷணா சார்,
உங்கள் வரிகள் இவர் நிலையை மிகவும் உணர்வு பூர்வமாக சொல்கின்றன.
அழகான வரிகள் உணர்வுபூர்வமான வார்த்தைகள்.
தொடருங்கள்...
உங்கள் பிராத்தினையுடன் நானும் இருப்பேன்.
பிரான்ஸிஸ் சைமன்
http://bryanisaac.blogspot.com
தங்களின் இக்கவிதையை இண்ட்ராஃப் வலைத்தளத்தில் பதிவேற்றியிருக்கிறேன்.
//என்றும்..
எங்கள் இதயம்
விட்டு விட்டு துடிக்கலாம்..
ஒரு போதும்..
உன்னை
விட்டுவிட்டு துடித்திடாது..!!//
மனதைத் தொடும் வரிகள்...
நண்பா.. மிகச் சிறந்த வரிகளைத் தந்திருக்கின்றீர். வாழ்த்துகள்.
வாழும் காலத்திலேயே கண்ட மனித புற உடல் போர்த்திய தெய்வங்கள் வேதமூர்த்தி - உதயக்குமார். அவர்களோடு அவர்களைத் தந்த குடும்பத்தாரும் என்றென்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுவோம்.
வணக்கம்,
தங்கள் வலைப்பதிவைக் கண்டேன். மகிழ்ச்சி. இச்செய்தியினை எந்தவொரு மாற்றமும் செய்யாமல் எமது வலைப்பதிவில் வெளியிடலாமா? அனுமதித்தால் இதே செய்தி எமது தளத்திலும் இடம்பெறும்.நன்றி
முகம் தெரியா நண்பரே.. தாராளமாக இந்த கவிதையை உங்கள் வலைப்பதிவில் இட்டுக்கொள்ளுங்கள்.. ஆட்சேபனை இல்லை..
Hi,
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.