Wednesday, February 18, 2009

விலாசம் தேடும் விழுதுகள்...!

என்
பேனாவின் புலம்பல்களை
பரிசாய்க் கேட்கும்
பருவப் பெண்ணே..

உன்,
முதல் பார்வையிலேயே..
மயிலிறகாய் இருந்தவன்..
தென்னங் கீற்றானேன்..!!

சுதந்திர அருவியாய்ச்
சுற்றியவனை..
குளத்து நீராய்
கைது செய்ததன்
காரணம் என்ன..?

என் சுவாசத்தையே
எனக்கு
பரிசளித்த தேவதையே..

உன்,
சீற்றத்தையும்
சேர்த்துக்கொள்ள
ஆசைப்படும்
அகராதி நான்..!

***
நீ
சிணுங்கினாய்..
இல்லை..
தென்றலுக்கு
நீ விடும் தூது அது..!

நீ சிரித்தாய்..
இல்லை இல்லை..
மலர்களை மலர வைத்தாய்..!!

நீ முறைத்தாய்..
ம்ஹும்...
என் கவிதைக்கு
இலக்கணம் வகுத்தாய்..

நீ திட்டினாய்..
அதுவும் இல்லை..
என் தமிழுக்கே
உயிர் கொடுத்தாய்..!!!

இப்பொழுதெல்லாம்..
நீ இல்லாத கனவுகளை..
நான்,
கண்டுகொள்வதே இல்லை..!

பெண்ணே..

உன் மௌனங்களுக்கும்
உரை எழுத முடிந்த
எனக்கு...
உன் பேச்சின்
பொருள்காணும்
பொறுமை இல்லையே...!!!

அன்பே,

உன் செயல்களுக்கு
அர்த்தம் கூறும்
அகராதி
என்ன விலை..?

***
உன் நாணத்திற்கோர்
உவமை சொல்ல..
இப்பாரினில்
பொருளே இல்லையே...!

என் பெயரே
எனக்கு..
மறக்கும் வேளையில்
புனைப்பெயர் சூட்டினாய்..

இனியவளே..
உன் உதடுகள்
உச்சரிக்கும் பொழுதுதான்
என் பெயரின்
இனிமை புரிகிறது..!

வசந்தத்திலும் பூக்காத

என் தோட்டம்..
உன் வருகையால்
சட்டென்று பூக்கிறது..!!

உன் பெயரை
மந்திரமாய் ஜபிக்கும்
எனக்கு..
எழுதுவதற்கு மட்டும்
எண்ணமே இல்லை..

பேனா முள் கொண்டு
உன் பெயரைக் கூட காயப்படுத்த
என்றைக்குமே
எனக்கு உடன்பாடில்லை..!

உயிரே..
உன் சுவாசங்கள்
எனை
சுடும் நாள்
வரும் வரையில்
இனி நான்
சுவாசிக்கப் போவதுமில்லை..!!!

- K.கிருஷ்ணமூர்த்தி

(இன்றும் எனது காதலியாகவே இருக்கும் என் மனைவிக்கு நான் பல்கலைக்கழகத்தில் படிப்பதை மறந்து பிதற்றிய பிதறல்..)

10 comments:

குமரன் மாரிமுத்து said...

ஓ... இப்போது நினைவுக்கு வருகிறது. படிக்கும் பொழுது பல முறை தொப்பு தொப்பென்று விழுந்தாயே... அப்போது நினைத்தேன் உமக்கு சுவாசக் கோளாறு என்று.. இப்போதுதான் புரிந்தது மூர்ச்சையாகவில்லை;மூச்சேயானவளை நினைத்துதான் விழுந்திருக்கிறாய்...

கிருஷ்ணா said...

நண்பரே..

அன்று போல் இன்றும் கூட என் மீசையில் மண் ஒட்டுவதில்லை..

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

து. பவனேஸ்வரி said...

வணக்கம் நண்பரே,

//உன் செயல்களுக்கு
அர்த்தம் கூறும்
அகராதி
என்ன விலை..? //

என்னைக் கவர்ந்த வரிகள்... இந்தக் கவிதைக்கு உங்கள் காதலி (மனைவி) ஏதாவது மறுமொழிக் கவிதை எழுதினாரா? இருந்தால் பிரசுரியுங்களேன்...

கிருஷ்ணா said...

என் மனைவிக்கு தமிழை இரசிக்க மட்டுமே தெரியும்.. என் கவிதைகளை எழுத்துக்கூட்டி படித்தே தமிழ் படிக்க சற்று கற்று கொண்டவள் அவள்.. மறுமொழிகளை வேறு வழியில் தெரிவித்ததால்.. அதை பிரசுரிக்க வழியில்லாமல் தவிக்கிறேன்.. மண்ணிக்க வேண்டும்!

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

கிருஷ்ணா said...

கேள்வி.நெட் -க்கு எமது மனமார்ந்த நன்றிகள்..!

Anonymous said...

(இன்றும் எனது காதலியாகவே இருக்கும் என் மனைவிக்கு ..)///
நீங்க அதிஸ்ரகாரன்தான் போங்க... கதலிச்சவாவையே கரம்புடிச்சு புட்டிங்க வாழ்த்துக்கள்

Anonymous said...

சொல்ல மறந்துட்டன் கவிதை சூப்பரு

கிருஷ்ணா said...

நன்றி கவின்! உண்மையில் நான் அதிர்ஷ்டக்காரன் தான்.. வாழ்க்கையை இரசித்து வாழக் கற்றுக்கொண்டால்.. அனைவருமே அதிர்ஷ்டக்காரர்கள்தான்..!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs