வானம்
வாடிக்கொண்டிருக்கும்
வைகறையில்
ஒளி
விளக்காவாள்..
காணக்
கிடைக்காத
காவியங்களுக்கு..
பெரும்
கடையாவாள்..
தோல்விகள்
தொங்கும்
தோள்களுக்கு
நல்
துணையாவாள்..
கேள்விகள்
கேட்டே
வாழ்க்கைக்கு..
ஒரு விடையாவாள்..!!
*
உறவோ துறவோ..
ஒருங்கே தருவாள்..
இறையை போல
ஐந்தொழில் புரிவாள்..
சிறையோ சிறகோ..
சிரிப்பால் அருள்வாள்..
நிறையோ குறையோ..
நிஜத்தை சொல்வாள்..!
- கிருஷ்ணமூர்த்தி
Wednesday, February 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
//கேள்விகள்
கேட்டே
வாழ்க்கைக்கு..
ஒரு விடையாவாள்..!!//
மனைவியின் பெருமையை நன்கு உணர்ந்துள்ளீர்கள். நன்று.
உன்மையிலேயே.. என் மனைவிக்காக நான் எழுதிய கவிதைதான் இது. அனுபவப்பூவமான உண்மைதான்.. அந்த வரிகள்...! கருத்துக்களுக்கு நன்றி!!
_மனைவி_
அனைத்து உறவுகளையும் ஒருங்கே கணவனுக்குத் தருபவள்...
தோழி, தாய், மகள், மந்திரி, தேவதை
கடவுளுக்குப் பிறகு ஐந்தொழில் புரிபவள்- மனைவி..
நல்ல கருத்து..
இப்படி வைத்துக்கொள்ளலாமா மலர்விழி..
உறவோ துறவோ..
ஒருங்கே தருவாள்..
இறையை போல
ஐந்தொழில் புரிவாள்..
சிறையோ சிறகோ
சிரிப்பால் அருள்வாள்..
நிறையோ குறையோ
நிஜத்தை சொல்வாள்..
சரியா?
அட இது அசத்தலா இருக்கே...நன்று :)
கரு உங்களது.. கவிதை என்னது.. நல்ல கூட்டு முயற்சி.. மேலும் ஏதும் இருந்தால் சொல்லுங்கள்..
காதலிக்காக பல கவிதைகள் இருக்க, மனைவியின் பெருமையை உணர்த்தும் இக்கவிதை மிகவும் அருமை.
வாழ்த்துக்கள்.
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.