கடல் நீரை
உறிஞ்சி,
மேகமாக்கி..
மழையாய் மீண்டும்
பூமியில் தெளிப்பது
இயற்கையின் தர்மம்..
மழை நீரை
உறிஞ்சி..
மண்ணைப் பிளந்து
விண்ணோக்கி வளரும்..
அது,
தாவர தர்மம்..
தாவர தளைகளை
தனக்கு தீனியாக்கி..
வாட்டமாக வளரும்..
அது,
விலங்கின் தர்மம்..
நீரை குடித்து..
தாவரங்களை புசித்து..
தசைநார்களையும் ருசிக்கும்..
மானிட மிருகங்களே...
உங்களின்
ஆறாம் அறிவென்ன
அறிவியலில்
கரைந்துவிட்டதா..?
குடிக்கும் நீரில்
இரசாயணம் கலப்பதும்
உன் இனமே..
நீ கொஞ்சம்
சொல்லக் கூடாதா?
பழந்தரும் மரங்களை
வெட்டி வெளிநாட்டில்
விற்பவன்..
படித்தவன் தானே..
அதன்,
பின் விளைவுகள்
தெரியாதா..??
ஆவின்..
பால் மட்டும் போதாதாம்..
அதன்
இரத்தம் ஊறிய
இறைச்சியும் வேண்டுமா..??
இரத்தம் கேட்கும் நீ..
யுத்தம் வேண்டாம்
என்றால்..
சத்தமில்லா சிரிப்பு
வருகிறது...!!!
-K கிருஷ்ணமூர்த்தி
6 comments:
//இரத்தம் கேட்கும் நீ..
யுத்தம் வேண்டாம்
என்றால்..
சத்தமில்லா சிரிப்பு
வருகிறது...!!!//
உறைக்கும்படி கூறியிருக்கிறீர்கள்..
நன்றி திரு சதீசு. அவ்வப்போது கவனத்தை ஈர்க்கும் நடப்புக்கள்தான் என் கவிதைகளின் கரு. இதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது..
கவித்தமிழ் ஏந்திய நெற்றிப் பொட்டில் 'ஏதோ' ஓர் ஆவி ஒளிந்திருந்து பார்ப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு 'ஏதும்' தெரிகிறதா?
ஹா ஹா ஹா... கிருஷ்ணாவைப் பார்த்தால் உங்களுக்கு ஆவியைப்ப்போல் தெரிகிறதா?
குமரன், நான் பல வடிவங்களை(banner) பரீட்சார்த்த முறையில் மாற்றி மாற்றி சோதனை செய்வதை நண்பர் சிவா கவனித்திருப்பார் என்று நம்புகிறேன்.. அவர் அன்போடு எனக்காக வடிவமைத்து கொடுத்த வடிவம்தான் இது..! மேலே இருப்பது ஆவி போல் தெரிகிறதா? அடிங்கொய்யாலே! ஹா ஹா ஹா..
சிவா.. குமரனும் நானும் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்த பால்யமில்லாத நண்பர்கள்! அதனால்தான் இவ்வளவு குசும்பு! பாம்பின் கால் பாம்புக்குத்தானே வெளிச்சம்!!!
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே என் இடுக்கண் களைந்த சிவாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்!
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.