Monday, March 2, 2009

தாஜ்மஹால்

உன்னை,
காதல் சின்னம்
என்கிறார்கள்
சில,
கல்நெஞ்சக்காரர்கள்..

உன்னைப்
புகைப்படமாக்கி..
புனித காதலுக்கு
பரிசளிக்கிறார்கள்
பைத்தியக்காரர்கள்..!

சுயநலக்காரன்
ஷாஜஹானை
சரித்திரத்தில் வைக்கின்றன
சில,
ஜடங்கள்..!!!

நீயே சொல்..
மும்தாஜின் சமாதியா நீ..???!!
இல்லை..
உன்னைக்
கொஞ்சம் புரிந்தவன்
சொல்கிறேன்..

உனக்கு
உயிர்தந்த
ஆயிரமாயிரம்
தச்சர்களின்
சமாதி நீ..

கோடிக்கணக்கில்
இல்லத்துக் கிழத்திகளை
நடைபிணங்களாக்க்கிய
பாவத்தின்
சின்னம் நீ...!

மும்தாஜ்
மீண்டும் உயிர்பெற்றிருந்தால்..
காதலர் 'கோர்ட்டில்'
உன்னிடம்
விவாகரத்து கோரியிருப்பாள்..

தன்,
தூய காதலை
மாசுபடுத்திவிட்டான் என்று..
மான நஷ்ட வழக்கு
தொடுத்திருப்பாள்..!!

காதல் கொலைகாரன்
ஷாஜஹானை
எண்ணெயிலிட்டு
வாட்டச்சொல்லி..
எமனுக்கும்..
கருணை மனு
போட்டிருப்பாள்..!

இறுதியில்..
பாவத்தில்
தன் பங்கு தொலைந்திட
தீக்குளித்திருப்பாள்
அந்த
தெய்வப் பெண்...!!!

-K.கிருஷ்ணமூர்த்தி

(இது யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கவிதை அல்ல.. )










9 comments:

Anonymous said...

தாஜ்மஹாலைப் பற்றிய யாரும் எழுதத் துணியாத ஒரு எதிர்மறையான கருத்துடன் கவிதை, மிக மிக அருமை.

கிருஷ்ணா said...

நன்றி நண்பரே! தாஜ்மஹாலுக்கு இன்னொரு (புராதண) சரித்திரமும் உண்டு என்பதை படித்திருக்கிறேன். ஆனால், நாகரிகம் கருதி அதைத் தொட்டு எழுதவில்லை..

Sathis Kumar said...

அன்பின் கிருஷ்ணா,

த‌ங்க‌ளைப் போல‌வே தாஜ்ம‌ஹாலை காத‌ல் சின்ன‌மாக‌ ஏற்றுக் கொள்ள‌ ம‌றுப்ப‌வ‌ன் நான். அதேவேளை இக்க‌லைப்ப‌டைப்பான‌து சாஜகான் க‌ட்டிய‌த‌ல்ல‌ என்ப‌த‌ற்கான‌ வ‌லுவான‌ ஆதார‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. நீங்க‌ளும் அதை அறிந்திருப்பீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன். தாஜ்ம‌கால் முன்னொரு கால‌த்தில் என்ன‌வாக‌ இருந்த‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரிய‌வில்லை..

கிருஷ்ணா said...

ஆம் நண்பரே.. அதைத்தான் நானும் மறைமுகமாக சொல்லி இருந்தேன் என் பின்னூட்டத்தில்.. காதல் புனிதமானது.. காதல் என்ற பெயரில் நடக்கும் எந்த கொடூர செயலையும் ஞாயப்படுத்த முடியாது! காதலுக்கே இப்படி என்றால்.. மதங்கள் பெயரால் நடக்கும் கொடுமைகளை என்சொல்வது???

Anonymous said...

எமது அன்பிற்கும், மரியாதைக்குமுரிய தமிழ் நெஞ்சங்களே.....

எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி, பட்டவொர்த் டேவான் ஹாஜி அகமட் படாவி மண்டபத்தில் நடைபெறவிருக்கும் "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தைப் பற்றிய விவரங்களை தங்களது வலைப்பதிவுகளில் பதிவிட்டு, இந்நிகழ்வை வெற்றிப் பெற செய்திட வேண்டுகிறோம்.

மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர், நாடாளுமன்ற எதிரணி தலைவர், மூத்த எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசவுள்ளனர். மலேசிய தமிழர் வரலாற்றில், இதுநாள் வரையிலும் இலங்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்ட பொழுதிலும், இம்முறை நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தின் வழி மலேசிய மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்.


இக்கூட்டமானது, வெறும் நிதி சேகரிப்பு கூட்டமாக மட்டும் முடிந்து விடாமல், இலங்கை அரசாங்கத்தின் இன்வெறி போரை வெளிப்படுத்தும் பிராச்சார கூட்டமாகவும் அமையும். இலங்கையில் நடக்கும் இன அழிப்பு போரை, தீவிரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் நடத்தும் இலங்கை அதிபர் இராஜபக்சேவின் போலி முகத்திரையையும் கிழிக்கும் கூட்டமாக இது அமையும். தமிழர் அல்லாத மற்ற மலேசியர்களுக்கு இலங்கையில் நடைபெறும் கொலைவெறி ஆட்டத்தை படம்பிடித்துக் காட்டி, மலேசிய மக்களிடத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்குமாறு கோரப்படும்.


இந்நிகழ்வு சம்பந்தமான விவரங்களை தத்தம் வலிப்பதிவுகளில் வெளியிட்டு, ஈழத்தமிழர் இன்னல் துடைக்க நம்மால் இயன்றதை செய்வோம். நிகழ்வு சம்பந்தமான படங்களை இவ்வலைப்பதிவில் தங்கள் உபயோகத்திற்காக பதிவிடுகிறேன். மேல் விவரங்கள், கீழ்காணும் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்களுக்கு 016 - 438 4767 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்க.

நன்றியுடன்,

மு. சத்தீஸ்,
செயலாளர்,
ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி

Anonymous said...

எதிர்மறையான கருத்துக்களை கொண்டு கவிதை படைப்பது எல்லாராலும் முடிய கூடிய காரியமல்ல.. காரணம் அந்த அளவிற்கு விஷயங்களும் இருக்கவேண்டும்.. தாஜ்மகாலின் மீதான உங்கள் கோணம் + கோவம் வித்தியாசமாகவே உள்ளது.

வாழ்த்துக்கள்!

கிருஷ்ணா said...

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ஷீ-நிசி அவர்களே.

Anonymous said...

சார்,

”வாழ்த்துக்கள்” தவிர உங்கள் அழகான உண்மையான வரிகளுக்கு வேறு பின்னூட்டம் போட தெரியவில்லை.

ரொம்ப அருமையான படைப்புனு சொன்னா அது மிகையில்லை.

கிருஷ்ணா said...

கு.உஷாதேவி.. நன்றி.. நன்றி.. நன்றி.. இந்த மூறெழுத்து மந்திரத்தை தவிர வேறு என்ன சொல்லி மறுமொழி இடுவதென்று எனக்கும் தெரியவில்லை! உங்கள் பொன்னான நேரத்தை என் கவித்தமிழுக்கும் கொஞ்சம் செலவிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs