Wednesday, February 11, 2009

நீ கிளிப்பிள்ளை அல்ல..


தமிழா..
நீ கறுப்பு நிறமா?
கலங்காதே..
கிளியோபாட்ராவும் கறுப்புத்தான்..!

புகைப்படம் நன்றாக
விழவில்லையா?
வெளியில் வை..
பழகிவிடும்..

பெண்கள்
உன்னிடம் பேசுவதில்லையா?
பெருமூச்சு விடு..
உன் ஆண்மையின்
மவுசு அதிகம்...!

உன்
நண்பன் உன்னை
புரிந்துகொள்ள வில்லையா?

சிரி..
உன்னை
நீயே இன்னும்
புரிந்து கொள்ளவில்லையே!

உன் மீது வதந்தியா?
உண்மையைச் சொல்லி
என்ன பயன்?
நீ
பிரபல்யமாகிக் கொண்டிருக்கிறாய்..
கவலை விடு!

ஊர்வது எறும்பானாலும்
தேய்வது
கல்லாயிற்றே..

நீ நினைத்தால்..
இமயமும்
உன்
காலடியில்!!!

*

உன்னைச் சுற்றிலும்
எதிரிகளா?
நீ
முன்னேறிக் கொண்டிருக்கிறாய்
என்று அர்த்தம்..

உன்
கருத்தை
ஊரார் ஏற்கவில்லையா?
அதில்
உண்மை உள்ளது
என்று அர்த்தம்..

தொடக்கமே தோல்வியா?
தயங்காதே..
வெற்றியின்
அடிக்கல்லே அதுதான்..

அங்கீகாரம்
கிடைக்கவில்லையா?
அது அர்த்தமற்றது
என்று கொள்..

***

வாழ்க்கை
இனிக்க வேண்டுமா?
மது, மாது, சூது..

வாழ்க்கை
உருசிக்க வேண்டுமா?
இயல், இசை, நாடகம்...

வாழ்க்கை
வரலாறாக வேண்டுமா?
சுயநலம் விடு..
பொதுநலம் பாடு!!!

உன் வாழ்க்கையை
நீயே தேர்வு செய்..

வாழப்பிடிக்கவில்லையா?!!
நில்..
சாவது
அதனிலும் கொடிது!

உனக்காக வாழ்வது
பிரச்சனையா?
ஊருக்காக வாழ்..
உற்சாகம்
தானே வரும்!

***

தமிழன்
தரித்திரனா?
பட்டிமன்றம் தேவை இல்லை..
பட்டிமன்றத்தில் ஜெயிப்பதால்
தலையெழுத்தா மாறும்?

பென்களின் கூந்தலில்
இயற்கை மணம்
உண்டா? இல்லையா?
ஆராய்ந்து என்ன பயன்?

கற்பில் சிறந்தவள்
கண்ணகியா? மாதவியா?
வெட்டிமன்றம்!
என் தாய்க்குப் பின்தான்
இவர்களெல்லாம்...!!!

***

தமிழா..!

வாகனங்களை
மலிவாக இயக்க
என்ன வழி?
ஆய்வு நடத்து..

உலகத்தை
ஒரு பொழுதில்
சுற்றி வர
என்ன வழி?
கண்டுபிடி..

பாலைவனத்தைச்
சோலைவனமாக்குவது
எப்படி?
எனக்கு சொல்..

இன்னும்
எத்தனை நாட்கள்
பிறர் சாதனையை
ஆராய்ந்து கிடப்பாய்?

உன் சாதனையை
ஊரார்
ஆராய வேண்டாமா?

உடுக்க உடையும்
படுக்க இடமும்
உனக்கு மட்டும்

இருந்தால் போதுமா?

உன் புகழை
பார் போற்ற
வேண்டாமா?

அட,
பார் வேண்டாம்..
சில ஊர்களாவது
உன் புகழ் சொல்லல்
வேண்டாமா?

மறவாதே..

நீ கிளிப்பிள்ளை அல்ல..
தமிழ்ப்பிள்ளை...!!!

-கிருஷ்ணமூர்த்தி

14 comments:

சதீசு குமார் said...

பின்னிட்டீங்க சார்..

வரிகளை படிக்கும்போதே உற்சாகம் பிறக்குது...!

Anonymous said...

எளிமையான நல்ல கவிதை. தமிழன் தொலைநோக்கு பார்வையுடன் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தி இருக்குறீர்கள். அறிவியல் உலகில் தமிழன் தனி தன்மையுடன் சுயமான கண்டுபிடிப்புகளுடன் உலா வரவேண்டும். பிறர் சாதனைகளை ஆராய்ந்துகொண்டு, பிறர் போட்ட பாதையில் செல்வது ஒரு விதமான அடிமைத்தனம் தான்.

உங்கள் பதிவுக்கு நன்றி.

சிவா.

மு.வேலன் said...

வாழ்த்துக்கள்! தொடருங்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.

மலர்விழி said...

மிக நன்று...
எளிய வார்த்தைகள்..அழகிய கோர்வையாக..
இன்றைய சூழலுக்கேற்ப அமைந்துள்ளது

என்னை மிகவும் ஈர்த்தது:
//கற்பில் சிறந்தவள்
கண்ணகியா? மாதவியா?
வெட்டிமன்றம்!
என் தாய்க்குப் பின்தான்
இவர்களெல்லாம்...!!!//

இதை மறந்து திரியும் இளையோர் இன்று பலர்...

//உடுக்க உடையும்
படுக்க இடமும்
உனக்கு மட்டும்
இருந்தால் போதுமா?

உன் புகழை
பார் போற்ற
வேண்டாமா?//

எழுச்சிமிகுந்த வரிகள்...
வாழ்த்துக்கள்
எழுத்து பணி தொடரட்டும்..
_வாழ்க தாய்தமிழ்_

கிருஷ்ணா said...

மறுமொழியிட்ட அனைத்து தமிழ்க் காதலர்களுக்கும் நன்றி. உங்களின் ஊக்குவிப்பு என் பேனாவுக்கு இல்லை இல்லை.. தட்டச்சுப் பொறிக்கு உரமாகட்டும்!

A N A N T H E N said...
This comment has been removed by a blog administrator.
A N A N T H E N said...

சுருக்கமான*

குமரன் மாரிமுத்து said...

//வாழ்க்கை
இனிக்க வேண்டுமா?
மது, மாது, சூது..//

படித்த போது 'ஏஏஏய்ய்ய்' வேதாளம் எங்கோ ஏறப்போகுதுன்னு நினைத்தேன். கவிதையின் பிற்பகுதியில் மிகச் சிறப்பாக முடித்திருக்கின்றீர்.

இது உமது உச்சமல்ல. எனக்குத் தெரியும்.தொடர்க...

Thiruu00 said...

மிகவும் அருமையான கருத்துக்கள். தொடரட்டும் உங்கள் பயணம்.

கிருஷ்ணா said...

அனந்தன் அவர்களே.. நிச்சயம் என் மூச்சிருக்கும் வரை என் தமிழ் ஓயாது..

குமரா.. பாம்பின் கால் பாம்பறியுமல்லவா?!! வலைப்பதிவில் நானும் வலம் வருவதற்கு நீர்தானே முழு காரணம்!

நன்றி திரு அவர்களே.. உங்களை எப்படி கூப்பிட்டாலும் மரியாதையாகவே இருக்கிறது!

ஆதவா said...

எந்த ஒரு எதிர்செயலிலும் நற்செயல் அடங்கியிருக்கும்.... எதிரி கூட, நம்மை திறமையுள்ளவனாக்குகிறான்... நடப்பது நன்மைக்கே என்ற சொலவடையின் அர்த்தம் இக்கவிதையில் கரைந்தோடுகிற்து..

அனுப்வங்களை அடுக்கி வைத்த கவிதை.... அனைவரும் படிக்க வேண்டிய தன்னம்பிக்கை கவிதை...

வாழ்த்துகள்

கிருஷ்ணா said...

ஆதவா..

கருத்துக்களுக்கு நன்றி.. உண்மைதான், இது எனக்கு நானே எழுதிக் கொண்ட கவிதைதான். கடைகளில் வாங்கி கவிதை எழுத முடியாது. அனுபவத்தைவிட சிறந்த கவிதையும் கிடையாது!

து. பவனேஸ்வரி said...

வாழ நினைத்தால் வாழலாம் என்பதனை எழுச்சிமிக்க வரிகளில் கூறியிருக்கிறீர். உங்கள் கவிதைகள் அனைத்துமே அருமையாக உள்ளது. இன்று முதல் நான் உங்கள் ரசிகை...

A N A N T H E N said...

(Reposted upon request)

சுruக்கமான வரிகளால் கவருது உங்க கவிதை...

ஒரு பேராசை, நீங்க தொடர்ந்து எழுதனும்...


//நீ கிளிப்பிள்ளை அல்ல..
தமிழ்ப்பிள்ளை...!!!//

சாதிப் பிரிவு பத்தி சொல்லலையே? :D
அமிதாப் பச்சன் தங்கர் பச்சன் மாதிரி...

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs