பக்தி யோகம்
பகுதி 4
அது ஒரு குளிர்காலம்..
வெள்ளைத் தாமரை
விண்ணில் மலர்ந்தது போல்..
வெள்ளி நிலவு..
அந்த
வெண்ணிலவின் பிம்பம்
பட்டுத் தெரிப்பதுபோல்..
மண்ணுலகில்
மானுட நிலவுகள்..
மங்கையர் வடிவினில்..
ஒரு
அலுவல் காரணமாய்
கேத்தரினுக்காய் காத்திருந்தோம்
நானும் நண்பன் ரமேஷும்..
ஏழாம் விடுதியில்..
அன்று வரை
கேத்தரின் மட்டும்தான்
எனது பெண்தோழி..
சொன்ன நேரத்தில்
கேத்தரினும் வந்தாள்..
அலுவல்
ஐந்து நிமிடங்களில்
முடிந்தாலும்
அரை மணி நேர அரட்டை..
அப்பொழுதுதான்..
அந்த அதிசயம் நிகழ்ந்தது!
வானத்தில்
ஆயிரம் நட்சத்திரங்கள்
மின்னினாலும்
நிலவு மட்டும் ஒன்றுதான்..
அந்த ஒரு நிலா
தன்னந்தனிமையில்
பூமியில்
உலா வந்தால்..??
நிலவுக்கு
முகம் மட்டுமே உண்டு..
இந்த நிலவுக்கு
முகமும் உண்டு..!
என் அதிர்ஷ்டம்..
அந்த நிலா
கேத்தரினுக்கு
பரிட்சயமான நிலா..!
“யாரது..?”
இன்னமும் நான் கேட்கவில்லை..
“அதுதான் சீதா..”
கேத்தரினின் மழலை..
இராமாயணத்தில்
கவிச்சக்ரவர்த்தி கம்பனின்
கற்பனையை
அன்று
நான் கண்ணெதிரே கண்டேன்..!
கேள்வி நாயகி கேத்தரினால்
எங்களின்
அறிமுகப் படலம்
ஆரம்பமானது..
அருகில் வந்த நிலா
பேசியது!
“ஹாய்..
ஐ எம் சீதாலட்சுமி..”
நண்பனை சாதரணமாக
பார்த்த அந்த நிலவு..
என்னைப் பார்த்ததும்
முகம் சுளித்தது..!
காரணம்..
வேறென்ன..? நான்தான்..
நிலாக்களை நகைப்பதுதானே
என்
பொழுது போக்கு..!
என் அருமை பெருமை எல்லாம்
அறிந்த நிலவு அது போலும்..!
“இவங்ககிட்ட பேசினிங்க..
உங்க வண்டவாளம் எல்லாம்
தண்டவாளத்தில் ஏறிடும்..!”
கேத்தரின் சீதாபுராணம் பாடினாள்..
சீதா ஜாதகம் பார்ப்பாளோ..?
ரமேஷ்
கையை நீட்டினான்..
“எனக்கு எப்படி இருக்கு பாருங்க..”
நிலா முகத்தில் ஒரு சலனம்..!
“கையெல்லாம் பார்க்க தெரியாது..
இராத்திரி ஆயிடுச்சி..”
இழுத்தாள்..
கரடி நான்தான்
என்று
எனக்கே தோன்றியது..!
ஏமாற்றம்
எங்கள் இருவருக்கும்..
தடுமாற்றம்
நிலவுக்கு..
கண்ணெதிரே
நிலவு வந்தும்..
அன்று
எனக்கு மட்டும் அமாவாசை..!!
===> அறிமுகப் படலம் தொடரும்..
Friday, July 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சூரியனே நிலவைப் புகழ்வது சுகமாகத்தான் இருக்கிறது படிப்பதற்கு! அன்பு சீதாவிற்கு எனது வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள் நண்பரே!
கவிதை சிறப்பு.
// தடுமாற்றம்
நிலவுக்கு..//
நிலவு
தன் சூரியன் எதுவென்று கண்டு கொண்டு விட்டதா... ( சரி சரி அடுத்த கவிதை வரைக்கும் பொறுத்திருப்போம்).
இல்லை
கரடியை கண்டதாலா ...( இப்ப படத்தில உள்ளதை விட தாடி அப்ப அதிகமா இருந்திருக்குமோ )
It's the beautiful poem that I have ever read....brings lots of sweet memories!
Keep up your good work!I will wait for the part5..
Cheeras,
Catherine
வணக்கம் சிவனேசு.. இந்தப் புகழ்ச்சி எல்லாம் அவளின் அழகுக்கு ஈடில்லை என்பதே என் எண்ணம்.. என்னைப் பொருத்தமட்டில்.. சீதா மட்டுமல்ல.. புன்னகையை தன்நகையாக உடுத்தி இருக்கும் அத்தனை பெண்களும் அழகுதான்..! அதே நகையை அணிந்திருக்கும் அத்தனை ஆண்களும் கவர்ச்சிதான்..!!
தமிழ்வாணன்.. நிச்சயமாக கரடியை கண்ட தடுமாற்றம்தான்..! அப்பொழுது இந்த குறுந்தாடி கூட கிடையாது.. மழித்த கரடி! ஹஹ உண்மைக் கதையை எழுதுவதால்.. நான் எதையும் மறைக்க விரும்பவில்லை..! என் வாழ்க்கையும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும் என்ற ஆசைதான்..!
Hi Cat.. Is that you? If so, Welcome to my virtual home! If not the Catherine whom found me my 'life', happy reading..!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.