உன்
உதட்டோரப் புன்னகைக்காய்
உதய சூரியன் ஏங்குகிறான்..
தன் பணியை செய்யாமல்
சோர்ந்து கிடக்கிறான்..
ஸ்மைல் ப்ளீஸ்..
இன்று காலை
சூரியன் உதித்ததே உனக்காகத்தான்..
இனி பூக்கள் மலர்வதும் உனக்காகத்தான்..
உன் புன்னகை முகத்தை காணத்தான்..
ஸ்மைல் ப்ளீஸ்..
நண்பகல்..
சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருக்கின்றான்..
காரணம் கேட்டேன்..
நீ அவனுக்கு,
புன்னகை பாக்கி தரவேண்டுமாம்..
ஸ்மைல் ப்ளீஸ்..
மாலைச் சோலையில்
ஒரு ரோஜாச்செடி
அழுதுகொண்டிருக்கிறது..
காரணம் கேட்டேன்..
நீ இன்னமும் சிரிக்கவில்லையாம்!
ஸ்மைல் ப்ளீஸ்..
உன் புன்னகை ஈர்ப்பில்
புவி ஈர்ப்பும் கூட தோற்றதடி..
உன் நட்பின் சிரிப்பொலியில்
நாடி நரம்பெல்லாம் உயிர்க்குதடி..
ஸ்மைல் ப்ளீஸ்..
K.கிருஷ்ணமூர்த்தி
எது காதல்? -அத்தியாயம் 1
5 years ago
4 comments:
அண்ணே சூப்பர்...
lable ஆங்கிலத்தில் போடுங்கள். தேடி படிப்பவர்கள் அதிகமாவார்கள். கூகுலில் தேடுபவர்களுக்கு லேபிலில் உள்ள சொற்களை தெரிவு செய்து கொடுக்கும்.
உம்மை பார்த்தேன்;
உமது கவிதைகளைப் பார்த்தேன்;
எமது கணினித் திரையும்(monitor)
குலுங்கிச் சிரித்திடக் கண்டேன்.
சும்மா கலக்கிட்ட மச்சி... வளரட்டும் உமது புலமை.. பெருகி வழியட்டும் உமது பதிவுகள்.
கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே! எப்போதும் உங்கள் ஆதரவும், கருத்துக்களும் எம் எழுத்துக்களுக்கு உரமாகும் என்பது உறுதி..!
என்னையா சிரிக்கச் சொன்னீர்கள்? ஹிஹிஹீ....
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.