Saturday, February 21, 2009

தாமரை


குங்கும நிறத்தில்
ஒரு
குழந்தை சிரிக்கின்றது..

இதென்ன..?
சேற்றுக்குள்ளே
சிகப்பின் பிரசவம்..?

அடிப் பைத்தியமே...

இந்த சுட்டெரிக்கும்
சூரியனுக்காகவா
இத்தனைக்காலம்
ஒற்றைக்கால்
தவமிருக்கின்றாய்??

இரு இரு..

இடையில்..
மண்மத வண்டொன்று
நுகர்ந்ததால்
உன் முகம் சிவந்தது
சினத்தாலா..
நாணத்தாலா..?

அல்லது..
நீயும் அந்த
அகலிகை வம்சமா..???

பார்க்கத் தெவிட்டாத
பங்கஜமே..

எனக்கோர் ஆசை..

உன் பருவ மொட்டுக்கள்
பூப்பெய்துவதையும்...

வண்டுகள்
உன்னை மொய்ப்பதையும்..

நீ..
சிருங்காரமாய்ச்
சிணுங்குவதையும்..
சிரிப்பதையும்..

என்றாவது ஓர் நாள்
எனது
இருதய 'கேமராவில்'
பதிவு செய்ய வேண்டும்..

இதோ..
இங்கே,
மனிதர்களுக்குள்
மண்ணுக்காகவும்..
மதத்துக்காகவும்..
பெண்ணுக்காகவும்..
ஏன்..
பிணத்துக்காகவும் கூட
பங்காளிச் சண்டை..

இருதயமே இல்லாத
இவர்களுக்கு மத்தியில்
எனக்கு மட்டும்
என்ன வேலை..?

உன்
மகரந்தங்களுக்கு
மத்தியில்
எனக்கொரு
மாளிகை
அமைத்துத் தா...

அதில்..
நான் மட்டும்
வந்து குடியேர..

-K.கிருஷ்ணமூர்த்தி

6 comments:

Anonymous said...

கவிஞன்: சூரியனையும் சுட்டெரிப்பான்.
தென்றல்மோதி தேய்ந்து போவான்,
சுடும் வெயிலில் சுகம் காண்பான்..

இதோ இந்த கவிஞன் -
தாமரைக்குள்ளே தங்கும் இடம் தேருகிறான்..

தமித்தமிழ் ஈழமும் ஓர்நாள் கிடைக்கும் - ஆனால்
தாமரைக்குள் தங்க இடம் கிடைக்குமா?
கவிஞரே...

கிருஷ்ணா said...

நம்பிக்கைதானே வாழ்க்கை நண்பரே!

குமரன் மாரிமுத்து said...

உங்கள் கவிக் குசும்புக்கு அளவே இல்லையா..?

பெண்ணை தாமரையில் குடியேற்றினால் தாமரை நீரில் மூழ்காதாம்...முன்னோடிக் கவிஞர்கள் பாடியிருப்பதாக ஞாபகம் இருக்கிறது காரணம் பெண்கள் தாமரையைவிட மென்மையானவர்களாம்.

ஆண்கள் கண்கள் பட்டாலே தாமரை மூழ்கிவிடுமாமே.. நீங்கள் மகரந்தங்களுக்கு
மத்தியிலே மாளிகைக் கட்டி குடியிருக்க ஆசைப்படுகிறீர்களே? ஞாயாமா? அடுக்குமா? தாங்குமா தாமரை? இது ஒரு இனப் படுகொலைக்கு இட்டுச் செல்லாதா?

கிருஷ்ணா said...

என் மனமும் தாமரையினும் மெலியது என்பது தாங்கள் அறியாததா நன்பரே?

தாமரையை நீங்கள் பெண்ணாகவும் உருவகப் படுத்திப் பார்க்கலாம்.. உடனே கற்பனைத் திறன் கண்ணா பின்னா என்று போகுமே! வாழ்க தாமரை!

Unknown said...

மகரந்தமான கவிதை

Kavithamil Krishnamoorthy said...

சுகந்தமான பின்னூட்டுக்கு நன்றி..!!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs