Friday, February 13, 2009

பிப்ரவரி 14


இன்று..

ஊரெல்லாம் பௌர்ணமி..

எனக்கு மட்டும் அமாவாசை..!


இன்று மட்டும்

ஏனோ..

என் வார்த்தைகள்

வாக்கியமாவதை மறுக்கின்றன..


கருத்துக்கள்..

கவிதையாவதை வெறுக்கின்றன...!


பெண்ணே..


நெருப்பென்பதை அறிந்தும்

விட்டில் பூச்சிகள்

விளக்கைச் சுற்றுவது

வாழ்க்கையை வெறுப்பதால் அல்ல...


என்றாவது ஓர் நாள்..

அந்த நெருப்பும்

நீர் வார்க்கும்

என்ற நப்பாசையால்தான்..!!


***

இற்றுவிட்ட இதயத்தில்

இன்னும்

கொஞ்சம் வலுவிருக்கிறது..


காரணம்..

உன் நினைவு

இன்னும் அதில் இருக்கிறது..


மறந்துவிட முயற்சித்தேன்..

இறந்துவிடுவேன் என்பதால்

மறப்பதை மறந்துவிட்டேன்..!!!

***


காமம் கடந்து

காதல் சுமந்தேன்..

ஈமச் சடங்கின் விறகானேன்..


காதல் கடந்து

காமம் சுமந்தேன்..

வீசும் காற்றில் சறுகானேன்..!


பிறந்தது நிஜம்..

இறப்பதும் நிஜம்..

வாழ்க்கை மட்டும் மாயம் பெண்ணே..


உன்னை

நினைத்தது நிஜம்..

அனைத்தது நிஜம்..

காதல் மட்டும் காயம் கண்ணே..


-கிருஷ்ணமூர்த்தி


(நிச்சயமாக, இது என் கதை அல்ல.. நான் இன்னும் அறிந்திடாத ஒரு சுகம், காதல் தோல்வி.. அந்த வேதனையில் எழுந்த எண்ணங்களே இவை..)











8 comments:

Anonymous said...

கவிதையில ஒரு உண்மையான வலிய உணரமுடியுது (ஆனா இது உங்க கதை இல்லை - நம்பிட்டேன் - நம்பிக்கைதானே வாழ்க்கை)

//தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள்//

உங்க எழுத்துக்கு படிப்பவர்கள் அனைவருமே அடிமை, கண்டிப்பாக அனைவரும் மிக மிக நாகரீகமான கருத்துக்களையே வெளியிடுவார்கள்.

இன்றுதான் என் முதல் வருகை, இனிமேல் தினமும் ஒரு விசிட் வருகிறேன்..

Anonymous said...

கவிதை அருமை. பாராட்டுக்கள்

கோவி.மதிவரன் said...

வாழ்த்துகள் கிருஷ்ணா. கவிதை அருமை தொடர்ந்து எழுதுங்கள்

கிருஷ்ணா said...

சிவா.. உண்மை நண்பா.. இது என் கதை அல்ல.. ஒரு சிறு கற்பனை.. அவ்வளவுதான். நான் உள்ளூர் இசைவட்டுக்களுக்கு பாடல் எழுதுபவன்.. இப்படி ஏதாவது ஒரு கற்பனையில் கவிதையும் எழுதி பழகுவேன்.. அம்புட்டுதான்!

ஓ.. நீங்கள் நம்பிவிட்ட பிறகு.. எதற்கு நான் புலம்புகிறேன்.. மன்னிக்க வேண்டுகிறேன்..

கிருஷ்ணா said...

சிவா.. தினம் வாருங்கள்.. முடிந்தவரை, தினம் ஒரு கவிதையையாவது இங்கே அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றேன்..

குமரன் மாரிமுத்து said...

எதை சொல்வது.. எதை விடுவது..

எஸ் குஸ் மி... உங்களுக்கு கண்ணாலம் ஆச்சா..?

கிருஷ்ணா said...

குமரன்.. லொள்ளுக்கு ஒரு எல்லையே இல்லையா? நான் 'கட்ட' பிரம்மச்சாரின்னு தெரியாதா?!

து. பவனேஸ்வரி said...

//இன்று..


ஊரெல்லாம் பௌர்ணமி..


எனக்கு மட்டும் அமாவாசை..!//

துவக்கமே அருமை. கவிதை வரிகள் அனைத்துமே நெஞ்சைத் தொடுகின்றன. சிறப்பித்துக் கூறுவதற்கு வார்த்தைக் கிடைக்காமல் தடுமாறுகின்றேன். அருமை அண்ணா... உங்கள் கவிதைக்கு நான் அடிமை.

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs