Wednesday, February 4, 2009

விதவை

வாழ்க்கைத் தோட்டத்தில்
மலர்ந்தும்
மலராமல் இருக்கும்
வாசனைப் பூவே..

நீ ஒரு பாவி..
இந்த,
சம்பிரதாய சமூகத்தில்
பிறந்துவிட்டாயே ! !

இந்த மீன் குஞ்சு
நீந்துவதற்குள்..
செதில்களை
செதுக்கி விட்டார்களே பாவிகள்..!!

வாழ்க்கையே
உலர்ந்து விட்ட பிறகு..
உணர்ச்சியற்ற உலகம்
போற்றினால் என்ன?
தூற்றினால் தான் என்ன??

நடை பழகியது போதும்..
இனியாவது,
இறக்கையை உடுத்திக்கொள்..
உயர்ந்த வானத்தில்
உனக்கும்..
கொஞ்சம் இடமிருக்கும்..!!!

-K.கிருஷ்ணமூர்த்தி

2 comments:

து. பவனேஸ்வரி said...

//இந்த மீன் குஞ்சு
நீந்துவதற்குள்..
செதில்களை
செதுக்கி விட்டார்களே பாவிகள்..!!//

அர்த்தமுள்ள வரிகள்....நன்று...

கிருஷ்ணா said...

இது, வாழ்க்கையைத் தொலைத்து நின்ற தோழி ஒருத்திகாக எழுதிய வரிகள்.. உண்மைச் சம்பவங்கள் வார்த்தையாகி, வரிகளாகி கவிதையானால்.. அதன் அர்த்தம் ஆழமாகவும் நீளமாகவும் அகலமாகவும் இருக்கும் என்பது என் எண்ணம்..

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs