Thursday, February 26, 2009

இரட்டை அர்த்தம்

பெண்களே..

பழைய சிந்தனை
பற்றி எரிந்தாலும்..
சற்றும் பதறாத
புதுமைப் பெண்களே..

பைந்தமிழ்ப்
புலவர்களின்
பாட்டில்
பவனிவரும்
பருவப் பெண்களே..

புகழ்ந்து விட்டான்
என்னை
புலவன் ஒருவன்
என்று
பூரித்துப் போகும்
புனிதப் பெண்களே..

அந்த
பொய்ப் புகழ்ச்சியின்
இரண்டாவது அர்த்தம்
தெரியுமா உங்களுக்கு..??

தூரத்து நிலவாம்
நீங்கள்..
அருகே சென்றால்
அவஸ்தை
என்றுதானே அர்த்தம்...

மணங்கமழும்
மலராம் நீங்கள்..
வந்து போகும்
வண்டினத்தின்
அடிமை
என்றுதானே அர்த்தம்..!

அழகாம் நீங்கள்..
ஆபத்தும்
உடன் உள்ளது
என்றுதானே அர்த்தம்..

செதுக்கி வைத்த

சிலையாம் நீங்கள்..

உணர்ச்சியே இல்லை
என்றுதானே அர்த்தம்..!

பெண்களே..
பெருமையின் சின்னங்களே..

இனியும்..
பொய்ப்புகழ்ச்சியில்
பொழுது போக்காதீர்கள்..!

உங்களை
புரிந்தவன் சொல்கிறேன்..

தமிழ் நீங்கள்..
தமிழின்,
'ழ'கரம் நீங்கள்..

'ழ'கரத்தின்
இனிமை நீங்கள்..
இனிமையின்
இன்பம் நீங்கள்..

இன்பத்தின்
உணர்வு நீங்கள்..
உணர்வின்
உயிர் நீங்கள்...

ஆம்..
உயிர்களுக்கெல்லாம்
உரு கொடுத்து
உருவுக்கு
உயிர் கொடுக்கும்
உன்னத
உயிர் நீங்கள்..!!!

K. கிருஷ்ணமூர்த்தி



8 comments:

வந்தியத்தேவன் said...

அழகான கவிவரிகள் நீங்கள் சுபாங்கிலா இருக்கின்றீர்கள். அண்மையில் மலேசியாவுக்கு வருகைதந்தேன் மிகவும் அழகான ஊர். சுபாங்கில் தான் தங்கியிருந்தேன்.

கிருஷ்ணா said...

நன்றி நண்பரே.. சுபாங்கில் தான் கடந்த 10 வருடங்களாக இருக்கிறேன்.. அடுத்த முறை வரும்போது சந்திக்கலாமே!

து. பவனேஸ்வரி said...

பெண்ணின் பெருமையைச் சொல்லும் கவிதை வரிகள் அருமை...

Anonymous said...

அட! எதிர்மறையான வடிவில் ஒரு அழகான கவிதை.. கவிதை அழகுனு சொல்றோம்... அதில் ஆபத்தில்லைங்க நண்பரே! வாழ்த்துக்கள்!

குமரன் மாரிமுத்து said...

ஆகா... ஆகா.... எப்படி இப்படி உரித்து எழுத முடிகிறது உம்மால்?

கிருஷ்ணா said...

பவனேஸ்வரி.. நன்றி. என்னைப் பொறுத்தமட்டில்.. சக்தி இல்லையேல் சிவம் இல்லை.. சிவம் இல்லையேல் சக்தி இல்லை. இதை நன்கு புரிந்து கொண்டால் உண்டாகும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை!!

ஷீ-நிசி அவர்களே.. கருத்துக்கு நன்றி.. முத்தமிழின் அழகை ஆபத்தென்று சொல்வேனா?

நண்பா குமரா... உரித்து எழுதலாம்... திரித்துத்தான் எழுதக் கூடாது என்பேன். உங்களை போன்ற நண்பர்களால்தான் இப்படி உரித்து எழுத முடிகிறது.. என் மனைவியை நேசிப்பதால்தான்.. பெண்மையின் மென்மையை உணர்ந்தும் எழுத முடிகிறது..

malar said...

//பெண்களே..
பெருமையின் சின்னங்களே..

இனியும்..
பொய்ப்புகழ்ச்சியில்
பொழுது போக்காதீர்கள்..!//

ம்ம்ம் பலே பலே...பெண்ணியம் மெய் சிலிர்க்கச் செய்கிறது...அருமை அன்பரே :)

//உயிர்களுக்கெல்லாம்
உரு கொடுத்து
உருவுக்கு
உயிர் கொடுக்கும்
உன்னத
உயிர் நீங்கள்..!!!//

உரிருள்ள வரிகள் - என்னை
ஊமையாக்கின!!!

வாழ்த்துகள்...வாழ்க கவித்தமிழ் :)

கிருஷ்ணா said...

நன்றி மலர்விழி.. உணர்ந்து எழுதிய வரிகள்.. உள்ளத்திலிருந்து வந்தவை.. உங்களை கவர்ந்திருந்தால் மகிழ்ச்சி..! வாழ்த்துக்களுக்கு நன்றி!

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs