Tuesday, February 17, 2009

உதயா..

அண்ணா..

கேள்விக்குறியாய்

இருந்த சமுதாயம்..


உன்னால்

இன்று ஆச்சர்யக் குறியானது..!


ஆனாலும்..

உன் கதை என்னவோ

இன்னமும் கேள்விக் குறியே..!


சரித்திரத்தையே

தொலைத்து விட்ட

சமுதாயத்துக்கு

சுதந்திரத்தை கற்றுத் தந்தாய்..


இன்று..

உன் சுதந்திரம்

நான்கு சுவர்களுக்குள்.!!!


தரித்திரமாய்

திரிந்த தம்பிகளை எல்லாம்

சரித்திரம் படைக்க வைத்தாய்..


என்ன புண்ணியம்..?

மீண்டும் அதே தரித்திரம்..!!!


நன்றி....

அந்த மூன்றெழுத்தை

ஐந்தெழுத்து அரசியலுக்காக

அடகு வைப்பதும் நம் இனமே..!


அண்ணா..

எங்களுக்கு கிடைத்த

ஒரே துருப்புச் சீட்டு நீதான்..


எங்களின் ஒரே விடிவெள்ளியும்

நீதான்..


கவலை வேண்டாம் அண்ணா..


இனிப்பு..

உன்னை ஒன்றும் செய்து விடாது..!


வியாதி..

உன்னை எளிதில் வென்று விடாது..!!


காரணம்..

காலனும் கடவுள்தான்..!


ஆணவக்காரர்கள்

உன்னை அடக்க நினைக்கலாம்..


கோமாளிகள்..

உன்னை தீவிரவாதியாக்கலாம்..

எங்களுக்கு தெரியும்..

உண்மை..

அவர்களுக்கும் புரியும்

உன் மேன்மை..!!!


ஆருயிர் அண்ணா...

ஐம்பது

ஆண்டுகளுக்கு முன்னர்

அடகுவைத்த

வீரத்துக்கு

பாலூட்டிய
எங்கள் தாய் நீ..!


தேய்ந்து போன

தன்மானத்தை
திருப்பித் தந்தாய்..
கேட்டு கேட்டு..

ஓய்ந்து போன
கோரிக்கைகளை
கோடரியாக்கினாய்..

செவிடுகளின் காதுகளில்
சங்காய் ஒலித்தாய்..!

அருமை அண்ணா..

சம்பந்தனுக்குப்
பிறகு பூத்த
சகாப்தம் நீ..!!!

அன்று
உன்னால்
சிறுபான்மை சமூகம்
பேரணி திரட்டியது!

அதுதான் பேரணி..
மற்றவை எல்லாம்
அதன் காலணி!

அண்ணா...

அன்பால்
நீ ஊட்டிய வீரப் பால்..
இன்னும் வற்றிவிடவில்லை
உன் தம்பிகளுக்கு...

பெரியண்ணன் வேதமூர்த்திக்கு
நீ தம்பியென்றால்..
உனக்கு இங்கே கோடி தம்பிகள்..!!!

கலங்காதே அண்ணா..
எதற்கும்
ஒரு எல்லை இருக்கிறது..

உன் சுதந்திரம்
சூன்யமாயும்
நாங்கள்
மௌனம் காப்பது..
காரணத்தோடுதான்..

குற்றம் சுமத்த
திராணியில்லாமல்..
கூண்டிலேற்றிய
அந்த
பொட்டையர்கள் சொன்னது
பொய் என்பதை உணர்த்தத்தான்...!!

உன் தம்பிகளின்
இறுதி
உறுதிமொழி அண்ணா..

எங்கள் தாய்க்கும் மேலாம் தமிழ்..
அந்த தமிழுக்கும் மேல் நீ..!!

ஒரே ஒரு ஜாடை காட்டு..
எங்கள்
உயிரையும்
மயிரென்றே சொல்லி
உனக்காய்
மீண்டும் திரள்வோம்..!!

-K.கிருஷ்ணமூர்த்தி

6 comments:

து. பவனேஸ்வரி said...

சொல்லில் அடங்கா உணர்ச்சிகளை வார்த்தையாக வடித்துள்ளீர்கள். அருமை... கருத்தும் கவிதையும்...

கிருஷ்ணா said...

நன்றி தோழி!

கிருஷ்ணா said...

எனது இன்னொரு முகமான http://www.krishnausj1.blogspot.com வலைப்பதிவையும் பாருங்கள்.. நன்றி

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த லைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

குமரன் மாரிமுத்து said...

//குற்றம் சுமத்த
திராணியில்லாமல்..
கூண்டிலேற்றிய
அந்த
பொட்டையர்கள் சொன்னது
பொய் என்பதை உணர்த்தத்தான்...!!//

//ஒரே ஒரு ஜாடை காட்டு..
எங்கள்
உயிரையும்
மயிரென்றே சொல்லி
உனக்காய்
மீண்டும் திரள்வோம்..!!//

உமது உள்ளக்கிடப்பில் அடக்கி வைத்திருந்த தீ, தடைகளைத் தகர்த்து சுட்டெறிக்கும் சொற்களாய் பயணித்திருக்கிறது.

சிறப்பான கவிதை வரிகள்.

போராட்டம் தொடரட்டும்...

கிருஷ்ணா said...

பழைய இளையராஜா பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

வேப்பமரம் நோயிலே..
வைத்தியரும் பாயிலே..
காவல் காக்கும் ஐயனாரும் களவு போனாரே..

சட்டம் பேசும் வக்கீலும்
சட்டத்தில மாட்ட்க்கிட்டான்..
எத்தனை சந்து பொந்து
எப்படி நீதி வாழுமடா..!!!!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs