போகிற வரையவள் நினைவுண்டு..
பாடலில் பலமுறை சொன்னதுண்டு - என்
பாட்டுக்கு பல்லவி அவளென்று..!
தமிழ்.. தமிழ்.. தமிழ்..
அவள் பெயர் தமிழ்...
தமிழ்.. தமிழ்.. தமிழ்..
தமிழெங்கள் உயிர்..
ஓவியத்தோடு ஒப்பித்தால் அது
ஓவியத்தின் பெருமை..
காவியத்தோடு கற்பித்தால் அந்த
காவியமே இனிமை..
அவள் என்றுமே பதினாறு.. அவள்
பிறப்பினை அறிந்தவர் யாரு?
உலகில் உயிர்கள் பிறந்திட்ட அன்றே
பிறந்தவள் 'தமிழ்' என்று கூறு..!
தமிழ்.. தமிழ்.. தமிழ்..
அவள் பெயர் தமிழ்...
தமிழ்.. தமிழ்.. தமிழ்..
தமிழெங்கள் உயிர்..
உலகில் உள்ள அழகிகள் எல்லாம்
அவளுக்கு பின்னே பாரு..
உலகத்துக் கவளை அளித்தது அந்த
தமிழகம் என்னும் ஊரு..
கம்பன் கைகளிலே குழந்தை - அந்த
கந்தன் அருளிய மடந்தை.. -அவள்
சிறப்பை இந்த பாரே போற்ற
உழைப்பவருக்கு நான் உடந்தை!
தமிழ்.. தமிழ்.. தமிழ்..
அவள் பெயர் தமிழ்...
தமிழ்.. தமிழ்.. தமிழ்..
தமிழெங்கள் உயிர்..!
-K.கிருஷ்ணமூர்த்தி
(திருத்தமிழ் வலைப்பதிவில் மறுமொழியாக இட்ட இடுகை)
3 comments:
தமிழுக்கும் அமுதென்று பெயர் என்ற பாடல் நினைவுக்கு வந்தது... நல்ல தமிழ் பற்று!!! அது பாடலாக தொனிப்பது அருமை!!
அருமை
வாழ்த்துகள்
வணக்கம் வாழ்க
கவிதை நன்று. பாரட்டுகள்
என்றுமுள செந்தமிழ்
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.